Published:Updated:

நிச்சயம் காதல் திருமணம்தான்.. ஆனா பொண்ணு..!" - கௌதம் கார்த்திக்

நிச்சயம் காதல் திருமணம்தான்.. ஆனா பொண்ணு..!" - கௌதம் கார்த்திக்
நிச்சயம் காதல் திருமணம்தான்.. ஆனா பொண்ணு..!" - கௌதம் கார்த்திக்

“சினிமாவுக்கு வந்த புதுசுல யார்கிட்டயும் ரொம்ப பேசமாட்டேன்.  அதனால நிறைய தொடர்புகளை இழந்துட்டேன். சினிமா சார்ந்து நிறைய பேசணும்னு நினைப்பேன். ஆனா அதுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி நமக்குள்ள வேணும்னு காத்துக்கிட்டு இருந்தேன். அந்த பாசிட்டிவ் எனர்ஜிதான் ‘ரங்கூன்’ ’’ - நம்பிக்கையுடன் பேசுகிறார் கெளதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் ‘ரங்கூன்’ இவரை லைம் லைட்டில் மிளிரவைத்திருக்கிறது. 

"நீங்க நடிச்ச பத்து படங்களில் 5 ரிலீஸாகிடுச்சு, இதிலிருந்து நீங்க கத்துக்கிட்ட பாடம்?"

" ‘கம்யூனிகேஷன் கேப்’ என்னிடம் இருக்குற மிகப்பெரிய பிரச்னை. அதிகமா யாரிடமும் பேசுறதும் இல்லை. என்னோட படங்கள் பத்தி மத்தவங்ககிட்ட கலந்துபேசாம, நானே முடிவெடுத்துடுவேன். அதுமட்டுமில்லாம இங்கிலீஷ் படங்கள் பார்க்குற பையன் தமிழ் சினிமாவில் சாதிக்கமுடியாதுனு தெரிஞ்சுக்கிட்டேன். அதுனால நிறைய தமிழ் படங்கள் பார்க்கணும்னு முடிவெடுத்திருக்கேன்." 

"தாமதமாகத்தான் எங்கயும் போறீங்களாமே?"

"என்னைப் பத்தி நிறைய செய்திகள், கிசுக்கிசுக்கள் வெளிவந்திருக்கு. எப்படி வந்ததுன்னு தெரியலை. சுத்தி நடக்குற செய்திகளை கவனிச்சதும் இல்லை. ‘ஷுட்டிங்கிற்கு லேட்டா வந்துட்டு இப்படி ஆட்டிட்ட்யூட் காட்டுனா எப்படி படம் பண்ண முடியும்’னு என்னோட தயாரிப்பாளர்கள் கேட்டிருக்காங்க. இப்போதான் அதை நினைச்சி ஃபீல் பண்றேன். தெரிஞ்சு எங்கயும் லேட்டா போறதில்லை. நடிப்புக்கு உண்மையா தான் இருக்கேன்."

"உங்களுக்கான கதையை யார் கேட்டு முடிவு செய்றாங்க?"

" ‘முத்துராமலிங்கம்’ வரை எனக்கான கதையை நான்தான் கேட்டு முடிவு செய்வேன். இதுவே அப்பா கதை கேட்டிருந்தா இவ்வளவு அடிபட்டிருக்க மாட்டேன். நானே தப்பு பண்ணிட்டு இப்போ சரி பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய சினிமா கெரியரில் அப்பா எந்த விஷயத்திலும் தலையிடலை. அவர் எப்படி சுயமா வளர்ந்து வந்தாரோ, அதே மாதிரி நானும் வளரணும்னு ஆசைப்படுறார்."

"அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நீங்க நடிப்பீங்களா?" 

"நிச்சயமா ரீமேக் பண்ணமாட்டேன், நடிக்கவும் மாட்டேன். அது அப்பாவோட மாஸ்டர் பீஸ். அப்பா தவிர யாராலையும் அதில் நடிக்கமுடியாது. நான் நடிச்சு, அப்பா பெயரைக் கெடுக்கவிரும்பலை. அப்பா மிகப்பெரிய லெஜண்ட். இப்போதான் அவருடைய படங்கள் நிறைய பார்க்க ஆரம்பிச்சுருக்கேன். ஏன்னா நான் படிச்சு வளர்ந்தது எல்லாமே ஃபோர்டிங் ஸ்கூல்ல. படங்கள் பார்க்குறதுக்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு. ஆனால் அப்பா, தாத்தா பத்தி நிறையவே கேள்விபட்டிருக்கேன். மக்களோட பல்ஸ் தெரிஞ்சவர் என் அப்பா. அவரை மாதிரி நானும் ஆகணும்ங்கிறதுதான் என் விருப்பம்." 

" ‘கடல்’ கொடுக்காத வெற்றியை ‘ரங்கூன்’ கொடுத்திருக்கே?" 

"கடல் எனக்கு வாழ்க்கை கொடுத்துச்சு. ரங்கூன் என்னக்கான வெற்றியைக் கொடுத்திருக்கு. அதுனால ரெண்டு படங்களுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். இரண்டு படங்களையுமே நான் பிரிச்சுப் பார்த்ததில்லை." 

"ப்ரியா ஆனந்த் உடனான கிசுகிசு பற்றி?" 

" ‘கடல்’ படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே ப்ரியா என்னோட நெருங்கிய தோழி. அதுனால வந்ததிகள் பற்றி நான் கவலைப்படமாட்டேன். எதிர்காலத்தில் என்னவேணாலும் நடக்கலாம். ஆனா அப்பா மாதிரி நானும் காதல் திருமணம்தான் பண்ணிப்பேன். அதுவும் கலப்புத் திருமணம்னா டபுள் ஓகே." 

"நிறைய படங்கள் ரிலீஸாகாம இருக்க என்ன காரணம்?" 

" ’சிப்பாய்’ தவிர, மற்ற எல்லா படமும் ஷூட்டிங் முடிஞ்சது. தயாரிப்பு தரப்பில் இருக்குற பிரச்னை சரியானதும் அடுத்தடுத்து எல்லா படமும் ரிலீஸாகும். முதல்ல ‘இவன் தந்திரன்’ ரிலீஸூக்கு ரெடியாகிடுச்சு. அடுமட்டுமில்லாம சிப்பாய் படத்துக்கான படப்பிடிப்பையும் சீக்கிரமே முடிச்சிடுவோம். இதுவரை எதையுமே வேணும்னு பண்ணதில்லை. இப்போதான் எல்லாமே கத்துக்கிட்டு இருக்கேன்." 

அடுத்த கட்டுரைக்கு