Published:Updated:

“காதலுக்கு பொசுக்குனு ஓ.கே சொல்ட்டாங்க!” - ரியோவின் காதல் கதை

சுஜிதா சென்
“காதலுக்கு பொசுக்குனு ஓ.கே சொல்ட்டாங்க!” - ரியோவின் காதல் கதை
“காதலுக்கு பொசுக்குனு ஓ.கே சொல்ட்டாங்க!” - ரியோவின் காதல் கதை

ன் மியூசிக் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்குவதில் வெரைட்டி காட்டி ரசிகர்களை ஈர்த்த விஜே ரியோ ராஜ். தற்போது `சரவணன் மீனாட்சி’ தொடரில் லீட் ரோலிலும், விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோவிலும் கலக்கிவருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டி வரும் இவரிடம், `ஸ்மால் இன்டர்வியூ' எனக் கேட்டபோது, ``சொல்லுங்க ஜி... சொல்லுங்க!'' என்று உற்சாகமானார். கூடவே அவரின் மனைவி ஸ்ருதியும் இருக்க, டபுள் ஹேப்பி ரியோவுக்கு. 

“முதல்ல சன் மியூசிக், இப்போ விஜய் டிவி.  இந்த ரெண்டு சேனல்களில் எதில் வேலைபார்க்கப் பிடிச்சிருக்கு?"

``சன் மியூசிக் ஆல் டைம் ஃபேவரைட். தினமும் சன் டிவி வாசல்ல வாய்ப்புக்காக நிற்பேன். சன் டிவி கொடுத்த வாய்ப்பை எப்பவுமே மறக்க மாட்டேன். அதுமட்டுமில்லாம, விஜய் டிவி-யில் `புதிய முகம்'னு ஒரு ஷோ பண்ணாங்க. புதுசா நடிக்க வர்றவங்களை மீடியாவுக்கு அறிமுகப்படுத்துறதுதான் அந்த ஷோவின் நோக்கம். நான் அதுல டைட்டில் வின்னர். அதை வெச்சுதான் விஜே வாய்ப்பு வந்துச்சு. சன் மியூசிக்கில் ஸ்க்ரிப்ட் எழுதுவதில் ஆரம்பித்து, ஷோவை எப்படிக் கொண்டுபோகணும்கிறது வரை எல்லாமே என்னோட விருப்பம்தான். தினமும் நடக்கிற சம்பவங்களை ஒரு பையனால் மக்களுக்கு எப்படி சுவாரஸ்யமான நியூஸா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்கிறதை ஒன்-லைனா வெச்சு ஓப்பனிங் ஷோ பண்ணேன். அப்புறம், விஜய் டிவி சீரியலில் ஸ்க்ரிப்ட்டுக்குத் தனி ஆள் இருக்கிறதுனால, நம்மளோட ஒரிஜினாலிட்டி அதுல தெரியாது. மற்றபடி நான் தொகுத்துவழங்குற ஷோ, எந்த சேனலில் இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்."

“உங்களோட குடும்பம் பற்றிச் சொல்லுங்க..?”

``அவங்க எல்லாரும் ஈரோடுல இருக்காங்க. அப்பா டிரைவர், அம்மா டெய்லர். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததுனால வேலைக்குப் போக முடியலை. அம்மா இப்பவும் வேலைக்குப் போயிட்டிருக்காங்க. என்னோட தம்பியும் அம்மாகூடவே வேலைக்குப் போறான். நான் இன்னும் அதிகமா சம்பாதிச்சு, கூடியசீக்கிரமே குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவரணும்.”

“உங்க கல்யாணத்துக்கு வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சாங்களா?''

“அப்படித்தான் எதிர்பார்த்தேன்.  ஆனா, பொசுக்குன்னு வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. அதுக்குக் காரணம், நான் மீடியாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஸ்ருதி பழக்கம். கஷ்டகாலத்துல என்கூட இருந்ததுனால வீட்ல எல்லாருக்குமே அவங்களை ரொம்பப் பிடிக்கும்."

"அதுவும் இல்லாம, இப்படியொரு அழகான பொண்ணு கிடைச்சா யார்தான் வேணாம்னு சொல்வாங்க?'' என்று இடையில் கலகலத்த ஸ்ருதியிடம்,

“நீங்கதான் மொதல்ல லவ் சொன்னீங்களாமே... இப்போ சொல்லுங்க ரியோவை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?"

“அவர், காதலைச் சொல்லக் கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தார். நான்தான் முதல்ல காதலைச் சொன்னேன். அவரோடு ஷூட்டிங் ஸ்பாட் எல்லாத்துக்கும் போயிடுவேன். அவர் கூடவே இருப்பேன். அவ்வளோ லவ். அது எப்பவுமே குறையாது" என்று கூறிவிட்டு வெட்கத்தால் முகம் சிவந்தார்  ஸ்ருதி.

“நீங்க பேட்டி எடுத்த பிரபலங்களில் மறக்க முடியாத நபர்கள்?'' - என ரியோவிடம் கேட்டதற்கு...

“விஜய் சேதுபதி அண்ணா அண்ட் சிவகார்த்திகேயன் அண்ணா. ரெண்டு பேர்கிட்டயுமே எந்தக் கேள்வி கேட்டாலும் செம ஜாலியா பதில் சொல்வாங்க. குறிப்பா, படம் ரிலீஸ் டைம்ல எடுக்கிற புரோமோஷன் ஷோக்களில், எல்லா நடிகர்களும் டென்ஷனா இருக்கிறது வழக்கம். அதை இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஈஸியா ஹேண்டில் பண்ணுவாங்க."

“நீங்க சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் போட்ட பிறகு, `ஏன்தான் இதைப்  போட்டோம்'னு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?” 

“மொதல்ல ஏதாவது சமூகப் பிரச்னைப் பற்றி ஸ்டேட்டஸ் போட்டாலே `நீ யாரு இதைப் பற்றிப் பேச?'னு கேக்குறாங்க. சமூக வலைதளங்களை நாமெல்லாம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்துல, நம்ம போஸ்ட் பண்ற எல்லாத்தையுமே  நல்லவிதமா பார்த்தாங்க. ஆனா, இப்போ எல்லாருக்கும் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கு. எதை வேணும்னாலும் கமென்ட் பண்ணலாம்னு நினைக்கிறாங்க. அது குறிப்பிட்ட நபரைக் காயப்படுத்துமா, இல்லையாங்கிறதைப் பற்றி யாரும் யோசிக்கிறதே இல்லை. அதனால என்னைப் பற்றிய அப்டேட்ஸ் மட்டும்தான் போடுவேன்."

“ரச்சிதாவுடன் நடித்த அனுபவம் பற்றி..."

ரச்சிதா  என்னோட மூணு வருஷம் சீனியர்.  இந்த சீரியல்ல எனக்கு முன்னாடில இருந்து நடிக்கறாங்க. அந்த மரியாதை எப்பவுமே இருக்கும்."

“உங்களைப் பற்றிய கிசுகிசு ஏதாவது...?"

“அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க. இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை" என்று கலாய்த்தபடி முடிக்கிறார் ரியோ.