Published:Updated:

"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி

"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி

"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி

"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி

"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி

Published:Updated:
"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி

"கேரளத்துப் பையனா மட்டுமே இருந்த என்னை, தென்னிந்தியப் பையனா மாத்தியிருக்கு, நந்தினி சீரியல். சினிமா வாயிலாக எதிர்பார்த்த அடையாளத்தை, இந்த ஒரு சீரியல் கொடுத்திருக்கிறதை நினைச்சு ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்'' - அழகுத் தமிழில் உற்சாகமாகப் பேசுகிறார், 'நந்தினி' சீரியல் நாயகன் ராகுல் ரவி. 

"மீடியா ஃபீல்டுக்குள்ளே எப்படி வந்தீங்க?" 

"ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே சினிமா மேல பெரிய ஈர்ப்பு. எப்படியாச்சும் சினிமாக்குள்ளே போயிடணும்னு துடிச்சேன். ஆனால், வீட்டுல பயங்கர எதிர்ப்பு. அதனால பெற்றோர் விருப்பப்படி பி.டெக்., முடிச்சேன். அந்தச் சமயத்தில் ‘பார்க்க ஹேண்ட்ஸம்மா இருக்கே. மாடலிங், சினிமா என டிரை பண்ணலாமே'னு ஃப்ரெண்ட்ஸ் சொல்ல, மறுபடியும் நடிப்பு ஆசை தொடர ஆரம்பிச்சுது. கொஞ்சநாள் மாடலிங் பக்கம் போனேன். ஒரு பியூட்டி கன்டெஸ்டன்ட் ஷோல வின்னர் ஆனேன். அப்படியே சினிமாவுக்கும் முயற்சி பண்ணி, ஒரு மலையாளப் படத்தில் லீட் ரோல்ல நடிச்சேன். தொடர்ந்து சினிமா வாய்ப்பு தேடிட்டு இருந்தபோது, வீட்டுக்கு பொருளாதார ரீதியாக ஹெல்ப் பண்ணவேண்டிய சூழல். மீடியா ஃபீல்டை விட்டுட்டு வேலைக்குப் போகலாம்னு நினைச்சேன். மலையாள மனோரமா சேனலின் ஒரு சீரியலில் ஹீரோ சான்ஸ் கிடைச்சுது. அது ஹிட்டாகி பெரிய ரீச் கிடைச்சுது.'' 

" 'நந்தினி' சீரியலுக்கு முன்பே சென்னை மறக்க முடியாத அனுபவம் கொடுத்ததாமே..."

"ஆமாம். 'நந்தினி' சீரியலுக்கு முன்னாடியே, ஒரு தமிழ் டைரக்டர் மூலமா ஹீரோ வாய்ப்பு வந்துச்சு. அந்த கேரக்டருக்கு உடம்பைக் குறைக்கணும் டைரக்டர் சொல்ல, ஒன்றரை மாசத்துல இருபது கிலோ குறைச்சேன். ஆனால், சில காரணங்களால் அந்த டைரக்டர் படம் எடுக்கலை. அந்த நேரத்தில் சென்னையில் சினிமா வாய்ப்புக்காக சுத்தினதெல்லாம் எப்பவும் மறக்க முடியாத அனுபவம். அப்பவே சென்னை எனக்கு குளோஸ் ஆகிடுச்சு. இப்போ அந்த இடங்களைப் பார்க்கிறப்பவே மனசுக்குள்ளே உற்சாகம் தொத்திக்கும்.'' 

" 'நந்தினி' தமிழ் சீரியல் அனுபவம் எப்படி இருக்கு?" 

"என் மலையாள சீரியல் மூலமாதான் 'நந்தினி' வாய்ப்பு கிடைச்சுது. நாலு மொழிகளில் ஒளிபரப்பாகப்போகுதுனு சொன்னதுமே ரொம்பவே சந்தோஷமாகிட்டேன். இப்போ நான்கு மொழி ரசிகர்களிடமிருந்தும் தொடர்ந்து பாராட்டுகள் வந்துட்டே இருக்கு. சென்னையில் பலரும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பாராட்டறாங்க. 'நந்தினி' சீரியலையே பெரிய சினிமா மாதிரிதான் எடுத்துட்டிருக்காங்க. அதனால், ஒரு சினிமாவின் ஹீரோவா நடிக்கும் உணர்வுதான் இருக்கு." 

