Published:Updated:

பிரபுதேவாவின் புதிய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!

சனா
பிரபுதேவாவின் புதிய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!
பிரபுதேவாவின் புதிய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!

'யங் மங் சங்' மற்றும் 'குலேபகாவலி' திரைப்படங்களில் பிஸியாக நடித்துவரும் பிரபுதேவா, விஷால் மற்றும் கார்த்தியை வைத்து 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தை இயக்கிவருகிறார்.

பிரபுதேவாவை வைத்து 'நினைவிருக்கும் வரை', 'ஏழையின் சிரிப்பிலே' போன்ற படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் சுபாஷின் கதைதான்,  'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா'. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை சுபா எழுதுகிறார். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படத்தின் அப்டேட்ஸ் பற்றி பிரபுதேவா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் அந்த அப்டேட்ஸ். லண்டனில்தான் இந்தப் படத்தின் கம்போஸிங் வேலை நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். தயாரிப்பாளர் கே.கணேஷுடன் இந்தப் படத்தைப் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்.