Published:Updated:

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்... அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா
‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்... அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘ஷங்கர் சார்தான் தன்னோட ‘எஸ் பிக்சர்ஸ்’ல என்னை ஆக்‌ஷன் டைரக்டரா அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்து வருஷங்களுக்குப் பிறகு இன்னிக்கு இந்தியாவின் பெரிய பட்ஜெட் படமான அவரின் ‘2.0’ படத்துல வொர்க் பண்ணிட்டிருக்கேன். சாதாரண ஒரு மனுஷனுக்கு இது எவ்வளவு பெரிய விஷயம்! பெரியவங்க ஆசீர்வாதமும் கடவுளின் அனுகிரகமும்தான் இதுக்குக் காரணம்’’ - மகிழ்வும் நெகிழ்வுமாகப் பேசுகிறார் ஸ்டன்ட் டைரக்டர் சில்வா. சாதாரண ஃபைட்டராக வாழ்க்கையைத் தொடங்கிய சில்வா, இன்று தவிர்க்க முடியாத ஸ்டன்ட் டைரக்டர். இவர்  இப்போது நடிகரும்கூட. ‘வனமகன்’ பட ஆடியோ வெளியீட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தவரை அவரது வீட்டில் சந்தித்தேன். 

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘எனக்கும் இயக்குநர் விஜய் சாருக்கும் ‘தலைவா’வில் தொடங்கிய நட்பு, ‘இது என்ன மாயம்’ கடந்து ‘வனமகன்’ தாண்டி இப்ப ‘கரு’ வரைக்கும் தொடருது. என்னென்ன பண்ணணும், எப்படிப் பண்ணணும்னு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கு. ‘சாஃப்ட்டா, எமோஷனலா நல்ல படங்கள் பண்றீங்க சார். ஆனா, படம் முழுக்க எனக்கு வேலை இருக்கிற மாதிரியான ஒரு ஆக்‌ஷன் படம் பண்ணுங்க சார்’னு சொல்லிட்டே இருப்பேன். ‘அது தானா அமையணும் செல்வா’னு சொல்வார். அப்படி அவருக்கு அமைஞ்ச படம்தான் ‘வனமகன்’. கதையை கேட்டதும் ‘ஒட்டுமொத்தப் படப்பிடிப்பிலும் நான் இருந்தே ஆகணும்’னு புரிஞ்சுது. இந்தக் கதையின் பின்னணியை இதோட தலைப்பே உணர்த்தும். ஆமாம், கதை நடப்பதே காட்டில்தான். அந்தமான், வியட்நாம், தாய்லாந்துனு நிறைய தீவுகள், தீபகற்பங்கள் பார்த்தோம். ஒரு இடத்தில் கடலும் காடும், இன்னொரு இடத்தில் ஆறும் காடும், வேறொரு இடத்தில் மலையும் காடும்னு... எங்கெங்க எது நல்லா இருக்குனு தேடித்தேடி லொக்கேஷன் பிடிச்சோம். ஒவ்வொரு காட்டுக்கும் ஒவ்வொருவிதமான வைபரேஷன், தன்மைகள் இருக்கும். சிறுத்தை, கரடினு தென்படுற விலங்குகள், அட்டைப்பூச்சி பிரச்னைகள்னு தினம் தினம் திகில்தான். வழக்கமா செட்டுக்குள்ள ஆக்‌ஷன் பண்ணும்போதே நம்மளை மீறி நிறைய விஷயங்கள் நடந்துடும். அவ்வளவு கஷ்டங்களும் இன்னிக்கு ‘வனமகன்’ நல்லா வந்திருக்கிறதைப் பார்த்ததும் மறைஞ்சிடுச்சு.’’

