Published:Updated:

''விஜயகாந்த் நினைவாற்றல் என்னை வியக்கவைத்தது!'' - ஆச்சரிய தேனப்பன்

''விஜயகாந்த் நினைவாற்றல் என்னை வியக்கவைத்தது!'' - ஆச்சரிய தேனப்பன்
News
''விஜயகாந்த் நினைவாற்றல் என்னை வியக்கவைத்தது!'' - ஆச்சரிய தேனப்பன்

''விஜயகாந்த் நினைவாற்றல் என்னை வியக்கவைத்தது!'' - ஆச்சரிய தேனப்பன்

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தற்போது நடித்துவரும் படம் ‘மதுர வீரன்’. இதன் இயக்குநர் பி.ஜி.முத்தையாவை, கோடம்பாக்கமே ஆச்சர்யமாகப் பார்க்கிறது. படப்பிடிப்புக்காக தன் குழுவுடன் உசிலம்பட்டிக்குச் சென்றவர், 18 நாள்களிலேயே மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்த கட்டமாக எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகளில் தீவிரம் காட்டிவருகிறார். 

‘காதலா... காதலா...’ `பஞ்சதந்திரம்’ ‘வல்லவன்’ போன்ற படங்களைத் தயாரித்தவர் தேனப்பன். தற்போது மம்மூட்டி நடித்துவரும் நேரடித் தமிழ்ப் படமான ‘பேரன்பு’ என்ற படத்தைத் தயாரித்துவருகிறார். இவர், ஏற்கெனவே ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தில் பிரதான வில்லனாக நடித்துள்ளார். தற்போது ‘மதுர வீரன்’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் தன் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

‘மதுர வீரன்’ படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டபோது அவர் முகத்தில் அத்தனை பிரகாசம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘விஜயகாந்த் சார் மகன் நடிக்கும் ‘மதுர வீரன்’ படத்தில் வில்லனாக நடிப்பதற்காக, உசிலம்பட்டிக்குச் சென்றேன். தொடர்ந்து 18 நாள்கள் அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். நான் உயர்ந்த நட்சத்திரங்களை வைத்து எத்தனையோ திரைப்படங்களைத் தயாரித்துள்ளேன். ஒரு படத்துக்குக்கூட இத்தனை நாள்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்ததே கிடையாது. டைரக்டர் பி.ஜி.முத்தையாவைப்போல படப்பிடிப்பை வேகமாக நடத்தி பார்த்ததே இல்லை. பிரமாண்ட செலவில் 100 காளைகளை வைத்து வாடிவாசல் பகுதியில் அசத்தலாகப் படம்பிடித்துள்ளார்.

பெரும்பாலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே படப்பிடிப்பு நடந்ததால், ஷூட்டிங் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதின. ஒருநாள், நான் நீளமான வசனத்தைப் பேசி நடிக்கும் காட்சியைப் படம்பிடிக்க டைரக்டர் திட்டமிட்டிருந்தார். அப்போது திடீரென பிற்பகல் 2 மணிக்கு கேப்டன் விஜயகாந்த் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து, சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தார். பொதுமக்கள், அவரைப் பார்க்க ஆர்வத்துடன் குவிந்தனர். தனக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் என்னை இழுத்து அமரவைத்துக்கொண்டார். நான் நடிக்கும் காட்சியைக் கேட்டார். என் கையில் இருந்த நீளமான வசன  பேப்பரை வாங்கிப் படித்துப் பார்த்தார். 

டைரக்டர், கேமரா, சினிமா யூனிட்டைப் பார்த்ததும் கேப்டன்  குஷியாகிவிட்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வசனத்தை என்னால் பேச இயலவில்லை. டேக் போவதற்கு முன்பு நான் விஜயகாந்த் சார் அருகில் அமர்ந்தேன். நான் பேசவேண்டிய பெரிய டயலாக்கை என் கையில் இருந்த பேப்பரைப் பார்க்காமல் ஒரு வரிகூட மாறாமல் கடகடவென பேசினார். விஜயகாந்த் சாரின் நினைவாற்றலைக் கண்டு வியந்துபோனேன். மதியம் 2 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்தவர், 4:30 மணி வரை இருந்து ஷூட்டிங்கைப் பார்த்தார். விஜயகாந்த் சார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி ‘மதுர வீரன்’ ரிலீஸாகிறது’’ என்று விளக்கினார்.