Published:Updated:

''நமிதா டாய்லெட் க்ளீன் பண்றத பார்த்து கண்கலங்கிட்டேன்'' - உருகும் கலா மாஸ்டர்! #BiggBoss

வே.கிருஷ்ணவேணி
''நமிதா டாய்லெட் க்ளீன் பண்றத பார்த்து கண்கலங்கிட்டேன்'' - உருகும் கலா மாஸ்டர்! #BiggBoss
''நமிதா டாய்லெட் க்ளீன் பண்றத பார்த்து கண்கலங்கிட்டேன்'' - உருகும் கலா மாஸ்டர்! #BiggBoss

``எந்த வம்புக்கும் போகாத பொண்ணு நமிதா. பல வருஷங்கள் என்கூட இருந்திருக்கா. அவளை விஜய் டி.வி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பார்க்கிறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு'' -  நமிதா பற்றி சிலாகித்தவாறு பேசுகிறார் கலா மாஸ்டர். 

'' 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நடுவராக இருந்திருக்கா; பல நிகழ்ச்சிகளுக்கு நமிதாவும் நானும் சேர்ந்து போயிருக்கோம். இப்படி இதுவரைக்கும் கிட்டத்தட்ட பத்து வருஷங்களா நமிதாவைத் தெரியும். அவளை மாதிரி ஒரு நல்ல பொண்ணை நிஜமா நீங்க பார்க்க முடியாது. எதையும் வெளிப்படையா பேசுவா. கத்துக்கிற ஆர்வம் அவகிட்ட நிறைய இருக்கு. ஒருத்தரோட ஒருதடவை பழகிட்டாளே, அவங்க கேரக்டரை நல்லா தெரிஞ்சுக்குவா. குறிப்பிட்ட நேரத்துக்கு, சொன்ன டைம்ல வந்து நிப்பா. தன் கண் முன்னாடி தப்பு நடக்குதுனா அதை கண்டிக்கிற, அவங்களுக்கு அட்வைஸ் பண்ற டைப். 

`பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு அவள் போகும்போதுகூட, 'நிறைய பேர் என்னோட நடிப்பை வெச்சு என்னைப் பார்த்திருப்பீங்க... இனிமேதான் என்னோட உண்மையான கேரக்டரைப் புரிஞ்சுக்கப் போறீங்க'னு சொன்னா. நமிதா அந்த நிகழ்ச்சியில் இருப்பதாலும், என் அக்கா பொண்ணு காயத்ரி இருப்பதாலும் `ஹாட் ஸ்டார்'லயாவது பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துடுவேன். அந்த நிகழ்ச்சியில் நமிதா, ஜூலியைப் பத்தி பேசியிருக்கானு கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகு நிகழ்ச்சியைப் பார்த்தேன். 'ஜூலி நல்ல பொண்ணுதான். அவங்களுக்கு, தான் ரொம்ப ஒஸ்தி என்கிற எண்ணம் எப்பவும் இருக்கு. வாய்தான் அவங்களுக்குப் பிரச்னை'னு சொல்லியிருக்கா. ஒருத்தர் எப்படி நடந்துக்கிறாங்க என்பதை நமிதா சொல்லியிருக்கா. இதுல தப்பா எனக்கு எதுவும் தோணல. `சினிமாவுல இருக்கவங்க நல்லபடியா அமைதியா இருக்காங்க... ஜூலி நிறைய வாயாடுறாங்க'னு சிலர்  சொல்றாங்க. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கவங்க அவங்களுடைய ஒரிஜினல் கேரக்டராக இல்லாமல், பொறுத்துப் போகணும்னுதான் நினைச்சுப் பேசுவாங்க. 'சட்'னு வார்த்தையை விடக்கூடாதுனுதான் யோசிப்பாங்க. சில நேரங்களில் நம்மையும் மீறி வருவதை ஒண்ணும் பண்ண முடியாது'' என்றவர், 

''நமிதா மாதிரி பக்தியுடைய பொண்ணைப் பார்க்கிறது கஷ்டம். கிருஷ்ணர்னா அவளுக்கு அவ்வளவு இஷ்டம்! சரியான நேரமும், இடமும் கிடைக்கும்போது  'ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா' என எதைப்பத்தியும் யோசிக்காம மந்திரம் சொல்ல ஆரம்பிச்சுடுவா. தனியாக இப்படி மத்தவங்களோடு சேர்ந்து ஒரு ரூமில் தங்கும்போது கண்டிப்பாக பொறுமையும், அமைதியும் ரொம்ப அவசியம். நமிதா அதை சரியா கடைப்பிடிக்கிறானு நினைக்கிறேன். ஒருநாள் பாத்ரூமை எப்படி கிளீனா வெச்சுக்கிறதுனு அத்தனை பேருக்கும் டெமோ காட்டினாள். நிஜமா சொல்றேங்க... நானும் என் வீட்டில் டாய்லெட் கிளீன் பண்ணுவேன். அது வீட்ல இருக்கவங்களுக்கு மட்டும் தெரியும். ஆனால், தான் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வெச்சுக்கணும்னு நமிதா நினைக்கிறா. மத்த யாராக இருந்தாலும் இப்படி கிளீனிங்குக்கு முன் வருவாங்களானு தெரியல.இதிலிருந்து, தான்  நடிகையாக இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்யும்போது எல்லோரையும்போல தானும் சாதாரணமானவதான்னு புரியவெச்சிருக்கா. நான் அந்த நிமிஷம் கண்கலங்கிட்டேன். 

அதேபோல, நான் நடத்தும் டான்ஸ் நிகழ்ச்சிக்காக பிராக்டீஸ் பண்ணும்போது யாராவது விழுந்து அடிபட்டுக்கிட்டா, ஓடிப்போய்  அவதான் முதல் ஆளாக உதவி பண்ணுவா. 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் 'மச்சான்'னு சொல்லலாமானு நமிதா கேட்டா. நாங்க தாராளமா சொல்லலாம்னு சொன்னோம். இப்போவரைக்கும் நமிதானா 'மச்சான்' என்கிற வார்த்தை எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும்'' என்றவர் தொடர்கிறார்...

 ''என் அக்கா பொண்ணு காயத்ரி வீட்ல கிச்சன் பக்கம் எட்டிப்பார்த்தது இல்ல. காபிகூடப் போடத் தெரியாது. ஆனா, இந்த நிகழ்ச்சியில அத்தனை பேருக்கும் சமைச்சுப் போடுறா. காயத்ரி கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு நிறைய இடத்துல கண்கலங்கிட்டேன். நமிதாவும், காயத்ரியும் திக் ஃப்ரெண்ட்ஸ். செல்லமா வளர்ந்தப் பொண்ணு காயத்ரி. 'அந்த நிகழ்ச்சிக்குப் போய்தான் ஆகணுமா?னு கேட்டப்போ... `எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு'னு சொன்னா. அதற்குப் பிறகுதான் `ஓ.கே' சொன்னோம். எங்க பொண்ணு பிக் பாஸ் வீட்ல சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்குப் போதும்'' என்கிறார் கலா மாஸ்டர், கண்ணீர் மல்க.