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘ ‘புலிமுருகன்’ படத்துக்கு சிஜி பண்ணின டீம்தான் ‘வனமகன்’லயும் வொர்க் பண்ணியிருக்காங்க. அந்த டீமுடனான அனுபவம் சொல்லுங்க?’’
‘‘நம்மை மயக்குற மாயைதான் சிஜி. உதாரணத்துக்கு, இல்லாத வில்லனை இருக்கிறதா நினைச்சு அடிக்கணும். அதாவது அங்கே வில்லன் இருக்கார்னு கற்பனை பண்ணிக்கிட்டுப் பண்ணணும். மேக்கிங் பார்த்தீங்கன்னா, பைத்தியக்காரன் மாதிரி இருக்கும். ‘ஊ... ஆ..’னு கையை எதிர்ல நீட்டி தூக்கி அடிப்பேன். ஜம்ப் பண்ணி விழுவேன். ஆனா, எதிர்ல யாருமே இருக்க மாட்டாங்க. நீங்க ஸ்க்ரீன்ல பார்க்கும்போது நான் ஒருத்தரைக் கழுத்தைப் பிடிச்சு தூக்கிப் போடுற மாதிரியும் அவர் அந்தப் பக்கம் போய் விழுற மாதிரியும் இருக்கும். ‘எதிர்ல உள்ளவரின் கழுத்து சைஸ் இவ்வளவு. அதுக்குத் தகுந்த மாதிரி நீங்க கையை வெச்சு அவரின் கழுத்தைப் பிடிக்கிற மாதிரி பெர்ஃபாம் பண்ணணும்’னு சொல்வாங்க. இதைப் பண்றதுதான் சவால். இதைப் பிசிறில்லாம தத்ரூபமா பண்றதுதான் சிஜி. உண்மையிலேயே சிஜி மிகப்பெரிய வரப்பிரசாதம். இதில் ஜெயம் ரவி சாருக்கும் புலிக்குமான சீக்வென்ஸ் ஒண்ணு இருக்கு. அதை அந்தப் ‘புலிமுருகன்’ டீம்தான் பண்ணியிருக்காங்க. இதுக்காக ஒரு புலியைத் தேடிப் பிடிச்சு, அதோட மூவ்மென்ட் எப்படியிருக்கு, அது மனிதர்களோடு எப்படிப் பழகுதுனு தனித்தனியா ஷூட் பண்ணின பிறகு, பல இடங்கள்ல நிஜ புலியையும் சில இடங்கள்ல புலி இல்லாமலும் ஷூட் பண்ணி சிஜி பண்ணியிருக்கோம். குட்டிப்பசங்க முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இப்படிப் படம் முழுக்கச் சின்னதும் பெருசுமா இன்ஸ்ட்ரஸ்டிங்கான நிறைய விஷயங்கள் இருக்கு.’’

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘உங்களை ஸ்டன்ட் டைரக்டரா அறிமுகப்படுத்திய ஷங்கருடன் இப்ப ‘2.0’ படம் பண்றீங்க. ஷங்கர் என்ன சொல்றார்?’’
‘‘இந்தியாவின் பெரிய இயக்குநர். `ரிலாக்ஸா ஷூட் பண்ணுவோம். ஒரு நாளைக்கு ஒரு ஷாட் எடுத்தா போதும்’னு நினைக்கவே மாட்டார். நெருப்பு மாதிரி வொர்க் பண்ணுவார். ஒரு ஃப்ரேம்ல ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னா, ‘ஒன், டூ’ சொல்லி தன் கவுன்டிங்குக்கு அவங்களை ரிகர்சல் பண்ணுவார். இப்படி எதையும் வீணாக்காம அவ்வளவு அழகா ஸ்க்ரீனை நிரப்புவார். ‘ரசிகன் இந்த அளவுக்கு உன்னிப்பா கவனிப்பானா சார்?’னு கேட்டா, ‘கவனிக்கலைன்னா அது அவன் தப்பு. நான் தப்பு பண்ணக் கூடாதில்லையா!’ம்பார். அவர் ரொம்ப சீரியஸான ஆள்னு நினைச்சிட்டிருப்போம். ஆனா, செம ஜாலியா... நிமிஷத்துக்கு நிமிஷம் காமெடி பட்டாசா பறப்பார். ‘எப்படி சார் உங்களால முடியுது?’னு கேட்டா, ‘ரொம்ப யோசிச்சோம்னா மண்டை வெடிச்சுடும் செல்வம். ரிலாக்ஸா வொர்க் பண்ணினா க்ரியேட்டிவிட்டியா நிறைய பண்ணலாம். நீங்களும் அப்படி யோசிச்சுப்பாருங்க’ம்பார். அதேபோல மென்மையான மனசுக்காரர். தன் வார்த்தைகளால் மத்தவங்களோட மனசு கஷ்டப்படக் கூடாதுனு நினைப்பார்.

