பிஞ்சிலே பழுத்தது என சிலரைச் சொல்வார்கள். ஆனால் இயக்குநர் சேவியர் டோலனை பிஞ்சிலே பழுத்து கொட்டை போட்டது என தாராளமாகச் சொல்லலாம். கனடாவின் இந்த இளம் இயக்குநருக்கு வயது 25. நான்கு ஷாக்கிங்கான படங்களை இயக்கி முடித்தவர், இப்போ ஐந்தாவது படத்தில் பிஸி.

முதல் படம் 'ஐ கில்டு மை மதர்’ (I Killled my mother) படத்தை இயக்கியபோது 20 வயதுதான். ஸ்கிரிப்ட்டை எழுத ஆரம்பித்தபோது வெறும் 18. காமெடியும் எமோஷனலும் கலந்துகட்டி தாய்க்கும் மகனுக்குமான அன்பை பவர்ஃபுல்லாய் காட்டியிருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்று உயரிய விருதுகள். அடுத்த வருடமே 'ஹார்ட் பீட்ஸ்’ (பிமீணீக்ஷீtதீமீணீts)என்ற படத்தை இயக்கினார். ஓர் ஆண், ஒரு பெண் என இருவரின் வாழ்க்கையில் வருகிறான் மூன்றாவதாய் ஓர் ஆண். அந்த ரெண்டு பேரும் அவன் மேல் காதல்கொள்கிறார்கள். ஒரு பக்கம் ஓரினச்சேர்க்கை. இன்னொரு புறம் ஆண்-பெண் காதல். ஆனால் இரண்டுமே நியாயமான காதல்தான் என தெள்ளத் தெளிவாய் தன் கதையில் சொல்லி மனசை அள்ளினார். செம ஜாலியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் கண்டங்கள் தாண்டி ஹிட் அடித்தது.

இரண்டாவது ஹிட் தந்த உற்சாகத்தில் 2012-ல் 'லாரன்ஸ் எனிவேஸ்’ (Laurence Anyways) என்ற படத்தை இயக்கினார் டோலன். திருநங்கைக்கும் ஒரு பெண்ணுக்கும் நிகழும் காதலை படுஎமோஷனலாக சொல்லி இருந்தார். 2012 டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கனடா படத்துக்கான விருதினைத் தக்கவைத்தது இந்தப் படம். சிறந்த திரைக்கதைக்காக டோலனுக்கும் விருது கிடைத்தது.

'ஒரே எமோஷனல் ஏகாம்பரமாக படம் எடுத்துத்தள்ளுகிறோமே... இது தப்பாச்சே’ என்று நினைத்தாரோ என்னவோ போன வருடம் டோலன் எடுத்திருந்த படம் 'டாம் அட் தி ஃபார்ம்’!(Tom a la ferma) ( tom at the farm) செம த்ரில்லர். மியூஸிக்கே இல்லாமல் ஸ்பெஷல் எஃபெக்ட்டோடு மிரட்ட நினைத்து இயக்கி முடித்து, ஏதோ ஒன்று குறைவதை உணர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய கேரியல் யாரெட் என்ற இசையமைப்பாளரை பின்னணி இசைக்கச் செய்தார். டாலனுக்கு இப்போது எல்லா ஜானர்களிலும் படம் எடுக்க வரும் என நிரூபிக்கப்பட்டதால், கனடாவின் நம்பர் ஒன் இயக்குநர் அந்தஸ்துக்கு 25 வயதில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளார். இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒரு சிறப்பம்சம்... 'லாரன்ஸ் எனிவேஸ்’ படத்தைத் தவிர, மற்ற படங்களில் டோலன் பிரதான கேரக்டராக நடித்திருப்பதுதான். குழந்தை நட்சத்திரமாக, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இதோ இப்போது ஒரு நாட்டின் இளம் முன்னணி இயக்குநராக கலக்கி வரும் டோலனை கனடாவின் கமல்ஹாசன் என சொல்லலாமா?

- ஆர்.சரண்