Published:Updated:

“நான் கெட்டவார்த்தை எல்லாம் பேச மாட்டேங்க” - ‘As I'm Suffering From Kadhal’ தன்யா

“நான் கெட்டவார்த்தை எல்லாம் பேச மாட்டேங்க” - ‘As I'm Suffering From Kadhal’ தன்யா
“நான் கெட்டவார்த்தை எல்லாம் பேச மாட்டேங்க” - ‘As I'm Suffering From Kadhal’ தன்யா

“நான் கெட்டவார்த்தை எல்லாம் பேச மாட்டேங்க” - ‘As I'm Suffering From Kadhal’ தன்யா

‘7 ஆம் அறிவு', `ராஜா ராணி' போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்  தன்யா பாலகிருஷ்ணா. தற்போது `As I'm Suffering From Kadhal' என்ற வெப் சீரியலில் நடிக்கிறார். அவர் இந்த சீரியலின் ட்ரெய்லரில் சொன்ன அந்தக் கெட்டவார்த்தையே செம வைரலானாலும், அவர்மீது விமர்சனத்தையும் வைத்தது. நடிப்பு, விமர்சனம் என அவரிடம் விரிவாகப் பேசினோம்...

“எப்படி நடிக்க வந்தீங்க?”

“நான் ‘ஏவம்'லதான் தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்தேன். அங்கே நடிப்புப் பயிற்சி எடுத்ததோடு, முழு நேர வேலையும் பார்த்தேன். அப்பதான் `7 ஆம் அறிவு' படத்துக்கு ஆடிஷன் நடக்குதுனு கூப்பிட்டாங்க. நான் முதல்ல செலெக்ட் ஆகலை. அப்புறம் என்ன நினைச்சாங்கனு தெரியலை செலெக்ட் பண்ணினாங்க. அப்படித்தான் சினிமாவுக்குள்ளயே என்டர் ஆனேன். ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அடுத்து `காதலில் சொதப்புவது எப்படி?' படத்துல இயக்குநர் பாலாஜி மோகன் நடிக்கவெச்சார். அப்புறம் `நீதானே என் பொன்வசந்தம்', `ராஜா ராணி'ல நடிச்சேன். இப்ப லேட்டஸ்ட் `As I'm Suffering From Kadhal' வெப் சீரியல் பண்ணியிருக்கேன். தெலுங்குல ஒரு படத்துல லீட் ரோல்லயும் நடிச்சுட்டிருக்கேன்.'' 

''வெப் சிரியலில் நடிப்பதால் என்ன பயன்?''

''நாடகம், சினிமா, வெப் சீரியல் எல்லா பக்கங்கள்லயும் நடிப்பு ஒண்ணுதானே. அதுதான் நடிக்க வந்துட்டேன். இப்பவே வெப் சீரியலுக்குப் பெரிய பிசினஸ் உருவாகிடுச்சு. பாலாஜி மோகன், `வெப் சிரியல் பண்ணப்போறேன். நடிக்கிறீங்களா?'னு கேட்டார். முறையா ஆடிஷனில் எல்லாம் கலந்துக்கிட்டுதான் இந்த சிரியலுக்குள்ளயே வந்தேன். இன்னும் சொல்லப்போனால், இந்த சீரியலுக்கு உதவி இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கேன். காதல் சீரியல் என்பதால், ஆண், பெண் ரெண்டு பேருக்குமே வேற வேற எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால், ஒரு பொண்ணோட ஐடியா லவ்ல எப்படி இருக்கும்னு சீரியலுக்குக் கொண்டுவர நான் முடிஞ்ச அளவுக்கு உதவி செய்தேன்.''

''சீரியலில் கெட்டவார்த்தை எல்லாம் பேசி நடிச்சிருக்கிங்களே!''

''ஆமாங்க... இப்ப பொண்ணுங்க எல்லாருமே செம போல்ட். நிறைய பேரு கெட்டவார்த்தை பேசுறாங்க. நாமதான் நினைச்சுட்டிருக்கோம்... `பொண்ணுங்கன்னா பாவம், அப்பாவி. அவங்களுக்கு எதுவுமே தெரியாது'னு. அப்படியெல்லாம் இல்லைவே இல்லை. இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க, பசங்களுக்குச் சரிசமமா கெட்டவார்த்தை பேசுவாங்க; சண்டைபோடுவாங்க. அதனால, அந்த கேரக்டர் கெட்டவார்தை பேசுற மாதிரி அமைச்சிருப்போம். மற்றபடி நான் கெட்டவார்த்தை எல்லாம் பேச மாட்டேங்க. ஆனா, நான் அப்படிப்  பேசி நடிக்கும்போது செம ஜாலியா இருந்தது. அந்தச் சுதந்திரத்தை உண்மையாகவே நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். இப்ப உண்மையான லவ்வர்ஸே மாறிமாறிக் கழுவிக் கழுவி ஊத்திக்கிறாங்க. இந்த இயல்பை அப்படியே சீரியலுக்குக் கொண்டுவரணும்னு வெச்சதுதானே தவிர, வேற எந்த நோக்கமும் இல்லைங்க.'' 

