Published:Updated:

கார்த்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் மதுபாலா!

சனா
கார்த்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் மதுபாலா!
கார்த்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் மதுபாலா!

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா, இந்தியில் உருவாகும் மெகா பட்ஜெட் சீரியலான 'ஆரம்ப்' பில் நடிக்கிறார். 'பாகுபலி' படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் இந்த சீரியல் உருவாகிறது.


இதில் கார்த்திகாவின் பெயர், 'தேவசேனா'. திராவிட கலாசாரத்தை மையமாகவைத்து உருவாக்கப்படும் இந்த சீரியலில், கார்த்திகா இளவரசி கேரக்டரில் நடிக்கிறார். தற்போது, இந்த சீரியலில் இவருக்கு அம்மாவாக நடிக்க மதுபாலா ஒப்பந்தமாகியுள்ளாராம். இவரின் கதாபாத்திரம், 'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற சிவகாமி தேவி கதாபாத்திரத்தைப்போல இருக்கும் என்று கூறப்படுகிறது. 
இந்த சீரியல், ஜூன் 24 ஆம் தேதி முதல் ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.