Published:Updated:

ரஜினியும் விஜய்யும் சேர்ந்து நடிச்ச படம் என்னன்னு தெரியுமா..?!

ஜெ.வி.பிரவீன்குமார்
ரஜினியும் விஜய்யும் சேர்ந்து நடிச்ச படம் என்னன்னு தெரியுமா..?!
ரஜினியும் விஜய்யும் சேர்ந்து நடிச்ச படம் என்னன்னு தெரியுமா..?!

"இன்னைக்கு அன்னையர்தினம் இல்ல!?" -  "இல்லை. அதனால என்ன?"ங்கிற மாதிரி விஜய்க்கு பிறந்தநாள்னாதான் விஜய் பத்தி பேசணுமா என்ன. எப்போ வேணாலும் பேசலாம்தானே. சரி விசயத்துக்கு வருவோம். மல்டி ஹீரோஸ் படங்கள் எடுக்குறது இப்போ ட்ரெண்டிங்கில் இருக்குது. அந்த வகையில் விஜய் எந்தெந்த ஹீரோக்கள் கூடவெல்லாம் நடிச்சிருக்கார்னு பார்க்கலாமா...

சிவாஜி : சிலபேருக்கு மட்டும்தான் நடிக்கிறதுக்குனே படைக்கப்பட்ட 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன் கூட  நடிக்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு. அந்த லிஸ்ட்டில் விஜய்யும் ஒருத்தர்.  அப்படி இரண்டு பேரும் சேர்ந்து நடிச்ச ஒரே படம் `ஒன்ஸ்மோர்'. `ஒன்ஸ்மோர்'னு பெயர் வெச்சதாலேயோ என்னவோ அதுக்கப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

ரஜினி: இது பலபேருக்குத் தெரியாத விசயம். ஆமாங்க... `சூப்பர் ஸ்டார்' ரஜினி நடிச்ச ஒரு படத்துல குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கார் `இளைய தளபதி' விஜய். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் டைட்டில் கார்டை பார்த்தீங்கன்னா தெரியும். அந்தப் படத்துல ரஜினி பெயரே `விஜய்' தான். அதில் பாக்யராஜும் நடிச்சிருக்கார்ங்கிறது உபரித்தகவல்.

விஜயகாந்த்: விஜய்யோடகேரியர்ல அதிகமான தொடர்புடையவர்னா அது விஜயகாந்த் தான். விஜய்காந்த் நடிச்ச பல படங்களில் அவரோட சின்னவயசு கேரக்டர்ல நடிச்சது விஜய்தான். வளர்ந்ததுக்கு அப்புறம் செந்தூரப்பாண்டியில ரெண்டுபேரும் சேர்ந்தே நடிச்சிருப்பாங்க.

மோகன்லால் : மலையாளக்கரையோரம் இன்னைக்கு வரைக்கும் இளைஞர்களோடு மல்லுக்கட்டி நிற்கும் மல்லுவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருத்தர் மோகன்லால். `சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா...'னு அவரும்  'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சுருக்காப்டி. திராவிட நாடு கோரிக்கையை அப்போவே சொல்றதுக்காகவோ என்னவோ, மதுரைக் கதைக்களத்துல வந்து மலையாளத்தமிழ் பேசி நடிச்சிருப்பார் மோகன்லால். கிர்ர்ர்ர்...

அஜித்: இதைச் சொல்லலைனா எப்படி... தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக, தல மற்றும் தளபதினு வெகுஜன ரசிகர்களால் கொண்டாடப்படுகிற விஜய்யும் அஜீத்தும் 'ராஜாவின் பார்வையிலே'ங்கிற படத்துல சேர்ந்து நடிச்சுருக்காங்க. பிற்காலத்துல ரெண்டு பேரும் இந்த உயரத்துக்கு வருவாங்கன்னு, அந்தப் படம் நடிக்கும் போது அவங்களே நினைச்சுருப்பாங்களானு சத்தியமா தெரியலை.

சூர்யா: இதை சொல்லியே ஆகணும். ஏன்னா இவரு கூட சேர்ந்து இரண்டு படம் நடிச்சிருக்கார் `இளைய தளபதி'. வசந்த் இயக்கிய 'நேருக்குநேர்' மற்றும் சித்திக் இயக்கிய  'ஃப்ரண்ட்ஸ்' படங்களில் தான் இந்த அற்புதம் நிகழ்ந்துச்சு. ``சிவக்குமாரோட பையன் சூர்யா"னு அடையாளம் சொல்லுற லெவலில்தான் `ஃப்ரண்ட்ஸ்' படம் ரிலீஸான சமயத்தில் சூர்யாவின் நிலை இருந்தது. ஆனால்,  இப்போ அவருடைய இடமும் வேற லெவல்.

சத்யராஜ், பிரபு : பிரபுவுடன் சேர்ந்து 'புலி' படத்தில் நடிச்சிருப்பார் விஜய். பயங்கரமான ஃபேன்டசி படம்னு எதிர்பாத்துதான்  போனாங்க. ஆனால், ரிசல்ட்தான்  `டோராவையும், சோட்டா பீமையும் மிக்ஸ் பண்ணி எடுத்துருக்காங்கப்பூ...'னு வந்துச்சு. சத்யராஜ் உடன் இணைந்து இரண்டு படங்கள் பண்ணியிருக்கார். 'நண்பன்' மற்றும் `தலைவா'. `நண்பன்' படத்தில் சத்யராஜ் மட்டுமல்ல, ஜீவா, ஶ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யானு ஏகப்பட்ட ஹீரோக்களை பார்க்கலாம்.

அக்‌ஷய் குமார்: தமிழ்ல மட்டுமே நடிச்சிருக்க விஜய்,  ஹிந்தியில ஒரே ஒரு பாட்டுல மட்டும் அக்‌ஷய் குமாரோடு ஆட்டம் போட்டிருக்கார். பிரபுதேவா இயக்கத்துல அக்‌ஷய்குமார் நடிச்ச 'ரவுடி ரத்தோர்'  படத்துலதான் அந்தப் பாட்டு. ஓப்பனிங் சாங்கில்  ஆடக் கூப்பிட்டதோட இல்லாம விஜய்யை ''அங்கே பாருங்க  சூப்பர் ஸ்டார் விஜய்''னு கூப்பிடுவார் அக்‌ஷய் குமார். ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா...

பிரபுதேவா,லாரன்ஸ் :  'திருமலை' படத்தில் லாரன்ஸ் கூடவும்,`போக்கிரி' மற்றும் `வில்லு' படங்களில் பிரபுதேவா கூடவும் சேர்ந்து ஆடியிருப்பார் விஜய். தாம்தக்க தீம்தக்க...

அடுத்தமுறை இதுபோல மல்டி ஹீரோக்களோட நடிச்ச வேறவேற  ஹீரோக்களையும், படங்களையும் பார்க்கலாம் மக்களே...