Published:Updated:

டிவி ரிமோட்டை உங்க கன்ட்ரோலுக்கு எடுத்துடுங்க பாஸ்! வீக் எண்ட் நிகழ்ச்சிகள்!

டிவி ரிமோட்டை உங்க கன்ட்ரோலுக்கு எடுத்துடுங்க பாஸ்! வீக் எண்ட் நிகழ்ச்சிகள்!

இந்த வார டிவி நிகழ்ச்சிகளின் பெரும்பகுதி சென்ட்மென்ட் படங்களுக்குத்தான். TNPL கிரிக்கெட் மேட்ச் ஜூலை 22 -ம் தேதியில் இருந்து ஆரம்பமாகிறது. அதை நினைவுகூறும் வகையில் ஸ்போர்ட்ஸ் சேனல்களில், 2016ஆம் ஆண்டின் சிறந்த TNPL மேட்ச்களின் வரிசையை ஒளிபரப்புவதற்கு தினமும் மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வார இறுதியை என்ஜாய் செய்ய, பெஸ்ட் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களின் லிஸ்ட் இதோ.

மூவீஸ் ஓகே: 'டெர்மினேட்டர்-3 ரைஸ் ஆஃப் தி மிஷின்ஸ்', சனிக்கிழமை, மதியம், 12.05:

அர்னால்டு படங்களில் இயந்திரங்களின் வித்தையைக் காட்டிய 'டெர்மினேட்டர்' மில்லியன் டாலர் ஹிட். ஆக்ஷனுடன் கொஞ்சம் ரொமாண்டிஸத்தைக் கலந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தன் மனைவியை ரோபோட் அட்டாக்கிலிருந்து காப்பாற்ற அர்னால்ட் முயலும் போது என்னென்ன இன்னல்களைச் சந்திக்கிறார், அதை அப்படி சரி செய்கிறார் என்பதுதான் கதை.

சோனி மேக்ஸ்: 'ரோபோட்' சனிக்கிழமை, மதியம், 1.26:

தமிழில் மாஸ் ஹிட்டடித்த சயின்ஸ் பிக்க்ஷன் படம்தான் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன். அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே வளர்ச்சிக்கு வழிவகுத்தாலும், இன்னொரு பக்கம் அந்த வளர்ச்சியே பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதற்கு மனித சமூகம் பலியாக நேருமா? என்பதை பிரமாண்ட தயாரிப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த ஆக்ஷன் ஜானர் எந்திரன் படத்தை ஹிந்தியிலும் ஒரு முறை பார்க்கும் வாய்ப்பைத் தந்துள்ளது சோனி மேக்ஸ்.

HBO: 'குங்ஃபு பாண்டா-2' சனிக்கிழமை, மதியம், 3.11:

ஆக்ஷனுக்கும், காமெடிக்கு பஞ்சமே இல்லாத படம் என்றால் அது 'குங்ஃபு பாண்டா'தான். சீனாவைக் கைப்பற்றுவதற்கும், குங்ஃபூவை அழிப்பதற்கும் எப்போதும் ஒரு ரவுடி கும்பல் சுற்றிக்கொண்டே இருக்கும். அதை எப்படி ஹீரோவான பாண்டா தடுத்து நிறுத்துகிறான் என்பதை குழந்தைகள் பாணியில் கூறியுள்ளனர். 

HBO: '10,000 BC' சனிக்கிழமை, இரவு, 8.11:

'யாகல்' என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆதிகால ரொமான்டிக்-திரில்லர் மூவீ. மம்மூத்களை வேட்டையாடுவதில் திறமை கொண்ட 'யாகல்' இனத்தவர்களில் 'டிலே' என்பவன் தனி ஆளாக ஒரு மிகப்பெரிய மம்மூத்தை வேட்டையாடி மக்களின் கொண்டாட்டத்துக்கு ஆளாகிறான். இப்படி ஹீரோவான டிலேவின் வாழ்க்கையில் எனென்ன திருப்பங்கள் நிகழ்கிறது? என்பதையும், வரலாற்றுக்கு முந்தய வேட்டையாடுதல் சமூகத்தின் வாழ்க்கை முறையையும் தத்ரூபமாக எடுத்துக் காட்டிய படம். 

HBO: 'பேட்மேன் Vs சூப்பர்மேன்-டான் ஆஃப் ஜஸ்டிஸ்' ஞாயிறு, காலை 10.19: 'சூப்பர்மேன்' சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறான் என்றும் , அவனின் அபார சக்தியை பயன்படுத்தத் தெரியாமல் தவறான வழியில் செல்கிறான் என்றும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறான் ப்ரூஸ் வெயின். பிறகு இந்த பிரச்னைகளை எப்படி பேட்மேன் அவதாரத்தில் வந்து சரி செய்கிறான் என்பதுதான் கதையே. முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த இந்த கதையில் ஆமி அடைம்ஸும், கால் காடொட்டும் ரொமான்டிக் மசாலாவாக திரையில் தோன்றுவதெல்லாம் வேற லெவல்.

