Published:Updated:

'கோட் சூட் போட்டு ஆங்கரிங் பண்ணணும்..!' - கலக்கப்போவது யாரு சாம்பியன் பாலாவின் ஆசை #VikatanExclusive

'கோட் சூட் போட்டு ஆங்கரிங் பண்ணணும்..!' - கலக்கப்போவது யாரு சாம்பியன் பாலாவின் ஆசை #VikatanExclusive
'கோட் சூட் போட்டு ஆங்கரிங் பண்ணணும்..!' - கலக்கப்போவது யாரு சாம்பியன் பாலாவின் ஆசை #VikatanExclusive

விஜய் டி.வி-யின் 'கலக்கப்போவது யாரு' சீசன்-6 சாம்பியன்களாக வினோத், பாலா ஆகிய இருவரும் மதுரையில் நடந்த இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர். பாடி லாங்வேஜ் காமெடியில் 'தொடையைத் தட்டி'யே சாம்பியன் பட்டத்தைத் தட்டிய பாலாவிடம் பேசினோம். 

"காரைக்கால் பக்கத்துல நெடுங்காடுன்னு ஒரு கிராமம். அப்பா, அம்மா, அண்ணன்னு வீட்டுல நாலு பேர். அண்ணன் வெளிமாநிலத்துல வேலை பார்க்குறார். சின்ன வயசுலேர்ந்து பாட்டி வீட்டுலதான் தங்கிப் படிச்சேன். +2 முடிச்சதும் சென்னைக்குக் கிளம்பிட்டேன். சென்னைக்கு வந்ததுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. இங்க வந்து அமுதவாணன் அண்ணன் உதவியால கரஸ்ல பி.ஏ படிச்சேன்.' சடசடவெனப் பேசிவிட்டு ப்ரேக் விட்டார் பாலா. 

"எப்படி சென்னை வந்தீங்க..?"
"எங்க ஊர்ல நடந்த திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினரா அமுதவாணன் அண்ணன் வந்திருந்தார். அவரைப் பார்த்து, 'நான் மிமிக்ரியெல்லாம் பண்ணுவேன். என்னையும் உங்க கூடச் சேர்த்துக்கோங்கண்ணே...'னு சொல்லி மிமிக்ரி பண்ணிக் காட்டுனேன். அவரும் நல்லா பண்றடான்னு பாராட்டிட்டு, 'படிப்பு முடிச்சதும் என்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லிட்டுப் போனார். அவர் சொன்னபடி +2 முடிச்சதும் அவருக்கு போன் பண்ணினேன். 'கிளம்பி சென்னைக்கு வா... பார்த்துக்கலாம்'னு சொன்னார். அப்படியே மெட்ராஸுக்கு கிளம்பி வந்தாச்சு. இது அஞ்சாவது வருஷம். நான் சென்னைக்கு வந்த நாள்ல இருந்து என்னை அவர்தான் பார்த்துக்குறார். இப்போ நான் டைட்டில் வின்னர் ஆனது வரைக்கும் எல்லாப் புகழும் அமுதவாணன் அண்ணனுக்கே..."

"விஜய் டி.வி ஷோ-வில்  கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது எப்படி..?"
"சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் அண்ணன்களைப் பார்த்துத்தான் இப்படி நாமளும் ஆகணும்னு நினைச்சேன். அமுதவாணன் அண்ணன் கூட மூன்றரை வருஷமா அசிஸ்டென்ட்டா இருந்தேன். அவர் கூட விஜய் டி.வி- நிகழ்ச்சிகளுக்குப் போவேன். அங்க கூட்டத்துல ஒருத்தனா இருந்து கைதட்டுன எனக்கும் பலபேர் கைதட்டணும்னு ஆசைப்பட்டேன். அது இவ்வளவு சீக்கிரமா நடந்துடுச்சு. அமுதவாணன் அண்ணன் சொல்லித்தான் 'கலக்கப்போவது யாரு' ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அதுல செலக்ட் ஆகி பல பேர் வழிகாட்டுதல்களோட இப்ப வின்னரா ஆகிட்டேன்." 

