Published:Updated:

பாலாவின் காதல் டச், 'நாச்சியாரி'லும் தொடருமா?

பாலாவின் காதல் டச், 'நாச்சியாரி'லும் தொடருமா?
பாலாவின் காதல் டச், 'நாச்சியாரி'லும் தொடருமா?

பாலா என்றாலே பலருக்கும் இன்று நினைவில் வருவது `பரதேசி' பட அதர்வாவின் கிராப் தலையும், பாவப்பட்டு இறந்துபோகும் அந்தப் படத்தின் கதாபாத்திரங்களும்தான். கூடவே கசிந்துருகும் காதல் காட்சிகளும், நெகிழவைக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும் அவ்வளவு யதார்த்தமாக இருக்கும்.

இவரின் படங்களில் கதாபாத்திரங்கள் காதலால் கசிந்துகொண்ட காட்சிகளைத் தனித்துப் பார்ப்போமா...

சேது:

இந்தப் படத்தின் நாயகி அபிதகுஜலாம்பாளைக் கடத்தி, தன் மனதில் அவரை எப்படியெல்லாம் வைத்திருக்கிறேன் என்று தனக்கே உரிய முரட்டுத்தனத்துடன் தன் காதலை வெளிப்படுத்துவார் சீயான். நாயகியும் அழுதுகொண்டே சீயானைப் ' பிடிச்சிருக்கு' என்பார். இந்தக் காட்சி என்னதான் இன்றைய சூழ்நிலைக்கு வேறுபட்டிருந்தாலும், `அட, இதுக்கா இவ்ளோ போராட்டம்!' என்றரீதியில் அன்று தியேட்டரில் நிச்சயம் தடதட அப்ளாஸை அள்ளியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நந்தா:

இலங்கை அகதியாக தமிழகம் வரும் கல்யாணி (லைலா), `நந்தா' சூர்யாவை ஒரு சங்தேகத்துக்காகப் பின்தொடர்ந்து அதற்கு பதில் `தான் தான்' என்று நந்தா சொல்லத் தெரிந்ததும், அவரின் மூர்க்கத்தில் உள்ள அன்பும் கல்யாணியை வெகுவாகக் கவர்கிறது. இதிலிருந்து தொடர்வதே இருவரின் காதல்.

பிதாமகன்:

`நந்தா' படத்தின் நாயக-நாயகியை வைத்து பாலா படைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களே இந்தப் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தன. எந்த ஒரு நபரையும் தன்னால் எப்படியும் மாற்ற முடியும் என்பதற்கான உதாரணங்களே சக்தி (சூர்யா) மஞ்சு (லைலா) கதாபாத்திரங்கள். சக்தி போங்கு ஆட்டம் ஆடிப் பிடிங்கிய HMT வாட்ச், 500 ரூபாய்காக சக்தியை போலீஸிடம் மாட்டிவிடுவார் மஞ்சு. ஜெயிலில் இருக்கும் சக்தியை தன் தந்தையுடன் சென்று பார்க்கும் மஞ்சுவிடம் சக்தி கூரிய ஒரு வார்த்தையில் வாய் அடைத்துப்போன மஞ்சுவுக்கும்,ஜெயிலிலிருந்து  ரிலீஸாகி வரும் சக்திக்கும் ஸ்டார்ட் ஆகுது செம லவ். இப்ப ஸ்டார்ட் ஆகுது செம சாங் (எளங்காத்து வீசுதே... எசைபோல பேசுதே …)

அட, நம்ம சித்தனுக்கும் கோமதிக்கும்கூட லவ் சீன்ஸ் அடாச் செய்தபோது, நம் உதட்டில் மெல்லிதாகப் பூக்கும் புன்னகையைப்  எவராலும் மறைக்க முடியாது.

அவன் - இவன்:

`வால்டர்', நம்ம பேபி கான்ஸ்டபிள் வீட்டுக்கூரையைப் பிச்சுக்கிட்டு திருட வரும்போதுதான் இவங்களோட முதல் சந்திப்பே. தனக்குள் ஒரு மகா கலைஞன் இருப்பதை உணர்ந்து, அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சிக்காக வரும் சூர்யா முன்னாடி வால்டர் தன் திறமையைக் காண்பிக்கும்போது யார் ரொம்ப சந்தோஷப்பட்டாங்களோ இல்லையோ, பேபி செம ஹேப்பி. போலீஸ் ஸ்டேஷன் நல்லா இருக்க, திருடர்களை அழைத்து விருந்து வைப்பதிலிருந்து தொடங்குகிறது இவங்களின் லவ்ஸ்.

பரதேசி:

அங்கலாய்த்தபடி அடிமை வேலை பார்க்கும் மக்களுக்கான தகவலை தமுக்கு அடித்துச் சொல்லும் ஒட்டுபெருக்கிக்கு, அத்தை மகள் அங்கம்மா மீது ஓர் இது. கல்யாண வேலைகளை இழுத்துப்போட்டு செய்துவிட்டு சாப்பாட்டு பந்தியில் உகட்காந்தால், அவனுக்கு மட்டும் இலையில் எதுவும் வைக்காமல், அழவைத்துக் கஷ்டப்படுத்துவார் அங்கம்மா. நீங்களே சொல்லுங்கள், இது ஞாயமாரேரே..... இப்படி ஒரு பையனை ஒரு பெண் கஷ்டப்படுத்தி அனுப்பலாமா? அதான் அங்கம்மாவே இறக்கப்பட்டு தனியா கொண்டுவந்து சோறு ஊட்டும்போது தன் உணர்வில் இழையோடியிருந்த காதல் `நான் உன்ன நினைக்குறேன்னு'  சொல்லி `அவத்த பையா... செவத்த பையா...'ன்னு பாடல் பாடும்போது நமக்கும் பிடித்துவிடும் காதல் கிறுக்கு.

தாரை தப்பட்டை:

 இந்தப் படத்துல கீழே குனிஞ்சபடி நடக்கும் சன்னாசி மாமாமேல சூறாவளிக்கு எப்போதுமே லவ்ஸுதான். ஆனால், எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளேயே வைத்திருந்து வெளியூர்ல போய் டான்ஸ் ஆடி ஏமாந்து, தெரியாத வேலையைச் செய்து அடிப்பட்டு விழும்போதுதான் தெரியவருது சூறாவளி மனம் முழுக்க தன்னையே வைத்திருக்கிறாள் என்பது. அப்போது நம்மை நாம் அறியாமல் இரக்கத்தைக் கண்களில் இறுத்தியதால் ஏற்பட்ட ஈரத்தை உணரலாம்.  காதல் உணர்வை சாதாரண வார்த்தைகளைக்கொண்டு மெட்டு அமைத்த “பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்” பாடலில் களமாடியிருப்பார் இசைஞானி.

இப்படி இவரின் படங்களில் வரும் காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் பச்சக் ரகம்தான். காதலைத் தொடர்ந்து வரும் சண்டை,  அழுகை, ரணம், ரத்தம் என பல அகோரக் காட்சிகள் இயக்குநர் பாலாவின் படங்களில் இருந்தாலும், நாம் மேல சொன்னதுபோல காதல்  மட்டும்தான் நம் மையம். அந்த வரிசையில் பாலாவின் அடுத்த படமான `நாச்சியார்' படத்திலும் காதல் உணர்வுகள் நம்மை உள்ளூர இழுக்கும் என்பதில் ஐயம் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு