Published:Updated:

விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'தெறி' படத்துக்குப் பிறகு, விஜய் - அட்லி இணைந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. விஜயேந்திர பிரசாத், ரமணகிரிவாசன் கதையில் இந்தப் படம் உருவாவதால், படத்தைத் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்காட்டிவருகின்றனர்.


விஜய்யின் 61-வது படமான இதன் பெயர் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு முந்தைய நாள், மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்த அறிவிப்பு, நிச்சயமாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு பரிசாகத்தான் இருக்கும்.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், சத்யன், யோகி பாபு  ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம், தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100-வது படமாகும். அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகும் என்றும் அறிவித்துள்ளனர்.