Published:Updated:

‘ ‘சர்வைவா’ பாட்டுக்கு அஜித் ரியாக்‌ஷன்...செம ஷாக்!’ - யோகி.பி. #Surviva #Vivegam #VikatanExclusive

கே.ஜி.மணிகண்டன்
‘ ‘சர்வைவா’ பாட்டுக்கு அஜித் ரியாக்‌ஷன்...செம ஷாக்!’ - யோகி.பி. #Surviva #Vivegam #VikatanExclusive
‘ ‘சர்வைவா’ பாட்டுக்கு அஜித் ரியாக்‌ஷன்...செம ஷாக்!’ - யோகி.பி. #Surviva #Vivegam #VikatanExclusive

‘விவேகம்’ படத்தில் இடம்பெறும் ‘சர்வைவா...’ பாடல் மூலம் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ‘ஹிப் ஹாப்’ சிங்கர், யோகி பி. “ ‘ஆடுகளம்’ படத்துல கடைசியா பாடுனேன். அதுக்குப் பிறகு தொண்டையில எனக்கு காய்டர் பாதிப்பு வந்ததுனால, ஆபரேஷன் பண்ணவேண்டி இருந்தது. டாக்டர்ஸ் கத்தியைக் கொஞ்சம் மாத்தி வெச்சாலும், குரல் போயிடும்னு சொன்னாங்க. ஆண்டவன் புண்ணியத்துல அப்படி எதுவும் நடக்கலை. மீண்டு வந்தேன். மறுபடியும், ஆபரேஷன் பண்ண இடத்துல இன்ஃபெக்‌ஷன் ஆயிடுச்சு. இதுக்கிடையில அம்மா தவறிட்டாங்க. பிஸ்னஸ்ல பெரிய இழப்பு... இப்படி என்னோட கடந்த சில வருடங்கள் ரொம்பத் துன்பமும், துயரமுமாவே போய்க்கிட்டு இருந்தது. ‘விவேகம்’ படத்துல ‘சர்வைவா...’ பாட்டுக்குப் பிறகு எல்லாம் மாறும்னு நம்பிக்கை வந்திருக்கு. மாறிக்கிட்டும் இருக்கு!” அதே கணீர்க் குரலோடு உற்சாகமாகப் பேசுகிறார், யோகி பி.

“யோகேஷ்வரன் வீரசிங்கம் என் பெயர். ஆறு தலைமுறையா புலம் பெயர் தமிழர்களா மலேசியாவுல வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். சின்ன வயசுல இருந்தே இசையில ஆர்வம் அதிகம். தமிழ்ல்ல ஹிப்-ஹாப் பாடல்களே இல்லையேனு இருந்த வருத்தம்தான், 'ஹிப்-ஹாப்' பாடல்கள் பக்கமா என் கவனம் போச்சு. 14 வயசுல இருந்து ராப், ஹிப்-ஹாப் பாடிக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல இங்கிலீஷ்ல பண்ணேன், பிறகு தாய்மொழியில பண்ண ஆரம்பிச்சேன். எங்க டீமோட ‘வல்லவன்’ ஆல்பம் எங்களுக்குப் பெரிய அடையாளம் கொடுத்தது. பிறகு, 'குருவி'யில 'ஹாப்பி நியூ இயர்..' பாட்டு, 'பொல்லாதவன்'ல 'எங்கேயும் எப்போதும்...' ரீமிக்ஸ், 'ஆடுகளம்'ல 'போராடினால்...' பாட்டு,  'கஜினி' படத்தோட ஹிந்தி ரீமேக்ல, ரஹ்மான் சாரோட வொர்க் பண்ணது... இப்படி ரொம்ப நிறைவா போய்க்கிட்டு இருந்த வாழ்க்கை. இடையில கொஞ்சம் பிரேக். இப்போ திரும்ப மீண்டு வந்தாச்சு!''

“தப்பிப் பிழைத்தலுக்கு ‘சர்வைவல்’னு பெயர். ‘விவேகம்’ பாட்டும், உங்க வாழ்க்கையும் அப்படிப் பொருந்திப் போயிருக்கே?”

“எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு. அனிருத்கூட சொன்னார், ‘ஆறு வருடத்துக்கு அப்புறம் தமிழ்சினிமாவுக்கு வர்றீங்க. இடையில ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திச்சிருக்கீங்க. ‘சர்வைவா’ பாட்டும் போராட்டத்துல இருந்து மீண்டு வர்றவங்களுக்கான பாட்டுதான். உங்க வாழ்க்கையில நடந்த அனுபவங்களைக்கூட வரியா மாத்தி சேர்த்துக்கோங்க’னு சொன்னார். வெரி ஹாப்பி... தேங்க்ஸ் டு அனிருத் ப்ரோ!  தமிழ்ல்ல விஜய், தனுஷுக்குப் பிறகு அஜித்துக்குப் பாடியிருக்கேன். வித்யாசாகர், ரஹ்மான், ஜீவிபி, அனிருத் மாதிரி பெரும் இசைக்கலைஞர்களோட வேலை பார்த்திருக்கேன். எல்லோருக்கும் நன்றி சொல்ற தருணம் இது!” 

“ ‘சர்வைவா’ பாடல் உருவான விதம்?”

“அனிருத் கால் பண்ணி நலம் விசாரிச்சார். அப்பவே உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம். ‘என் அடுத்த படத்துக்கு ஒரு பாட்டு பாடணும்’னு சொல்லிமுடிச்சதுமே, 'ஏகே-47' படத்துக்கானு ஆர்வம் தாங்காம கேட்டுட்டேன். 'ஆமா'னு அவர் சொன்னதுதான்... ஹார்ட் பீட் லெவல் திடீர்னு ஹை-ஸ்பீடுக்கு மாறிடுச்சு. உடம்புக்குள்ளே ஒரு அணுகுண்டு வெடிச்ச மாதிரி ஒரு ஃபீலிங். தவிர, அனிருத் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உடனே ஓகே சொன்னேன். 'ஹாலிவுட் ஸ்டைல்ல இருக்கிற படம். நம்ம பாட்டும் ரொம்பப் புதுசா, வித்தியாசமா இருக்கணும்'னு அனிருத் சொன்னார். ஹிப்ஹாப் ஸ்டைல் இருக்கணும், ஃபிரெஷ்னெஸ் இருக்கணும், பாசிட்டிவ் எனர்ஜி இருக்கணும்... இப்படி அனிருத் சொன்ன எல்லாமே 'இருக்கணு'மும் ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்துச்சு. அஜித் சார் நிறைய போராட்டங்களைக் கடந்து சினிமாவுல ஜெயிச்சவர். அதை மனசுல வெச்சசும் 'சர்வைவா' பாட்டை எழுதுனேன். பாட்டுல அனிருத் சில திருத்தங்களைச் சொன்னா, இயக்குநர் சிவா சார் மேலும் சில திருத்தங்களைச் சொல்வார். என் வரிகளும், இந்தத் திருத்தங்களும்தான், 'சர்வைவா' பாடலோட வெற்றிக்குக் காரணம்.” 

“அஜித் படத்துல பாட்டு எழுதியாச்சு. ஆனா, 'ஆன் ஸ்கிரீன்'ல பாட முடியலையே'னு வருத்தம் இருக்கா, இல்லை... படத்துல வர்றீங்களா?”

“இல்லை. எனக்குப் பாட்டு எழுத சான்ஸ் கிடைக்கும்போது என் கவனம் அதுல மட்டும்தான் இருக்கும். ‘பாட்டோட உணர்ச்சி என்ன, எப்படி பெஸ்ட்டா பண்ணலாம், பாட்டோட வைப்ரேஷன் எப்படி இருக்கணும்?’ இப்படித்தான் இருக்கும் என் சிந்தனை. அதைமீறி, 'குருவி', 'பொல்லாதவன்' படங்கள்ல என் பாட்டுக்கு, நானும் 'ஆன்-ஸ்கிரீன்'ல வர்ற வாய்ப்பு கிடைச்சது. 'விவேகம்' படத்துல அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை. தவிர, 'விவேகம்' படம் ஹாலிவுட் பாணியில உருவாகியிருக்குனு படத்தோட டீஸரைப் பார்க்கும்போதும், சிவா சாரும், அனிருத்தும் வெறித்தனமா வேலை பார்க்கும்போதும் தெரிஞ்சது. இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்துல எனக்கும் ஓர் இடம் இருக்குங்கிறதே சந்தோஷம்!''