‘2.0’-வில் ஸ்டன்ட் டைரக்டர்கள், விஎஃப்எக்ஸ் ஆள்கள்னு ஹாலிவுட்ல இருந்து நிறைய கலைஞர்கள் வந்திருக்காங்க. அவங்ககிட்டயிருந்து நாமும் நம்மகிட்டயிருந்து அவங்களும் கத்துக்கிறாங்கனு சொல்லலாம். ‘ஆமாம் செல்வா, இந்த ஷேரிங்தான் முக்கியம்’னு ஒருநாள் ஷங்கர் சார் சொல்வார். சம்பளத்துக்காக மட்டுமே பண்ற வேலையா இருந்தா இதைச் செய்யவே முடியாது. அவர்தான் சார் என் காட் ஃபாதர். ஆர்வமும் முழு மனசையும் கரைச்சுப் பண்றதால ஷங்கர் சாரால் இதைப் பண்ண முடியுது. ‘2.0’ இந்தியாவின் மிகப்பெரிய, முக்கியமான படம். இந்தப் படத்தைப் பார்க்கணும்னு நானும் ஆசையோடு காத்திருக்கேன்.’’

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘ரஜினியுடன் வொர்க் பண்ற அனுபவம் எப்படியிருக்கு?’’
‘‘நான் பீட்டர் ஹெயின் மாஸ்டரின் அசிஸ்டென்ட். அவர்கிட்ட நிறைய படங்கள் வொர்க் பண்ணிட்டு, தனியா படம் பண்ணணும்னு நினைக்கும்போது அவர் ‘சிவாஜி’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்கள்ல கமிட் ஆகியிருந்தார். ‘இந்த ரெண்டு படங்கள்ல மட்டும் நாம வொர்க் பண்ணிட்டு வந்துடலாம்’னு நினைச்சு நானே மாஸ்டர்கிட்ட கேட்டுப் போய் இந்தப் படங்கள்ல வொர்க் பண்ணினேன். ஆனா, எதிர்பாராதவிதமா மாஸ்டரோட தேதி செட் ஆகாததால், அவரால் ‘வேட்டையாடு விளையாடு’ பண்ண முடியலை. ரொம்ப வருத்தமாகிடுச்சு. ஆனாலும் விடலை. அந்தப் படம் பண்ணிட்டிருந்த மாஸ்டருக்கு போன் பண்ணி, ‘கமல் சார்கூட ஒரே ஒரு ஷாட் நான் பண்ணணும் மாஸ்டர்’னு கேட்டு வாங்கி அவர்கூட ஒரு ஷாட் பண்ணினேன். அது எங்க மாஸ்டருக்குக்கூடத் தெரியாது. கௌதம் மேனன்சார்கூட அப்ப, ‘என்ன செல்வம் இந்தப் பக்கம்?’னு கேட்டார். ‘என்னோட நீண்டநாள் ஆசை சார்’னு சொல்லி பண்ணிட்டு வந்தேன். பிறகு ‘சிவாஜி’ பண்ணும்போது ரஜினி சார்கூட நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைச்சுது. அதுதான் நான் அசிஸ்டென்டா வொர்க் பண்ணின கடைசிப் படம். பிறகு, நான் மாஸ்டராகிட்டேன். ‘2.0’வில் சந்திக்கும்போது ரஜினி சார் அதை ஞாபகம் வெச்சு கேட்டார். ஒவ்வொரு ஃப்ரேம்லயும் அந்த வேகம், எனர்ஜியைக் கொண்டுவருவார். அதேபோல பன்ச்சுவாலிட்டியில் பக்கா. கரெக்ட் டைமுக்கு வந்தாலும், ‘என்னால லேட் ஆகலையே’னு கேட்டுட்டே வருவார். ஸ்பாட்ல ரிலாக்ஸ் டைம் கிடைச்சா சாதாரண ஹவாய் செப்பல் போட்டுக்கிட்டு தனியா சேர்ல உட்கார்ந்து புக் படிச்சுக்கிட்டிருப்பார். இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் தொழில் மேல அவருக்கு உள்ள ஈடுபாடு என்னை ஒவ்வொரு நாளும் ஆச்சர்யப்படுத்தும்.’’