''உங்க குடும்பத்தினர் இந்த சீரியலைப் பார்த்தாங்களா... பார்த்துட்டு என்ன சொன்னாங்க?''

''அய்யயோ... இன்னமும் நான் யார்கிட்டயும் காமிக்கலை. எங்க அப்பாவுக்கு எப்படி கூகுள் போறதுன்னே தெரியாது. ஜஸ்ட் மேலோட்டமாக சீரியலுக்கான ரிவ்யூஸ் மட்டும் அப்பாகிட்ட காமிச்சேன். இனிதான் முழு சிரியலையும் காமிக்கணும். பார்த்தார்னா `ஏன் இப்படி கெட்டவார்த்தை எல்லாம் பேசி நடிச்சே?'னு திட்டுவார். ஆனா, என் நண்பர்கள் பார்த்துட்டு என்னைப் பாராட்டினாங்க. இப்படிச் சொல்வதால் பீத்திக்கிறேன்னு நினைக்கவேணாம். உண்மையாகவே சீரியல் ட்ரெய்லர் ரிலீஸ்  ஆன அன்னிகே எனக்கு அவ்வளவு  பாராட்டு கிடைச்சது.''

''சீரியல் பார்த்தவங்க உங்ககிட்ட என்ன சொன்னாங்க?''

''பார்த்தவங்க  முதலில் சொன்னது, `ஒரு பையன்னா பொண்ணுங்க பின்னாடி சுத்துறது. லவ் சொல்லி இம்பரஸ் பண்றது பழைய ஃபார்முலா மாதிரி இல்லாம, ரொம்ப புதுசா இருக்கு. இந்த ஜெனரேஷன் லவ்வர்களைப் பார்க்கிற மாதிரியே இருந்தது'னு சொன்னாங்க.  கல்யாணம் ஆன பொண்ணுங்க, `என் புருஷனை இப்படித்தான் நான் கழுவிக் கழுவி ஊத்துவேன். உங்ககூட என்னை ரிலேட் பண்ணிக்க முடிஞ்சது'னு சொன்னாங்க. இது சந்தோஷம்தானே... இப்பவே வெப் சீரியலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. எதிர்காலத்துல இது இன்னமும் அதிகமாகும்.''

''நீங்க ரொம்பக் குறைவான படத்தில்தான் நடிச்சிக்கீங்க. இதுக்கு என்ன காரணம்?''

''எனக்கு நிறைய குட்டிக் குட்டி கேரக்டர்கள்தான் கொடுத்தாங்க. அந்த மாதிரி சின்ன ரோலில் நடிப்பதற்கு, எனக்கு கொஞ்சம்கூட இஷ்டமில்லை. எனக்கு ஸ்கோப் கிடைக்கிற கேரக்டருக்காகக் காத்திருப்பதால் கொஞ்சம் லேட் ஆகுது. தட்ஸ் இட்.''

''அப்ப `ராஜா ராணி' படத்துல மட்டும் குட்டி ரோலில் நடிச்சிருந்தீங்களே?''

''ஆங்... அது சின்ன கேரக்டர் கிடையாது. அது மட்டும் இல்லாம, முருகதாஸ் சார் என்னோட காட்ஃபாதர். அவர்தான் இந்தப் படத்துல நடிக்க என்னைக் கூப்பிட்டார். `படத்துல சாங் ஒண்ணு வரும். அதுல நீங்க இருப்பீங்க. அது உங்க லைஃப்லாங் மறக்க முடியாத மாதிரி இருக்கும்'னு அட்லி சொன்னார். அதே மாதிரியே `சில்லென ஒரு மழை துளி...' பாடலில் நானும் வருவேன். அந்தப் பாட்டைப் பற்றி இன்னமும் என்கூட பேசுறவங்க அதிகம்.  அதனால `ராஜா ராணி'யில என் கேரக்டர் வெயிட்டுதான் பாஸ்.''

''நடிகையாகவும் இருக்கீங்க. உதவி இயக்குநராகவும் வேலை செய்றீங்க. எதிர்காலத்துல டைரக்‌டர் ஆகணும்னு ஆசை இருக்கா?''

''இருக்கு. எதிர்காலத்தில் நிச்சயம் படம் இயக்குவேன்!”

அடுத்த கட்டுரைக்கு