Election bannerElection banner
Published:Updated:

‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல!’ - ரோஜா டிப்ஸ்

‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல!’ - ரோஜா டிப்ஸ்
‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல!’ - ரோஜா டிப்ஸ்

‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல!’ - ரோஜா டிப்ஸ்

லகலப்பான நடுவர்கள், பரபரப்பான பெற்றோர்கள், குறும்புக்கார குழந்தைகள் என்று காட்சியளிக்கும் ஜீ தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 2 மேடையில் குழந்தைகளுடன் செல்பி மழையில் நனைந்துகொண்டிருந்தார் நடிகை ரோஜா. குழந்தைகளோடு குழந்தையாக மாறிப்போன அவரிடம் பேசினோம். 

“நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்து இப்போ நடுவரா என்ட்ரி கொடுத்துருக்கீங்களே..?” 

“ஆமாங்க. ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'ஜீன்ஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். இப்போ, அதே சேனலில் குழந்தைகள் நிகழ்ச்சியின் நடுவர். எனக்குக் குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். அதனால், கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன்.” 

“குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவரா இருக்கும் அனுபவம் எப்படி இருக்கு?” 

“வளர்ந்துட்டாலும் நானே குழந்தை மாதிரிதான். அதனால், இந்த நிகழ்ச்சியை ரொம்பவே சந்தோஷமா என்ஜாய் பண்றேன். அரசியல், குடும்பம் என பரபரப்புகளுக்கு மத்தியில் இந்தக் குழந்தைகள் எல்லாத்தையும் மறக்கவெச்சுடுறாங்க. இந்த மாதிரி ஒரு மேடை எங்க காலத்தில் கிடைக்கலை. இந்தக் குழந்தைங்க எல்லாரும் ரொம்பவே திறமைசாலிங்க. ஒவ்வொரு குழந்தையும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைக் கத்துக்கொடுத்துட்டு இருக்காங்க. இவங்களோட இருக்குறதே மனசுக்கு தெம்பு கொடுக்குது.”

“ஏன் சினிமா வாய்ப்புகளை தவிர்க்கிறீங்க?” 

“அரசியலில் இருக்குறதுனால எனக்குக் கட்சி மீட்டிங் இருந்துட்டே இருக்கும். படத்தில் கமிட் ஆகிட்டா அவசர பொதுக்குழு கூட்டங்களுக்குப் போக முடியாது. அதனால், நடிக்கிறதை அவாய்டு பண்றேன்.”

“உங்களுடைய டிரெஸ்லாம் நீங்களே டிசைன் பண்றீங்களாமே?” 

“ஆரம்ப காலத்துல இருந்தே என்னோட டிரஸ், ஜுவல்லரி எல்லாத்தையும் நான்தான் டிசைன் பண்ணுவேன். தாவணியா இருந்தாலும் அதிலும் சின்னதா டிசைன் பண்ணிடுவேன். அப்பத்தான் எனக்கு முழு திருப்தியா இருக்கும். அதனால்தான் நான் அணிந்துவந்த டிசைன் ஆடைகளை மக்கள் இப்பவும் விரும்புறாங்க.” 

“செல்வா - ரோஜா லவ் ஸ்டோரி பற்றி...?”

“1991-ம் ஆண்டு 'செம்பருத்தி' படத்தின் சூட்டிங். அந்தப் படத்தில் கிளாமரா ஒரு சீன் இருந்துச்சு. நான் கிராமத்துப் பின்ணனியிலிருந்து வந்த பொண்ணு. அந்த டிரஸ்ஸைப் பார்த்ததும் அழுதுட்டேன். செல்வாவுக்கு தெலுங்கு தெரியாது. எனக்குத் தமிழ் தெரியாது. தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு பாஷையில் செல்வா என்னைச் சமாதானம் பண்ணாரு. அப்போதான் எனக்கு அவர் மேல நம்பிக்கை வந்துச்சு. அதுக்கு அப்புறமா அவர் அந்த சீனையே மாத்திட்டார். அதனால், அவர்கிட்ட அதிகம் பேச ஆரம்பிச்சேன். என் அண்ணன்கள் மேல நான் வெச்சிருக்கும் அன்பு, என் குழந்தைத்தனம் எல்லாம் அவருக்குப் பிடிச்சுபோச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டார். அம்மா, அண்ணன்களிடமும் பேசி ஓகே வாங்கிட்டார். என் பிறந்தநாளில் நான் வேறொரு சூட்டிங்ல இருந்தேன். அங்கே வந்து எனக்கு லவ் புரொப்போஸ் பண்ணிட்டு ஒரு கிஃப்ட் கொடுத்தார். அதுல ஆர்கேஎஸ்னு பெயர் போட்ட ஒரு நெக்லஸ் இருந்துச்சு. இப்போ, எங்களுக்குக் கல்யாணமாகி பதினஞ்சு வருஷம் ஆகிடுச்சு. எங்க பொண்ணு அஞ்சு மாலிகா எட்டாவது படிக்கிறார். பையன் கிருஷ்ண கெளசிக் ஐந்தாவது படிக்கிறார்.” 