" 'கலக்கப்போவது யாரு' எக்ஸ்பீரியன்ஸ் பற்றிச் சொல்லுங்களேன்..."
" கலக்கப்போவது யாரு சீசன்-6 ஆரம்பத்துல பிரசாத் ராஜ் எனக்கு பேரா (pair) பண்ணினார். அவர் எலிமினேட் ஆனதும், ஏஞ்சலின் வந்தாங்க. ஆனா என்னோட சேர்ந்து பண்ணமுடியாதுன்னு விலகிட்டாங்க. அப்புறம் ரக்‌ஷன் சில எபிஸோட்ஸ், விக்னேஷ் சிவா சில எபிஸோட்ஸ் எனக்குக் கைகொடுத்தாங்க. செமி ஃபைனல்ஸ்ல சரத் கம்பெனி கொடுத்தார். ஷோ-வில் எவ்ளோ கலாய்ச்சாலும் வாங்கிக்குவார். 'Give and take policy' ல தான் எங்க கம்பெனியே ஓடுச்சு. ஃபைனல்ஸ் போகும்போது ஜெயிச்சிடுவோமா இல்லையானு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆரம்பத்துல இருந்தே தாம்சன் சார் தான் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணினார். அவர் இல்லைனா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது."

"மறக்க முடியாத பாராட்டு..?"
"டி.வி-யில் 'கலக்கப்போவது யாரு' பார்த்துட்டு, என்னோட ஸ்கூல் டீச்சர் எல்லாம் என் நம்பரைத் தேடிப்பிடிச்சு வாங்கி, போன் பண்ணிப் பாராட்டினாங்க. ஊர்ல இருக்குற என் நண்பர்கள் ஒவ்வொரு எபிஸோட் முடிஞ்சதுக்கு அப்புறமும் கூப்பிட்டுப் பேசுவாங்க. இங்கே பலர் பாராட்டினாலும் இந்தப் பாராட்டுகள்தாம் மனசுக்கு நிறைவா இருக்கு."

"அடுத்து என்ன பண்ணலாம்னு ஐடியா..?"
"விஜய் டி.வி-யில் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துக்கணும். என்னைத் தொடர்ந்து என்கரேஜ் பண்ற நிறைய பேர் அங்கதான் இருக்காங்க. ஒவ்வொரு எபிஸோட்லயும் ஊக்கப்படுத்துன மகேஷ் அண்ணா, ப்ரியங்கா அக்கா, ஆர்த்தி அக்கா, எது தப்பு எது சரின்னு சொல்லிக்கொடுக்கிற சேது அண்ணா, 'உன்னைச் சீக்கிரம் சினிமாவுல பார்க்கணும்டா தம்பி'னு சொல்லிக்கிட்டே இருக்குற பாலாஜி அண்ணா எல்லோர் கூடவும் சேர்ந்து இன்னும் நிறைய கத்துக்கணும். ஒரு நல்ல காமெடியனா வளரணும். கோட் சூட்லாம் போட்டுக்கிட்டு நிகழ்ச்சி நடத்துற ஆங்க்கர் ஆகணும். அதான் என் ஆசை." 

"உங்க வெற்றிக்குப் பின்னாடி யார் இருக்கா..?"
"என்னோட வளர்ச்சிக்குக் காரணம் நான் வளர்ப்புத்தாயா நினைக்கிற ராஜீ அக்கா. அவங்க என் தூரத்துச் சொந்தம். நான் என்ன உதவி கேட்டாலும் தட்டாம செய்வாங்க. பல நேரங்களில் பணத்திற்காக கஷ்டப்படும்போது எல்லாம் எனக்கு உதவி செஞ்சவங்க. என் வாழ்நாளில் மறக்கக்கூடாதவர்கள் ராஜீ அக்கா, அமுதவாணன் அண்ணன், தாம்சன் சார் ஆகியோர்தான். கஷ்டப்படுற குடும்பப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு உதவி செய்ற அத்தனை பேருக்கும் நன்றி சொல்லணும்" என நெகிழ்ந்தபடியே பேசி முடித்தார் பாலா. 

'கலக்கப்போவது யாரு சீசன்-6 ஃபைனலில் பாலாவின் பெர்ஃபார்மன்ஸைப் பார்க்க...