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘ராஜமெளலியின் ‘எமதொங்கா’வில்தான் நீங்க ஸ்டன்ட் டைரக்டரா அறிமுகம். அந்த அனுபவம் எப்படியிருந்துச்சு?’’
‘‘ ‘சத்ரபதி’. இது எங்க மாஸ்டர் வொர்க் பண்ணின ராஜமெளலி சார் படம். அதில் நான் அசிஸ்டென்ட். அப்ப ஏற்பட்ட பழக்கம். பிறகு நான் மாஸ்டர் ஆனதும் ‘நான் மாஸ்டராகிட்டேன், மாஸ்டராகிட்டேன்’னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். ஆனா, ராஜமெளலி சாரை மட்டும் சந்திக்க முடியலை. இதுக்கிடையில ஷங்கர் சார் தயாரிப்புல மாஸ்டரா அறிமுகமாகிட்டேன். அந்தப் பட வேலைகள் தொடங்கவிருந்த சமயம். அப்ப ராஜமெளலி சார்கிட்ட இருந்து போன். ‘செல்வம், நீங்க மாஸ்டராகிட்டீங்களாமே, வாங்க நாம ஒரு படம் பண்ணலாம். இன்னிக்கு நைட் கிளம்பி வந்துடுங்க’ன்னார். எனக்கு பயங்கர ஷாக். போனேன். ‘ஜூனியர் என்.டி.ஆ ஹீரோ. படம் பேர் ‘எமதொங்கா’. கிட்டத்தட்ட ஷூட்டிங் முடிச்சுட்டேன். ஃபைட் மட்டும்தான் பேலன்ஸ். இதுதான் சூழல். இதுக்கு தகுந்த மாதிரி லொக்கேஷன் பார்த்துட்டு வந்துடுங்க. ஷூட் போயிடலாம்’னார். முதல் வாய்ப்பே பெரிய படம். முதல் நாளே 50 ஃபைட்டர்களோடு க்ளைமாக்ஸ் ஷூட். ஹீரோ, 20 ஃபைட்டர்களைத் தலைகீழா கட்டி தொங்கவிட்டிருப்பார். அந்த ஃபைட்டை அப்படிப் பண்ணியிருந்தோம். ராஜமெளலி சார் பயங்கர பெர்ஃபெக்‌ஷனிஸ்ட். ஒரு ஷாட்டை 23 டேக் வரை எடுத்ததெல்லாம் உண்டு. தவிர, அப்ப டிஜிட்டல் கிடையாது, ஃபிலிம்தான். ‘எமதொங்கா’ எனக்கு மிகப்பெரிய பேர் வாங்கித்தந்தது. பிறகு, பரபரனு பயங்கர பிஸியாகிட்டேன். தெலுங்குல எல்லா ஹீரோக்களோடும் படங்கள் பண்ண ஆரம்பிச்சேன்.

தமிழ்ல வெங்கட் பிரபு சாரின், ‘சரோஜா’, ‘கோவா’ வரிசையில அஜித் சாரின் 50-வது படம் ‘மங்காத்தா’ பண்ணினேன். அதில்தான் அஜித் சார் எனக்கு அறிமுகம். பைக் சீக்வென்ஸ், கார் சேஸிங்னு அவருக்குப் பிடிச்ச மாதிரி பண்ணியிருந்தோம். பிறகு, அவருடன் ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’னு தொடர்ந்து அவருடன் படங்கள் பண்ணிட்டிருக்கேன். இதற்கிடையில் ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’, ‘தலைவா’னு விஜய் அண்ணாகூடவும் வொர்க் பண்ணிட்டிருக்கேன். இப்படி கடவுள்தான் சார் எல்லா நல்லதுகளையும் நிகழ்த்திட்டிருக்கான்.’’

‘‘அங்கீகரித்தவர் ஷங்கர்...  அடையாளப்படுத்தியவர் ராஜமெளலி!’’ நெகிழ்கிறார் ‘ஸ்டன்ட்’ சில்வா

‘‘உங்களோட சுருள்முடி உங்க அடையாளங்கள்ல ஒண்ணு. அதை எப்படிப் பராமரிக்கிறீங்க?’’
‘‘நீங்க மட்டும் இல்லை, இதை எல்லாருமே கேட்பாங்க. அதுவும் குறிப்பா ஹீரோயின்கள். ‘உங்க தலைமுடியைப் பார்க்கப் பொறாமையா இருக்கு சார்’னு சொல்வாங்க. எனக்கு பயங்கர கூச்சமா இருக்கும். உண்மையைச் சொல்லணும்னா, இதுக்காக நான் எதுவும் பண்றது கிடையாது. நம்ம ஊர்கள்ல, ‘சுருட்டை முடி’னு சொல்வாங்கள்ல அப்படி இது எனக்கு இயற்கையா அமைஞ்சது. எனக்கு இது ஒரு அடையாளமாவும் அமைஞ்சுட்டதால அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். அவ்வளவுதான்.’’

அடுத்த கட்டுரைக்கு