“உங்க பொண்ணு நடிக்க வருவாங்களா?”

“எனக்கும் செல்வாவுக்கும் அவங்க நடிக்க வர்றதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, அவங்களுக்குச் சினிமாவில் ஆர்வம் இல்லை. அவங்களுக்கு சயின்டிஸ்ட் கனவு இருக்கு. அவங்க விருப்பம்தான் எங்க விருப்பமும்.” 

“நீங்க டிராவல் பண்ணும்போது நிறைய பொருள்கள் தொலைச்சிருக்கீங்களாமே?” 

“ரயில்ல போகும்போதுதான் பெரும்பாலும் தொலைச்சிருக்கேன். நான் தூங்கிட்டு இருக்கும்போது யாராச்சும் திருடிட்டுப் போய்டுவாங்க. அப்பவும் செல்வா டென்ஷனே ஆகமாட்டார். ‘சரி விடு பாத்துக்கலாம்’னு சொல்லுவார். நான்தான் வருத்தப்பட்டுட்டு இருப்பேன்.” 

“ஒரு நிகழ்ச்சியில், ‘பொண்டாட்டிகிட்ட தோத்துட்டா வாழ்க்கையில் ஜெயிச்சிடலாம்’னு செல்வா சார் சொன்னாரே?” 

“அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும்போது நான் அப்படியே தலைகுனிந்து சிரிச்சிட்டே உட்கார்ந்திருந்தேன். லதா மேம், ரஜினி சார் கையை இடிச்சு ‘பாருங்க... பாருங்க’னு சொன்னாங்க. உண்மைதான். வீட்ல நான் ரொம்பவே கோபக்காரி. செல்வா மேல நான் எவ்வளவு கோபப்பட்டாலும் அவர் பொறுமையா இருப்பார். பொண்ணுங்களுக்கு அவங்க குடும்பம்தான் உலகம். அதனால், பொண்ணுங்ககிட்ட கணவர்கள் தோற்றுப்போவதில் தப்பே இல்லை.” 

“ரஜினி சார் அரசியலுக்கு வருவார்னு சொல்றதை நீங்க எப்படி பார்க்கறீங்க?” 

“அரசியலுக்கு வரலாமா வேண்டாமானு ரொம்ப நாளா குழப்பத்திலேயே இருக்கிறதுக்கு வந்துட்டாருனா நல்லா இருக்கும். அப்படி வந்தாலும் பாதிலேயே போயிடாமல், எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி சாதனை செஞ்சு மக்களுக்கு சேவை செய்யணும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்.”

“மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு விபத்தில் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்ற மீட்டிங்கையே கேன்சல் செய்ததாக ஒரு செய்தி?”

“ஆமாம். போகும் வழியில ஒரு பொண்ணு அடிபட்டு கிடந்தாங்க. உடனே என்னோட காரில் ஏற்றிக்கோன்டு பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திக்குப் போனேன். அங்கே முதலுதவி கொடுத்துட்டு 108-க்கு கால் பண்ணி வேற ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சேன். அதனால், அந்த மீட்டிங்கில் கலந்துக்க முடியாமல் போய்டுச்சு. இதை நான் ஒரு அரசியல்வாதியாவோ, நடிகையாவோ பண்ணலை. மனிதநேயம் உள்ள எல்லோரும் செய்யறதுதான். அதைத்தான் நானும் செஞ்சேன்.” என்கிறார் நடிகை ரோஜா அவரது ட்ரேட் மார்க் சிரிப்போடு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு