Published:Updated:

“சிவகார்த்திகேயன் செட்ல இருந்தா ஹாப்பியா இருக்கலாம்!" ஜாலிகேலி ரெஜினா

“சிவகார்த்திகேயன் செட்ல இருந்தா ஹாப்பியா இருக்கலாம்!" ஜாலிகேலி ரெஜினா
“சிவகார்த்திகேயன் செட்ல இருந்தா ஹாப்பியா இருக்கலாம்!" ஜாலிகேலி ரெஜினா

“சிவகார்த்திகேயன் செட்ல இருந்தா ஹாப்பியா இருக்கலாம்!" ஜாலிகேலி ரெஜினா

'கண்டநாள் முதல்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'ராஜதந்திரம்' சமீபத்தில் வெளியான 'சரவணன் இருக்க பயமேன்' என அவ்வப்போது தமிழ்ப் படங்களில் முகம் காட்டும் ரெஜினாவுக்கு, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா உடன் `நெஞ்சம் மறப்பதில்லை', அதர்வாவுடன் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' , `ராஜதந்திரம் 2', `மடைதிறந்து', `சிலுக்குவார்பட்டி சிங்கம்' என ரெஜினாவின் கால்ஷீட் டைரி தமிழ்ப் படங்களால் நிரம்பி வழிகிறது.

``சினிமாவில் நடிக்கணும்னு ப்ளான் பண்ணி வந்தீங்களா?''


``ப்ளான் எல்லாம் எதுவும் பண்ணதில்லை. போர்ட்ஃபோலியோ பண்ணலை... யார்கிட்டயும் போய் சான்ஸ் கேட்கலை. எல்லாமே யதேச்சையா கிடைத்த வாய்ப்புகள்தான். டென்த் படிக்கிறபோதுதான் எனக்கு முதல் படம் வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படம் சரியா போகலை. இருந்தாலும் சினிமா துறையில் எங்கெங்கே எப்படி நடந்துக்கணும், எது நல்லது எது கெட்டது, யார் யாரிடம் பழகலாம், பழகக் கூடாது, என்ன பண்ணலாம் என்ன பண்ணக் கூடாதுன்னு அதுக்கு அப்புறம்தான் கத்துக்கிட்டேன்.  ப்ளஸ் டூ படிக்கிறப்ப `கண்டநாள் முதல்' பண்ணினேன். அதுக்கு அப்புறம் மறுபடியும் நடிக்க வருவேன்னு நானே நினைச்சுப்பார்க்கலை.

நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நாம ஏன் நடிப்பை கன்டினியூ பண்ணக் கூடாதுனு யோசிச்சேன். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தது. ஃபைனல் இயர் டிகிரி பண்ணிட்டிருந்தபோது `சூரியகாந்தி'னு ஒரு கன்னடப் படம் பண்ணினேன். அதுக்கப்புறம் ஒரு தெலுங்குப் படத்துல நடிக்கிற சான்ஸ் வந்தது. அப்போ எக்ஸாம்ஸ் நெருங்கிக்கிட்டிருந்தது. `எக்ஸாம் எழுதற வரைக்கும் அவங்க உனக்காக வெயிட் பண்றதா இருந்தா நடி... இல்லைன்னா வேண்டாம்'னு அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அவங்களும் எனக்காக வெயிட் பண்ணாங்க. `சிவா மனசுல சக்தி'யோட ரீமேக் `சிவா மனசுலோ ஸ்ருதி'ங்கிற படம்தான் அது. ஒரு வருஷம் சினிமாவுல ட்ரை பண்ணிப் பார்க்கலாமேனு அந்தப் படத்துல நடிக்கச் சம்மதிச்சேன்.  2011-ல ஆரம்பிச்சது. 2012-ல முதல் படம் ரிலீஸ். அடுத்தடுத்து தெலுங்குப் படங்கள் தேடி வந்தது. இப்ப வரைக்கும் தெலுங்குல 12 படங்கள் பண்ணிட்டேன். இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா? எனக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது.''

``உங்களின் கதாநாயகர்கள் பற்றி...''

``ஷூட்டிங், ஃபங்ஷன்னு போயிட்டா செம ஜாலி. கூட நடிக்கும் ஹீரோவா ஆகட்டும், குணச்சித்திர நடிகர்கள் ஆகட்டும். யாரா இருந்தாலும் கலகலன்னு பேசி, செட்டையே ஜாலியா வெச்சுக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படித்தான் என் கூட நடிக்கும் ஒவ்வொருத்தரையும் கேலி கிண்டலடிச்சு கலாய்ச்சுக்கிட்டிருப்பேன்.  எல்லா ஹீரோஸ்கூடவும் இப்பவும் நல்ல நட்புல இருக்கேன். யாருக்காவது பர்த்டேன்னா தவறாம விஷ் பண்ணுவேன். எல்லார் மேலயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு.

சிவகார்த்திகேயனை ஆரம்பத்துலேருந்து பார்க்கிறேன். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் இருக்கார். கொஞ்சம்கூட மாறவே இல்லை. அவர் செட்டுல இருந்தார்னா சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கிறது நிச்சயம்.  அதர்வா, ரொம்ப ஃபன்னி. ரெண்டு பேருக்கும் பொதுவான ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறதால அந்த ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். உதய் மாதிரி டவுன் டு எர்த் ஹீரோவைப் பார்க்கவே முடியாது. தான் யாருங்கிற கர்வமோ, பந்தாவோ இல்லாம சிம்பிள் பெர்சன். ஒரு ஹீரோ இவ்வளவு எளிமையா இருக்க முடியுமோன்னு அவரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். எஸ்.ஜே.சூர்யாவை எல்லாரும் எக்சென்ட்ரிக்னு சொல்றாங்க. அது அவர்கூடப் பழகினாத்தான் தெரியும். உண்மையிலேயே அவர் ஒரு எக்சென்ட்ரிக்தான். ராணாகூட இருக்கிறது கிரேட் டைம். விஷ்ணு விஷால் என் வொர்க்அவுட் பார்ட்னர். அவர்கூட சேர்ந்து நடிக்கிறபோது, தனிப்பட்ட ஒரு கம்ஃபர்ட்டபிளை ஃபீல் பண்ணுவேன். ஷூட்டிங் பேக்கப் சொன்னதும் நாங்க ரெண்டு பேரும் வொர்க் அவுட் பண்ணப் போயிடுவோம். அங்கேதான்  எங்களுக்கு பேக்கப்.''

``இவ்வளவு பேர் இருந்தும் ரெஜினாவைப் பற்றி ஒரு கிசுகிசுவும் இல்லையே... எப்படி?''

``மை லைஃப் இஸ் அன் ஓப்பன் புக். எங்க அம்மாவுக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரியும். அவங்க பார்வையிலேருந்து தப்பிக்கவே முடியாது. அம்மா ஹேப்பியா, பிரச்னைகளே இல்லாம இருக்காங்கன்னா அதுக்கு நான் ரொம்ப சமத்தா இருக்கிறதுதான் காரணம். என் வாழ்க்கையில அம்மா இருக்க பயமேன்னுதான் சொல்லணும்.''

``ரெஜினாவுக்கு போட்டி யார்?''

``போட்டிங்கிற வார்த்தைக்கு என் அகராதியில அர்த்தமே வேற. டென்னிஸ் மேட்சோ, ஃபுட்பால் மேட்சோ நடக்கிறபோது அங்கே போட்டி இருக்கலாம். வெற்றிக்கோப்பைக்காக ரெண்டு பேர் போராடுறாங்கங்கிறதுல ஒரு நியாயம் இருக்கும். சினிமா இண்டஸ்ட்ரியில போட்டி எங்கேயிருந்து வந்தது? ஒரே படத்துல ஒரே கேரக்டரை ரெண்டு ஹீரோயின்ஸ் பண்ணினா அது போட்டி. ஸோ... நான் நடிக்கிற அந்தப் படத்துல அந்த சீன்ல யார் பெஸ்ட்ங்கிற கேள்வி வரும்போது, ரெண்டு பேருக்கும் தன்னோட பெஸ்ட்டைக் கொடுக்கணும்கிற எண்ணம் வரும். அப்படிப் பார்த்தா என்கூட மேக்ஸிமம் ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஷேர் பண்ற ஹீரோஸ்தானே எனக்குப் போட்டி?''

``கிளாமர் பாலிசி?''

``ரொம்பக் குட்டியா ஒரு டிரெஸ் போட்டுக்கிட்டு இடுப்பைக் காட்டி நடிக்கவேண்டியிருக்குனு வெச்சுக்குவோம். அதைப் போட்டுப் பார்ப்பேன். அந்த டிரெஸ்ல என் இடுப்பு எனக்கு நல்லா தெரிஞ்சா மட்டும்தான் அந்த டிரெஸ் ஓகே. இல்லைன்னா பண்ண மாட்டேன். எனக்கு ஆஃபர்ஸ் வரும்போதும் இந்த செல்ஃப் அனாலிசிஸ்தான் ஹெல்ப் பண்ணுது. இந்த கேரக்டரை நான் பண்ணலாம்னு மனசு சொன்னா மட்டும் ஓகே சொல்வேன். இந்தப் படம், இந்த கேரக்டர் பண்றதால் எதிர்காலத்துல என்னவெல்லாம் நடக்கும்னு யோசிக்க மாட்டேன்.  அந்தப் படம் பண்ணும்போது நான் ஹேப்பியா இருப்பேனாங்கிறதுதான் முக்கியம்.

அடுத்த கட்டுரைக்கு