Published:Updated:

சினிமால்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யாவுடன் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக பரவலான பேச்சு.தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் விசாரித்தால்,  ''அப்படி எதுவும் இல்லை. மே மாதம் ஷ§ட்டிங் ஆரம்பம். அப்போ ஹீரோயின் யார்னு தெரியும்'' என்கிறார். உங்க அலப்பறை தாங்க முடியலியேப்பா!

கோச்சடையான்’ படத்தில் இலியானாவுக்கு அழைப்பு வந்தது. ஏதோ கால்ஷீட் பிராப்ளம்.  இப்போ ஆர்யா, விஜய், உதய்நிதி என எல்லோரும் இலியானா வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதைக் கேள்விப்பட்டவர் தமிழில்  நடிக்கத் தயாராம். வாங்கனா இலியானா!

சிம்புதேவன் சொன்ன கதை விஜய்க்குப் பிடிச்சுப்போச்சாம். செப்டம்பரில் கால்ஷீட் தந்துள்ளார். ஃப்ரேம் ஃப்ரேமாக ஸ்டோரி போர்டு வரைந்து காட்சியை விளக்கப்படுத்தினாராம் சிம்புதேவன். விஜய்க்கு படம் பார்த்த திருப்தியாம். படத்தில் இரண்டு நாயகிகளாம். ஹைய்ய்!

சினிமால்

ட்விட்டரில் ''இன்றைய தேதியில் பிகினி எல்லாம் சகஜம். எதுக்கும் நான் ரெடி'' என்கிறார் டாப்ஸி. டாப்புங்கோ!

ஓவியா இதுவரை பொறுத்தது போதும் என்று, ஒரு பாட்டுக்கும் முத்தக் காட்சிக்கும் ஓகே சொல்லி விட்டார். இனி காசு பணம் துட்டு மணிதான்!

'வேலையில்லாப் பட்டதாரி’ பிரஸ் மீட்டில் அமலாபாலிடம், ''உங்க இடத்தை ஸ்ரீதிவ்யா பிடிச்சிட்டாங்களாமே?'' என்று ஒரு கேள்வி எழுந்தது. ''ஹலோ... படம் சம்பந்தப்பட்ட கேள்வி மட்டும் கேளுங்க. இல்லே எழுந்து போயிடுவேன்'' என்றார். கூல்... பால்!

சினிமால்

ஸ்ருதிஹாசன், உத்தம வில்லன், த்ரிஷ்யம் ரீமேக் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம் எனத் தொடர்ந்து பாட இருக்கிறார். இசை என்னும் இன்ப வெள்ளத்தில் தொபக்கடீர்னு நீச்சலடிக்க நாங்களும் ரெடி!

ஹன்சிகா முன்பு பாவாடை தாவணியுடன் நடித்தபோது ஆசைப்பட்டு அந்த உடைகளை வீட்டுக்கு எடுத்துப்போனார். இப்போது படங்களில் அவருக்குப் பிடித்த காஸ்ட்யூம் என்றால், தயாரிப்பு நிர்வாகிகளின் அனுமதியோடு வீட்டுக்கு எடுத்துப் போகிறாராம். எப்போ கல்யாணப் புடவை கட்டப்போறீங்க?

சினிமால்

'அலையே அலையே’ என்ற படத்தின் இசை வெளியீட்டில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், ''இப்போ இருக்கிற நடிகர்களிலேயே விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லா ஆடியோ விழாவிற்கும் வருகிறார்'' எனப் பாராட்டினார். இதில் ஏதும் உள்குத்து இல்லையே?

அப்பாடா என விஷால் பெருமூச்சு விட... ஆமாங்க, 'மதகஜராஜா’ படம் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருக்கிறது.

அஞ்சலி, வரலெட்சுமி, சதாவுக்காக நாங்க வெயிட்டிங்!

சினிமால்

மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய 'நான் அவன் இல்லை’ ஜீவன். செல்வா இயக்கத்தில் 'தூதன்’ படத்திலும் மகா கேசவ் இயக்கும் 'கீ’ என்ற படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். தூதனில் ஜெயமாலாவின் மகள் சௌந்தர்யா நடிக்கிறார். படு சூடான முத்தக் காட்சிக்கு சௌந்தர்யா தயாராம். கதையை ரெடி பண்றதுக்கு முன்னால் இப்படிக் காட்சிகளை ரெடி பண்ணிடுவாங்களோ?

ராஜமௌலி இயக்கும் 'பாகுபாலி’ தெலுங்குப் படத்தில் பிரபாஸின் அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. அம்மா மயிலு!