ஜீ சினிமாஸ்: 'ஹம் ஆப்கே ஹேன் கௌன்' ஞாயிறு, காலை, 10.59:

மற்ற மொழி படங்களுள் தமிழ் மக்களை அதிகம் ஈர்த்தது இந்த ஹிந்தி படம்தான். ப்ரேம்-நிஷா காதல் கதையும், கொண்டாட்டத்துக்கான பாடல் காட்சிகளும், இடையிடையே அனுப்பம் கீரின் காமெடி காட்சிகளும் கூத்தாடிக் குடும்பத்தின் வேற லெவல் பாஸ். 

சோனி பிக்ஸ் HD: 'மின்னின்ஸ்' ஞாயிறு, காலை, 11.32:

மின்னியன் கெவின், ஸ்ட்ரூவட் மற்றும் பாப் தங்களுக்கான ஒரு புதிய மாஸ்டரைத் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். அவனை இந்த உலகத்திற்கு அதிபதியாக்கவும் நினைக்கின்றனர். அப்படி உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து தங்களுக்கான மாஸ்டரைத் தேர்வு செய்யும் நேரத்தில், வில்லன் ஸ்கார்லெட் அவர்களிடம் இருந்து அனைத்து சக்தியையும் பறிக்கப் பார்க்கிறான். பின்பு அவனை எப்படி சமாளித்து உலகத்தைக் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இந்த அனிமேஷன் கதை. 

விஜய் டிவி: 'இன்டென்சிவ் காமெடி யூனிட்' ஞாயிறு, மதியம், 12.00:

யூ-டியூபில் கலக்கிக் கொண்டிருக்கும் 'புட் சட்னி' குழுவினர் தற்போது விஜய் டிவியிலும் காமெடி ஷோ நடத்தவுள்ளனர். வரும் ஜூலை 2 முதல் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு இந்த காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

ஸ்டார் கோல்ட்: 'சிங்கம்' ஞாயிறு, மதியம், 1.25:

சூர்யாவுக்கு பதிலாக அஜய் தேவ்கனும், அனுஷ்காவுக்குப் பதிலாக காஜல் அகர்வாலும் என்று பாலிவுட் களத்தில் தமிழ் சிங்கத்தை ரீமேக் செய்துள்ள இந்தப் படம் ஹிந்தியிலும் தெறி ஹிட்தான்.

சன் டிவி: 'சந்தோஷ் சுப்பிரமணியம்', ஞாயிறு, மதியம், 3.00:

ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ் ராஜ், சீதா மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் சென்டிமென்ட் காமெடி திரைப்படம். தந்தை மகனுக்குமான உறவையும், காமெடி கலந்த காதலையும் இயக்குனர் ராஜா செம்ம ஜாலி கதைக் களத்தில் கூறியுள்ளார். 

சன் டிவி: 'மருது', ஞாயிறு, மாலை, 6.30:

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் ராதா ரவி நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம். வீரம், செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த மசாலா கதையை விறு விறு தளத்தில் கூறப்பட்டுள்ளதுதான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். 

ஸ்டார் மூவீஸ்: 'லைப் ஆஃப் பை' ஞாயிறு, இரவு, 9.00:

யான் மார்டெலின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமெரிக்கப் படம். நடுக்கடலில் பெங்கால் புலியுடன் ஒரு திரில்லர் பயணமும், அவ்வப்போது நினைவில் எழும் காவியக் காதலும், கூடவே பையின் வாழ்க்கைப் பயணமும் என்று கதைக்களம் மாறி மாறி பார்பவர்களைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. இது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளின் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் மூவீ. 

WB: 'தி மாட்ரிக்ஸ்' ஞாயிறு, இரவு, 10.45:

360 டிகிரி கேமரா ஆங்கிள் டெக்னாலஜியை உலகத்திற்கு முதன் முறை அறிமுகப்படுத்திய படம் இதுதான். தாமஸ், கணினிகளைப் பயன்படுத்தி புதிய புரட்சி ஒன்றைக் கையாளுகிறான். அப்போது உலகத்தையே ஆளும் சக்தி படைத்த 'மாட்ரிக்ஸ்' என்ற ஒரு புதிய சிஸ்டம் உருவாகிறது. அந்த சிஸ்டத்தைப் பற்றிய ஆக்ஷன் சீக்வென்ஸ் நிறைந்த சயின்ஸ் பிக்ஷன் படம்.

சென்டிமென்ட் படங்கள், மேட்ச் ஹை-லைட்ஸ் மற்றும் காமெடி நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த வீக்எண்ட் ஜாலியாக அமைய வாழ்த்துகள். ஹேப்பி வீக்எண்ட்...!

அடுத்த கட்டுரைக்கு