Published:Updated:

அஜித்தும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவும்! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12

அஜித்தும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவும்! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12
அஜித்தும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவும்! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12

அஜித்தும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவும்! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

ஆலுமா டோலுமாவுக்கு ஆடும் அஜித் மகன், ஆப்ரேஷன் அன்றே டிஸ்சார்ஜ் ஆன அஜித், ‘விவேகம்’ ஸ்பெஷல் ஃபிட்னஸ், அஜித் பற்றி அக்ஷரா சொன்னவை... அஜித்தின் மீதி இரண்டு படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

56. ‘வேதாளம்’

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று பண்ணிய படம். மீண்டும் இயக்குநர் சிவா காம்பினேஷன். தவிர, முதல்முறையாக அனிருத் இணை. படத்தைக் கவனித்த ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும். இதில் அஜித்தை, ஸ்ருதிஹாசன்தான் காதலிப்பார். ஓர் இடத்தில்கூட, ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்’ என்று ஸ்ருதியிடம் அஜித் சொல்லியிருக்கவே மாட்டார். கடைசியில் திருமணமும் செய்துகொள்ள மாட்டார். பாடல் காட்சிகளில்கூட இவருக்கு முன்பாக ஸ்ருதி ஆடுவார். அஜித் அவர் பின்னால் நடந்து வருவாரே தவிர, இவர் ஆட மாட்டார். இப்படி இதில் அஜித் கையாண்டது எம்.ஜி.ஆர் ஃபார்முலா. 

‘வேதாளம்’ கேரக்டரின் கெட்டப் இவரைச் சுற்றியுள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. ‘ஐயய்யோ ரொம்ப மோசமா இருக்குங்க. ‘ரெட்’லயாவது சின்ன வயசு மொட்டையனா இருப்பீங்க. இதுல சால்ட் அண்ட் பெப்பர் மொட்டை. பயங்கரமா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இதில் கன்டென்ட்தான் ஹீரோ. கதை கன்வின்ஸிங்கா இருந்தா படம் நிச்சயம் ரீச் ஆகும். அப்ப ‘வேதாளம்’ கேரக்டரும் ரீச் ஆகும்’ என்றார். அப்படியேதான் நடந்தது. இப்படி, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார் அஜித். 

‘ஆலுமா... டோலுமா...’ பாடலுக்கு உலகளவில் பலர் ஆடுகிறார்கள். அஜித்தின் மகன் ஆத்விக்குக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்தப் பாடலுடன் அஜித்தின் மனதுக்கு நெருக்கமான உணர்வுபூர்வமான ஒரு சம்பவம் உண்டு. ‘வேதாளம்’ படம் 2015-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ரிலீஸ். இவர் சங்கம் தியேட்டருக்குப் பின்னால் உள்ள குமரன் மருத்துவமனையில் நவம்பர் 11-ம் தேதி ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ‘இன்னிக்கு நைட்டே ஆபரேஷன்’ எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே, சங்கம் தியேட்டரிலிருந்து வந்த ‘ஆலுமா... டோலுமா...’ பாடலுக்கு ரசிகர்களின் ஆரவாரத்தைக் கேட்கும்போது இவருக்கு ஒரு மாதிரி ஆகியிருக்கிறது. இரண்டு முட்டி, கழுத்தில் ஆபரேஷன். ஆனால், ஆபரேஷன் ஆன அன்றே டிஸ்சார்ஜ் ஆகணும் என்று பிடிவாதமாக இருந்து, அதேபோல டிஸ்சார்ஜும் ஆகிவிட்டார். 

57. ‘விவேகம்’

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அதே ‘வி’ சென்ட்டிமென்ட். ‘வீரம்’ கிராமத்துக் கதை என்றால், ‘வேதாளம்’ நகரத்துக் கதை. ஆனால் ‘விவேகம்’, இன்டர்நேஷனல். இந்தப் படத்தின் ஸ்பெஷலே அஜித்தின் ஃபிட்னஸ்தான். ‘என்னைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு என்னால் திரும்பச் செய்ய முடிஞ்சது இதுமட்டும்தான்’ என்பது அவரின் எண்ணம். ஆனால், ‘போன வாரம் வாங்கித் தந்த பேன்ட் ரெண்டு இன்ச் குறைஞ்சிடுச்சு சார்’ என்று ‘விவேகம்’ பட காஸ்ட்யூம் டிசைனர்தான் புலம்புகிறாராம். முதல்முறையாக காஜல் காம்பினேஷன். ‘ஹீரோஸ்ல முதல் ஜென்டில்மேன் அஜித்தான்’ என்று ‘வேதாளம்’ சமயம் புகழ்ந்த ஸ்ருதியைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் நடிக்கும் அவரின் தங்கை அக்‌ஷராஹாசனும் அதையே சொல்கிறாராம். ‘தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஆக்‌ஷன் வந்ததில்லை’ என்று சொல்வது மாதிரியான சண்டைக் காட்சிகளை ‘விவேகம்’ படத்தில் அஜித் பண்ணியிருக்கிறாராம்.

 57 படங்கள் பற்றி பார்த்தோம்.. AK58?

ஒரு படம் தயாராகி முதல் காப்பி பார்க்கும் வரையில் அடுத்த பட இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பதை  முடிவு பண்ண மாட்டார். வேறொரு இயக்குநரிடம் அடுத்த படத்துக்கு கமிட் ஆகிவிட்டால் தற்போது படம் பண்ணும் இயக்குநர் இன்செக்யூர்டாக ஃபீல் பண்ணுவார் என்பதால் அப்படி கமிட் பண்ண மாட்டார். கேட்டால், ‘என் பட இயக்குநர் அடுத்து வேறொரு நடிகருக்கு கதை சொல்லி ஒகே பண்ணிவிட்டால், நான் நடிப்பதை ‘இந்த காட்சியில் அந்த நடிகர் நடிச்சா எப்படி இருக்கும்’ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அதேபோல்தான் நானும். அதனால் ஒரு படம் முடியாமல் அடுத்த படம் அறிவிக்க மாட்டேன்’ என்பார்.

அதேபோல போன படத்து தயாரிப்பாளரோ, அடுத்தப்பட தயரிப்பாளரோ தற்போது ஷூட்டிங் நடக்கும் ஸ்பாட்டுக்கு வரக்கூடாது என்பதிலும் அஜித் உறுதியாக இருப்பார். ‘உங்கள்ட்ட அட்வான்ஸ் வாங்கிட்டா, ’பார்க்கணும்’னு நீங்க கேட்டால் ‘வரக்கூடாது’னு என்னால சொல்ல முடியாது. ‘வாங்க’னு சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அது எனக்கு பிடிக்காது. ஏன்னா இந்தப்பட தயாரிப்பாளர்தான் என் இப்போதைய முதலாளி. அந்த ஸ்பாட்டுக்கு நீங்க வர்றது, அவருக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். தேவையில்லாத அந்த டென்ஷன் வேண்டாமே’ என்று சிரிப்பார். அதனால்தான் ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். இதிலும் அஜித் தனி பாணிதான்! 

இந்தத்  தொடரை 12 நாட்களாக படித்து வந்த உங்களுக்காக, சில போனஸ் செய்திகளோடு நாளை.. இறுதிப்பகுதியில் சந்திப்போம்! 

-அஜித் அறிவோம்

அடுத்த கட்டுரைக்கு