Published:Updated:

அந்தமானில் படமாக்கப்படும் விஜய்சேதுபதி திரைப்படம் !

அந்தமானில் படமாக்கப்படும் விஜய்சேதுபதி திரைப்படம் !
அந்தமானில் படமாக்கப்படும் விஜய்சேதுபதி திரைப்படம் !

புஷ்கர் காயத்ரி, பன்னீர் செல்வம், தியாகராஜன் குமாரராஜா, ஆறுமுக குமார் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி லிஸ்டில் அடுத்த இயக்குநராக சி.பிரேம் குமார் சேர்ந்துள்ளார். இவர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கும் '96' படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 96ஆம் வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. 

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு அந்தமான், கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. ஆக்‌ஷன் கலந்த காமெடி படமான இதில் காளி வெங்கட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.