Published:Updated:

கார்த்திக் - ஷக்தி முதல் ராம் - ஜனனி வரை... இவர்களின் கெமிஸ்ட்ரியை மறக்க முடியுமா?

நமது நிருபர்
கார்த்திக் - ஷக்தி முதல் ராம் - ஜனனி வரை... இவர்களின் கெமிஸ்ட்ரியை மறக்க முடியுமா?
கார்த்திக் - ஷக்தி முதல் ராம் - ஜனனி வரை... இவர்களின் கெமிஸ்ட்ரியை மறக்க முடியுமா?

காதல்தான் தமிழ் சினிமாவின் பிரதானம் என்றாலும், எல்லா காதல் படங்களும் வெற்றி அடைவதில்லை. வெற்றி அடைந்த அனைத்து படங்களிலும் கிளாசிக் காட்சிகள் இருப்பதில்லை. கிளாசிக் காட்சிகளுடன் நடிகர் - நடிகை கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆன படங்கள் சொற்பம். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சில ஜோடிகளின் கெமிஸ்ட்ரி பற்றிய ஓர் அலசல்...

குஷி  (ஷிவா - ஜெனி):

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். ஈகோ, ஊடல் எனக் காதலை வேறு ஒரு கோணத்தில் சொல்லி, இளைஞர்களின் லைக்ஸைக் குவித்தது. விஜய் மற்றும் ஜோதிகா இருவருமே சற்று ஓவர் ஆக்ட் செய்திருந்தாலும் ஸ்க்ரீனில் பார்க்கும்போது அவ்ளோ க்யூட். `நீ இடுப்ப பாத்தியா... இல்லையா?' `நீ என்ன லவ் பண்ணியா... இல்லையா?' என பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான வசனங்களையும், இந்த ஜோடியையும் எளிதில் மறந்துவிட முடியுமா?

அலைபாயுதே (கார்த்திக் - ஷக்தி):

ஒரு டாக்டர், ஒரு இன்ஜினீயர், வீட்டுக்குத் தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் என இளைஞர்களின் பல்ஸ் புரிந்து மணிரத்னம் இயக்கிய எவர்கிரீன் படம். மேடி, ஷாலினி-யின் ஐசிங் ரொமான்ஸை ரசிக்காதவர்களே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக நெக்ஸ்ட் டோர் கேர்ள், நெக்ஸ்ட் டோர் பாய் என்னும் இமேஜை ஷாலினி - மாதவன் பெற்றிருந்ததே `அலைபாயுதே' ஜோடியின் கெமிஸ்ட்ரி ரகசியம்.

ஆய்த எழுத்து (அர்ஜுன் - மீரா):

வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞன், மாப்பிள்ளை பார்த்து திருமதி ஆக விரும்பும் காலேஜ் கேர்ள். இவர்கள் இருவரின் முதல் மீட் பப்பில்... எனக் காதலின் பரிணாமத்தை அழகாக, இளமையின் துள்ளல் சற்றும் குறையாமல் சொன்னதுதான் மணிரத்னம் மேஜிக். `ஹேய் குட்பை நண்பா!' எனத் தங்களின் நட்பு, காதலாக மாரும் தருணத்தில், சித்தார்த் - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி நம்மைச் சிலிர்க்கவைத்ததை யாரும் மறக்க முடியாது.

சில்லுனு ஒரு காதல் (கௌதம் - குந்தவி):

கட்டாயத் திருமணத்தின் கீழ் ஒன்று சேரும் ஜோடி, காதல், காமம், ஆட்டம், பாட்டம் என கம்ப்ளீட் பேக்கேஜ். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்போதுமே வேற லெவல் என்பது ஊர் அறிந்த ஒன்று. கொஞ்சிக் கொஞ்சி சண்டைபோடுவதும், வீக் எண்ட் இரவைக் குடும்பத்துடன் குதூகலமாகக் கழிப்பதும், தன் கணவனின் முதல் காதலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் காதலைப் பரிமாறிக்கொள்வதும் என அனைத்து காட்சிகளிலும் சூர்யா-ஜோ செம லைவ்லி பெர்ஃபாமன்ஸ்.

விண்ணைத்தாண்டி வருவாயா (கார்த்திக், ஜெஸ்சி):

லவ் அட் ஃப்ர்ஸ்ட் சைட். சிம்பிள் க்ளாஸ் காதல் கதை. `உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் உன்னை லவ் பண்ணேன்?' என வசனங்கள் அனைத்தும் செம. காதலனின் காதலை முழுமனதோடு ஏற்க முடியாமல், காதலையும் விட்டுக்கொடுக்க முடியாமல் இரண்டுக்குமான நூலிழையில் ஜெஸ்சியின் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் த்ரிஷா. வாழ்க்கையின் போராட்டத்தில் என் காதலும் முக்கியம் எனக் காதலையும் காதலியையும் இந்த கார்த்திக் அளவுக்கு யாராலும் கொண்டாடமுடியாது. இறுதியில் காதலர்கள் ஒன்றுசேரவில்லை என்றாலும் சிம்பு - த்ரிஷாவின் ரிலேட்டபிள் கெமிஸ்ட்ரிதான் விடிவி-யின் வெற்றி.

மூணு  (ராம் - ஜனனி):

பள்ளிக்கூடக் காதல், ஃபர்ஸ்ட் லவ் - பெஸ்ட் லவ் எனத் தங்களின் உறவைத் திருமணம் வரை கொண்டு சென்ற ஐடியல் ஜோடி. முதல் பார்வை, முதல் முத்தம், முதல் சண்டை என ஜனனி - ராமின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் செம ரொமான்டிக். இந்தப் படத்தின் ஹைலைட், கணவன் இறந்த பிறகு அவனின் நினைவுகளோடு ஜனனி தவிக்கும் வேளைகளிலும் துக்கம், காதல் என இரண்டுமே சரிசமமாகக் காட்சியாக்கப்பட்டதுதான். ராம்-ஜனனி காதல் ரொம்பவே ஸ்பெஷல்.

                                     - எஸ்.எம்.கோமதி