Published:Updated:

விஜய் - அஜித் சேர்ந்து நடித்தால்...? - ஒரு ஜாலி ஜோலி

விஜய் - அஜித் சேர்ந்து நடித்தால்...? - ஒரு ஜாலி ஜோலி
விஜய் - அஜித் சேர்ந்து நடித்தால்...? - ஒரு ஜாலி ஜோலி

விஜய் - அஜித் சேர்ந்து நடித்தால்...? - ஒரு ஜாலி ஜோலி

முன்குறிப்பு - எதுக்கும் இதை சொல்லி வைப்போம். நான் 'தல தளபதி'யின் தீவிர ரசிகன். சொல்லிப்புட்டேன் ஆமா.

இன்று நம் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் விஜய்யும், அஜீத்தும்தான். முன்பு எம்.ஜி.ஆர் - சிவாஜி, அதன்பின் ரஜினி - கமல். அந்த வகையில் இப்போது விஜய் - அஜீத். இவர்களின் ரசிகர்கள் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. தல - தளபதி ஹிட் படங்களை கொடுக்கும்போதெல்லாம் இணையத்தில் இவர்களின் சண்டை தூள் பறக்கும். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் கூட அவ்வளவு உக்கிரமாய் இருக்காது. கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது தொடங்கி சிலை வைத்துக் கொண்டாடுவது வரை எல்லாவற்றிலும் போட்டாபோட்டிதான்.  கலாய், விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகள் என ஆயிரம் இருந்தாலும் இரு தரப்பிற்கும் இருக்கும் ஒரே ஆசை, 'ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?' என்பதுதான். என்ன நாஞ் சொல்றது? 
 
விஜய்யும், அஜீத்தும் இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 'ராஜாவின் பார்வையிலே' என்கிற அந்தப் படம் வந்தபோது இருவரும் இருந்த நிலை வேறு, இப்போது தொட்டிருக்கும் உயரம் வேறு. ஒருவேளை இப்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக இருவருக்கும் சமமான ஸ்பேஸ் கொடுக்கும் கதையாக இருக்கவேண்டும். பாட்டு, சண்டை என எதுவாக இருந்தாலும் சரிசமமாக இருக்கவேண்டும். அவ்வளவு ஏன் இன்ட்ரோ காட்சி கூட ஒரே நேரத்தில் இருக்கவேண்டும். இல்லையென்றால் 'எங்க தலைவருதான் முதல்ல வந்தாரு' என ஒரு தரப்பு சொல்ல, இன்னொரு தரப்பு டென்ஷனாகவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி பேலன்ஸ் செய்து இயக்கும் திறமை தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஷங்கர், ஏ.ஆர்,முருகதாஸ், கெளதம் மேனன், அட்லி, ரஞ்சித், வெங்கட் பிரபு என அந்த லிஸ்ட் ரொம்பவும் சின்னதுதான். இசை? இரண்டு மெகாஸ்டார்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க நான்கே சாய்ஸ்தான். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், அனிருத். இவர்களில் ஒருவராக இருந்தால் 'சும்மா பட்டையைக் கிளப்பலாம்'.

சரி, டெக்னீஷியன்ஸ் ஓ.கே. அப்படி இருவரும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். படம் பற்றிய அறிவிப்பு வெளியான நிமிடத்திலிருந்தே சோஷியல் மீடியாக்களில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள். தயாரிப்பாளருக்கு புரொமோஷன் செலவு மிச்சம். மாறி மாறி கலாய்த்து மீம் போட்டவர்கள் இன்று பாசிட்டிவ் நோட்டில் மீம் போடுவார்கள். தியேட்டர் வாசலில் சரிசமமாக பேனர் வைக்க இடம் குறிப்பார்கள். ரிலீஸாகும் நாளில் 'ஜெய் மகிழ்மதி' என கூட்டம் கூட்டமாய் தியேட்டருக்கு படையெடுப்பார்கள். சும்மாவே, 'எங்க படம் இவ்வளவு வசூல், 'எங்க படம் அதையெல்லாம் தாண்டிடுச்சு' என பஞ்சாயத்துகள் நடக்கும். அதனால் இந்தப் பட வசூல் ஹாலிவுட்டையே வசூலில் மிஞ்ச வாய்ப்பிருக்கிறது.

அட, கேட்க நல்லாத்தான் இருக்கு, நடக்குமானு கேக்குறீங்களா? 'ஐ யம் வெயிட்டிங்'. அய்யோ இதை மட்டும் சொன்னா பிரச்னை ஆயிடுமே. ஆங்.. 'தெறிக்கவிடலாமா?' தப்பிச்சுட்டேன்!
 

அடுத்த கட்டுரைக்கு