Published:Updated:

அர்விந்த் சுவாமி முதல் ஆர்யா வரை... யார் யார் என்ன படிச்சிருக்காங்க?

அர்விந்த் சுவாமி முதல் ஆர்யா வரை... யார் யார்  என்ன படிச்சிருக்காங்க?
அர்விந்த் சுவாமி முதல் ஆர்யா வரை... யார் யார் என்ன படிச்சிருக்காங்க?

மிழ் திரைப்பட நட்சத்திரங்களின் அதிரடி பெர்ஃபாமன்ஸை வெள்ளித்திரையில் பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்போம். கதையின் டோட்டல் நிகழ்வுகளையும் தன் பிடியில் வைத்திருக்கும் அவர்கள், கல்வியில் எப்படி?  இதோ அர்விந்த் சுவாமி முதல் ஆர்யா வரையிலான திரை நட்சத்திரங்கள் சிலரின் கல்வித் தகுதி என்ன, யார் யார் என்ன படித்திருக்கிறார்கள், எங்கு படித்தார்கள், இவர்களில் யார் அதிகம் படித்திருக்கிறார் என்பதை பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இங்கு பதிவுசெய்கிறோம்.

மக்களே... மக்களுக்கு மக்களே... இதோ உங்கள் மனதில் பதிந்த ஹீரோ, ஹீரோயின், டைரக்டர்களின் எஜுகேஷனல் ஸ்டேட்டஸ்...

அர்விந்த் சுவாமி: 90-களின் சாக்லேட் பாய். இன்று வரைஹைப் குறையாமல் இருக்கும் இவர், படிப்பிலும் கெட்டி. சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ (இன்டர்நேஷனல் பிசினஸ்) படித்துவிட்டு மணிரத்னத்தின் `தளபதி' படத்தில் அறிமுகமானவர், இன்று பிஸி பிசினஸ்மேன் கம் ஆக்டர்!

விக்ரம்: ஜீரோ ஹேட்டர்ஸ் ஸ்டேட்டஸுடன் இன்று வரை  தமிழ் சினிமாவில் இருக்கும் `சீயான்' விக்ரம் படித்தது, சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ (ஆங்கிலம்). அதே கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டிருக்கும்போது, மிகப்பெரிய விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. மூன்று வருடத் தொடர் சிகிச்சைக்குப் பிறகு எம்.பி.ஏ படிப்பைப் பெரும் போராட்டத்துக்கிடையே படித்து முடித்தார் விக்ரம்.

மாதவன்: என்றுமே பெண்களின் ஹார்ட்-த்ராப் ஆன மேடி, மகா திறமைசாலி. மகாராஷ்டிராவில் எலெக்ரானிக்ஸ்  இளங்கலைப் பட்டத்தைப்  படித்துக்கொண்டிருந்தபோது, கல்லூரியின் தலைசிறந்த என்.சி.சி மாணவர்களில் ஒருவர். பிரிட்டிஷ் ஆர்மி மற்றும் நேவியில் சிறிது காலம் பயிற்சி பெற்று, பப்ளிக் ஸ்பீக்கிங்கில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் இவர்.

கார்த்தி: தற்போதைய ஹீரோக்களில் அதிகம் படித்தவர்  நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜாதான். சென்னை வண்டலூர் கிரிசென்ட் பொறியியல் கல்லூரியில் பி.இ (மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்) முடித்துவிட்டு, அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்கில் எம்.எஸ் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். மேலும், ஸ்டேட் யூனிவர்சிட்டி ஆஃப் நியூயார்கில் ஃபிலிம் மேக்கிங்கில் சில கோர்ஸ்களை முடித்த கையுடன் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

சிவகார்த்திகேயன்: பெர்ஃபாமிங் ஆர்ட்டிஸ்ட், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என மீடியாவில் தன்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேற்றிக்கொண்ட இவர்,  படிப்பிலும்  சமத்து. திருச்சி ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்று, இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ப்ளானிங் அண்ட் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ படித்துள்ளார்.

பிரசன்னா: பிரசன்னா, திருச்சி சாராநாதன் பொறியியல் கல்லூரியில் பி.இ எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் படித்துக்கொண்டிருந்தவர், நடிப்பிலும் மிமிக்ரியிலும் ஆர்வம் அதிகமாக இருந்ததால் நடிப்பைத் தேர்ந்தெடுத்து, `ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்.

விக்ரம் பிரபு: கோலிவுட் ஹீரோக்களில் மற்றுமொரு எம்.பி.ஏ பட்டதாரி விக்ரம் பிரபு. இவர், கலிஃபோர்னியாவின் சான் டிகோ பல்கலைக்கழத்தில் எம்.பி.ஏ  பட்டம் பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் `கும்கி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

டாப்ஸி: `ஆடுகள'த்தில் அறிமுகமான சாஃப்ட்வேர் இன்ஜினீயர் டாப்ஸி, புதுடெல்லி குரு டெக் பஹதூர் இன்ஸ்டிட்யூடில் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர். ஒரு எம்.என்.சி-யில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்தவர், ஐ-போனுக்கென பிரத்யேகமான ஆப் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிகா: `ஃபைவ் ஸ்டார்' ஹீரோயினான இவர், மதுரைப் பொண்ணு. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS –PILANI)யில் மெரிட்டில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டத்தைப் பெற்றுள்ளார். தன் பள்ளிப்படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்றதற்காக தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு ஃபார் எஜுகேஷன் எக்ஸலென்ஸ் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ்: கோலிவுட்டின் பிராமிஸிங் இயக்குநர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ பட்டம் பெற்றுள்ளார். கலைஞர் டிவி-யின் `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் பங்குபெற்று, சக்சஸ்ஃபுல் குறும்பட இயக்குநராகப் பிரபலமானவர். `பீட்சா' படம் மூலம்  திரைப்பட இயக்குநரானார்.

ஆர்யா: சென்னை க்ரிசென்ட் பொறியியல் கல்லூரியில், பி.இ பட்டம் பெற்று 2005-ம் ஆண்டு `உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகமானார்.