“பாராட்டு?”

“ 'சர்வைவா'வுக்கு முன்னாடி இந்தப் பாட்டு ஹிட் ஆகும்னு மட்டும்தான் தோணுச்சு. பாட்டு வந்தபிறகு, சுத்தி இருக்கிறவங்க, நெருக்கமான நண்பர்கள், அனிருத் டீம்ல இருக்கிற நண்பர்கள் எல்லாம், 'அஜித் சாரோட படம் இது. ரிலீஸ் அப்போ எங்கே இருந்தாலும் சென்னைக்கு வந்துடுங்க. திருவிழா மாதிரி இருக்கும். ரசிகர்களோட சேர்ந்து உங்க பாட்டோட ரெஸ்பான்ஸைப் பார்த்தா, அசந்துடுவீங்க'னு ஏதேதோ சொன்னாங்க. ஆனா, இந்தப் பாட்டு ரிலீஸ் ஆனதுக்கே பல இடங்களில் இருந்தும் பாராட்டு குவியுது. எல்லோரும்  வாழ்த்துறாங்க. இந்த ஆறு வருட இடைவெளியை இந்த ஒரு பாட்டு சரிபண்ண மாதிரி ஒரு ஃபீலிங. எல்லாத்தையும்விட அஜித் சார் பாட்டைக் கேட்டு என்ன சொல்லுவாரோனு இருந்தேன். அவர் அனிருத்கிட்ட 'ரொம்ப நல்லா இருக்கு'னு சொல்லியிருக்கார் அதக்கேட்டதுமே செம ஷாக். ஏன்னா அவர் அவ்ளோ அமைதியானவர். டக்னு எதுக்கும் ரியாக்‌ஷன் குடுக்க மாட்டார். அவர் குறிப்பிட்டுச் சொல்லிருக்கார்னா, எவ்ளோ பெரிய விஷயம்னு புரிஞ்சது.  அவரைச் சந்திக்கிற வாய்ப்பு இன்னும் கிடைக்கலை. அஜித் சார் அடைஞ்சிருக்கிற உயரத்துக்கு அவரோட நேரம், தங்கத்தோட விலைக்குச் சமமானது. அதை மதிக்கிறேன். இப்பவே பலபேர், 'இந்தப் பாட்டுக்குப் பிறகு வேறலெவலுக்குப் போயிடுவீங்க. சென்னையில வீடு பார்க்க ஆரம்பிச்சிடுங்க'னு சொல்லியிருக்காங்க. நீங்களும் ஒரு நல்ல பிளாட் பார்த்துச் சொல்லுங்க!''

“அனிருத்கூட வொர்க் பண்ண அனுபவம்?”

“அவருக்கு இருக்கிற எனர்ஜி, ஸ்பீடு... வாவ்!. வரிகளை அவருக்கு வாட்ஸ்-அப் பண்ணுவேன், திருத்தங்களைச் சொல்வார். திடீர் திடீர்னு பீட்ஸ் மாத்தி அனுப்புவார். தோசை சுடுற மாதிரி பீட்ஸ் பிடிக்கிறார், அனிருத். இந்தத் தலைமுறையோட மகத்தான இசைக் கலைஞன். அவரோட மெனக்கெடல் ஆச்சர்யமா இருக்கு.”

“ஹிப்-ஹாப் ஆதியோட வளர்ச்சியைக் கவனிக்கிறீங்களா?”

“என்னோட ஆல்பத்தைப் பாராட்டி, அப்பவே எனக்கு இ-மெயில் பண்ணுவார் ஆதி. அவருக்கு நான் ஒரு ஆசிரியரா உட்கார்ந்து எதையும் சொல்லிக்கொடுக்கலை. ஆனா, ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கேன். தமிழின் முதல் 'ஹிப்-ஹாப்' பாடகரா நான் வளர்ந்தேன். ஆதி, தமிழ்நாட்டுல முதல் தமிழ் ஹிப்-ஹாப் பாடகரா வளர்ந்தார். இப்போ நடிகர், இயக்குநர்னு அடுத்த கட்டத்துக்குப் போறார். ஆதி... என் தம்பி. அப்போ ரொம்ப ஒல்லியா இருந்தான், இப்போ கொஞ்சம் குண்டாயிட்டான். அவனோட வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு!”