Published:Updated:

தமிழ் அல்லாத, இந்த 5 பாடல்களும் இசைஞர்களின் ஃபேவரைட்! #NonTamilHits

நமது நிருபர்
தமிழ் அல்லாத, இந்த 5 பாடல்களும் இசைஞர்களின் ஃபேவரைட்! #NonTamilHits
தமிழ் அல்லாத, இந்த 5 பாடல்களும் இசைஞர்களின் ஃபேவரைட்! #NonTamilHits

வையெல்லாம் தமிழ்ப் பாடல்கள் அல்ல. ஆனால், இந்தப் பாடல்கள், இன்றைய இளைஞர்களின் ப்ளேலிஸ்டில், பெரும்பாலும் இடம்பிடித்தவை.

தமிழ்நாட்டு மக்கள், சினிமா ஆர்வம் மிகுந்தவர்கள். நான்கு குத்துப்பாடல்கள், நான்கு சண்டைக்காட்சிகள் என எந்த அளவுக்கு கமர்ஷியல் படங்களை ரசிக்கிறோமோ, அதே அளவுக்கு அறம் சார்ந்த நல்ல கருத்துகளைச் சொல்லும் படங்களுக்கும் ஹிட் அங்கீகாரம் கொடுத்துதான் தமிழ்நாட்டு மக்கள் பழக்கம்.

ஒரு படம் ஹிட் ஆவதற்கு கதை, ஹீரோ போலவே படத்தின் பாடல்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கு. படத்தை ரசிப்பதிலும் சரி, பாடல்களை ரசிப்பதிலும் சரி, தமிழ்நாட்டு மக்கள் ஒருபடி மேல்தான். அப்படி தமிழ்ப் பாடல்கள் அல்லாமல் தமிழ்நாட்டில் ஹிட் அடித்த பாடல்களைப் பார்க்கலாமா...?

1.மலரே (பிரேமம் - மலையாளம்):

2015-ம் ஆண்டில் மல்லுவுட்டில் வெளியான திரைப்படம் ஆல் தமிழ்நாடு, ஆந்திரா என சவுத் இந்தியன் பிளாக் பஸ்டராக மாறியது மிகப்பெரிய ஆச்சர்யம். ஒரு காலேஜ், அங்கே லாஸ்ட் பெஞ்ச் ரோமியோவுக்கும் புரொஃபசருக்கும் காதல். கொஞ்சம் பிசகினாலும் ஹாட்டாக மாறிவிடக்கூடும் டிராக்கில் மிக அழகாக, எளிமையாக ஜார்ஜ் மற்றும் மலர் கதாபாத்திரங்களுக்கிடையேயான காதல் காட்சிகளைக்கொண்டு படமாக்கப்பட்ட இந்தப் பாடல், யூத்களின் ப்ளேலிஸ்ட்டில் வெகுவிரைவாக இடம்பிடித்தது. பாடலின் நடுவில் மலர்-ஜார்ஜ் இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் கொஞ்சும் தமிழில் செம க்யூட்.

மலையாளமாக இருந்தாலும் பரவாயில்லை என `மலரே... நின்னே காணாதிருந்தால்...'னு இளைஞர்கள் பாடலைப் பாடக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். ராஜேஷ் முருகேஷன் இசையில் இந்தப் படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களுமே ஹிட் ரகம்தான்.

2. தும் ஹி ஹோ (ஆஷிகி 2 - ஹிந்தி):

2013-ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் அடித்தளம், காதலும் இசையும்தான். இசை மற்றும் இசைக்கலைஞர்களைப் பற்றிய படம் என்பதால், பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். தான் பாடகியாகி சாதிக்க வேண்டும் என நினைத்த காதலன், குடிபழக்கத்துக்கு  அடிமையாகி இருப்பதால் அவளை காதலித்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்து, அவள் காதலைச் சொல்லும்போது அவளிடம் மறுத்து அதற்காகக்  கோபப்படுவதும், ஒருகட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்வதுமாக மழையில் அமைக்கப்பட்டிருக்கும் பாடலின் காட்சிகளும், மயக்கும் மெலடியாகப் பாடலின் இசையும் பார்க்கவும் கேட்கவும், செம ரொமான்டிக்.

பாடல் வெளிவந்தது முதல் இதுவரை ஆயிரக்கணக்கானோரின் காலர் ட்யூனாகவும் இருக்கிறது  `தும் ஹி ஹோ'.

3. ஷேப் ஆஃப் யூ (இங்கிலிஷ்):

தமிழ்நாட்டில் ஆங்கிலப் படங்களுக்கும் பாடல்களுக்கும் ஒரு பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருப்பது உண்மைதான். ஆனால், இந்த வட்டத்தைத் தாண்டி `டைட்டானிக்' படத்தின் பாடலுக்குப் பிறகு மெஜாரிட்டி தமிழ் யூத்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது எட் ஷீரன் எனும் இண்டிபெண்டன்ட் இசைக்கலைஞர் இசையமைத்த பாடல். யூடியூப் முழுக்க பயங்கர வைரலாக ஹிட் அடித்து தெலுங்கு, இந்தி எனப் பல கவர் வெர்ஷன்களும் வெளிவந்துள்ளன. காதலியின் நினைவுகளால் தவிக்கும் ஓர் இளைஞன் பாடுவதுபோல் அமைந்துள்ளது இந்தப் பாடல்.

4. ஓய் மேகம்லா (மஞ்சு - தெலுங்கு):

2016-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், வழக்கமான குடும்பச் சூழல், கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி என ஃபேமிலி என்டர்டெய்னரான இந்தப் படத்தின் ஹீரோ நானி, ஒரு காலேஜ் லெக்சரர். ஹீரோயின் அனு இமானுவேல், அவரின் ஸ்டூடன்ட். தன் காதலைச் சொல்ல காதலியை ஒருநாள் அவுட்டிங் அழைப்பார் நானி. செல்ல ஆசை இருந்தாலும் வழக்கம்போல் அடம்பிடிப்பார் அனு. ஒருவழியாக  அவரை சமாதானம் செய்து, பைக்கில் அழைத்துச் செல்லும்போது வரும் இந்த அழகான மெலடி பாடல்,  கோபிசுந்தர் இசை. இந்தப் பாடலின் விஷுவல்கள் இயற்கைப் பின்னணியில் ரம்மியமாகக் காட்டியிருப்பது, பாடலுக்கு மேலும் அழகு.

5. காலா சஷ்மா (பார் பார் தேகோ - இந்தி):

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கத்ரீனா கயிப் சேர்ந்து நடித்த படமான `பார் பார் தேகோ'வில் இடம்பெறும் `டேசி வெட்டிங் கம் பார்ட்டி' பாடல்தான் 'காலா சஷ்மா'.

பொதுவாக, கல்யாணப் பாடல்கள் பாலிவுட்டில் நிறைய உண்டு. ஆனால், அனைத்தையும் தாண்டி காலா சஷ்மா ஹிட். அதன் ஃபாஸ்ட் ட்யூனும் பாடலில் வரும் கூலான அதே சமயம் எளிதான நடன அமைப்புகளும்தான், தமிழ் கல்யாண வீடுகளிலும் பார்ட்டிகளிலும் டி.ஜே லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெற காரணம்.

எஸ்.எம்.கோமதி

(மாணவ பத்திரிகையாளர்)