Published:Updated:

:சரத்குமார், ராதாரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

:சரத்குமார், ராதாரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
:சரத்குமார், ராதாரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
:சரத்குமார், ராதாரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை: சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை  குத்தகைக்கு விட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சரத்குமார், ராதாரவிக்கு  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான பூச்சி முருகன், காஜா  மொகிதீன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான இடம்  தொடர்பான பொது அதிகாரத்தை,அதன் அறங்காவலர்களில் ஒருவரான ராதாரவி,  நிர்வாக அறங்காவலரான சரத்குமாருக்கு வழங்கியுள்ளார்.மேலும்,அந்த இடத்தை  சரத்குமாருக்கு குத்தகைக்கு வழங்கும் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் முறையான அனுமதி பெறாமல்,அவர்கள் இருவரும்  தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர்.ஆகவே, அவர்களின் இந்த நடவடிக்கை செல்லாது  என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர். சுப்பையா, இது தொடர்பாக ஒரு  வாரத்துக்குள் பதிலளிக்கும்படி ராதாரவி, சரத்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டார்.