"பாம்பு மற்றும் பேயோடு குடும்பம் நடத்தும் அனுபவம் எப்படி இருக்கு?" 

"ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ்னு போயிட்டு இருந்த சீரியலில், த்ரில்லர் அதிகமாகி வருது. ரொமான்ஸ் குறைஞ்சுப்போனது சின்ன வருத்தம்தான். மனைவி உடம்பில் நந்தினி பாம்பின் ஆவி புகுந்து என்னையும் என் அப்பாவையும் பழி வாங்கும் சீன்ஸ் போயிட்டிருக்கு. பாம்புப் பேய்க்கு புருஷனா நடிக்கிறதும், மனைவி உடம்பில் ஆவி இருக்கிறது உண்மையானு குழம்பிக்கிட்டே குடும்பம் நடத்தறதும், என்னைத் தற்காத்துக்க போராடறதும் ரொம்பவே சவாலாகவும் வித்தியாசமாகவும் இருக்கு.

குறிப்பா கல்யாணம் ஆகாத நான் கணவர் மற்றும் அப்பா ரோல்ல நடிக்கிறது சேலஞ்சா இருக்கு. மகள் பாசத்தையும் அப்பா உணர்வையும் இந்த சீரியல் எனக்குக் கொடுத்தது எந்த சூழல்லயும் மறக்கவே முடியாது. தவிர எதிர்காலத்துல வரக்கூடிய மனைவிகிட்ட ஒரு நல்ல புருஷனா எப்படி நடத்துக்கணும்ங்கிறதையும் இந்த சீரியல் வாயிலாக இப்போவே கத்துகிட்டதும் ஸ்பெஷல்தான்."

"சினிமாவில் ஹீரோவாகும் முயற்சி எந்தளவில் இருக்கிறது?" 

"சினிமா ஹீரோ ஆசை பல வருஷமாவே இருக்கு. மலையாளப் படங்கள் பிடிச்சாலும், தமிழ்ப் படங்கள் மேலே பெரிய ஈர்ப்பு. தொடர்ந்து தமிழ்ப் படங்களைப் பார்த்துகிட்டுதான் இருக்கேன். அப்படித்தான் தமிழ் கத்துக்கிட்டேன். தமிழில் விக்ரம் சாரின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். சவாலான கேரக்டர்களில் மாறி மாறி நடிக்கிறதில்தான் ஒரு ஆர்டிஸ்ட்டின் திறமைக்கு வெளிப்படும். தமிழில் வெரைட்டியான படங்கள், வெரைட்டியான கேரக்டர்கள் அதிகமா வருது. அதனால், தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் ரொம்பவே இருக்குது. சீக்கிரமே தமிழ் சினிமாவுக்குள் வருவேன். இப்போ, மலையாள மனோரமா சேனலில் ஒரு ஷோ பண்ணிட்டிருக்கேன்.'' 

"லவ் புரோபோசல் ஏதாச்சும் வந்திருக்கா?'' 

(பலமாக சிரித்தவர்), “அதெல்லாம் நிறையவே வருது. சோஷியல் மீடியாவில் ஃபேன்ஸோட அன்புத் தொல்லை வந்துட்டேதான் இருக்கு. சொல்லப்போனா, ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ அதிகமா வந்துச்சு. நிறைய கேர்ள்ஸ், ‘நீங்க ரொம்பவே ஹேண்ட்ஸம்மா இருக்கீங்க’னு சொல்வாங்க. ‘அப்படியா..? தேங்க்ஸ்’னு சொல்லிட்டு என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். அப்பவும் சரி, இப்பவும் சரி, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை. இப்போதைக்கு சினிமாவில் ஃபேமஸ் ஹீரோவாகணும். அப்புறம்தான் மற்ற விஷங்கள்.'' 

ரொம்ப தெளிவாகப் பேசுகிறார் ராகுல் ரவி.