Published:Updated:

'2003 ல் ரிஜெக்டானேன்.. 2017ல செலக்டானேன்! எப்படி?' - நந்தினி' காயத்ரி ஜெயராம்

வே.கிருஷ்ணவேணி
'2003 ல் ரிஜெக்டானேன்.. 2017ல செலக்டானேன்! எப்படி?' - நந்தினி' காயத்ரி ஜெயராம்
'2003 ல் ரிஜெக்டானேன்.. 2017ல செலக்டானேன்! எப்படி?' - நந்தினி' காயத்ரி ஜெயராம்

ன் டி.வி யில் ஒளிபரப்பாகிவரும் 'நந்தினி' சீரியலில் தவிர்க்க முடியாத ஒரு கதாபாத்திரமாக மாறியிருக்கிறார். 2000 -ம் ஆண்டு மிஸ் இந்தியா வின்னரான காயத்ரி ஜெயராம், பல வருடங்கள் கழித்து தன் கெரியர் துவங்கிய இடமான சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பெங்களூருவில் இருப்பவரிடம் போனில் பேசினோம். 

சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருப்பது எப்படியிருக்கு? 

''வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இப்போ புரிந்திருக்கிறேன். சன் டி.வி 'இளமை புதுமை', விஜய் டி.வியில் 'டெலிபோன் மணிபோல்' போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக வேலை பார்த்தேன். அப்படிக் கிடைத்த பேரும் புகழையும் வைத்து மிஸ் இந்தியா போட்டிக்கு நுழைந்தேன். 2000ம் ஆண்டில் மிஸ் இந்தியா பட்டம் வென்றேன். 2003 ம் ஆண்டு பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிற படத்துக்கு ஹீரோயினாக புக் செய்யப்பட்டேன். அதே நேரம் மோகன்லால் படத்தில் நடிக்க வேண்டியதிருந்ததால் பிரசாந்த் படம் டிராப் ஆகிவிட்டது. அந்த படத்தோட டைரக்டர் ராஜ் கபூர்.

அதுக்குப் பிறகு பிரபுதேவா, விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களில் நடிச்சேன். பிஸியாக இருக்கும்போதே திருமணம், குழந்தைகள் என செட்டிலானேன். பல வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ராஜ் கபூர் போன் செய்து 'நந்தினி' தொடரில் நடிக்க முடியுமானு கேட்டார். அவர் கூட நான் வொர்க் பண்ண முடியாமல் போன நிகழ்வையும் சொல்லி, 'இப்ப நீங்க கொடுக்கிற ரீ என்ட்ரி பக்கா மாஸாக இருக்க இந்த சீரியல் உதவும். பண்றீங்களா’னு கேட்டார்.  'சீரியல்னாலே மாமியார் கொடுமை, அழுகாச்சியாகத்தான் இருக்கும். எனக்கு அந்த கான்சப்ட் கொஞ்சமும் பிடிக்கல சார். வேண்டாம்'னு சொல்லிட்டேன். 'ஒரு முறை கதையை கேட்டுப் பாருங்க’னு சொல்லி கதையை உதவியாளர் மூலமா சொல்ல வைத்தார். அவ்வளவு சுவாரஸ்யமா இருந்தது. சம்பளம், ஷூட்டிங் பத்தி கேட்டுக்காம ஓகே சொல்லிட்டேன். 2003ல அவர் படத்துல நடிக்க முடியாம ரிஜெக்ட் ஆனேன்.. 2017ல அவரோட சீரியல்ல நடிக்க செலக்டாகிட்டேன்''. 

இந்த சீரியலில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டீர்களா? 

''நிஜமாகவே சொல்லணும்னா, என் கண்களுக்காகத்தான் அந்த கதாபாத்திரத்தையே கொடுத்திருக்காங்கனு நினைக்கிறேன். என்னோட கண்களை மையப்படுத்தித்தான் அதிக சீன்கள் எடுக்கறாங்க. அதனால் அடிக்கடி நானே என் கண்களை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். இதுவரைக்கும் நான் பண்ணாத ரோல் வேற... ஸோ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது...''

படங்களில் வாய்ப்புகள் வருவதில்லையா? 

''வாய்ப்புகள் வந்துட்டுத்தான் இருக்கு. ஆனா என் பசங்க முக்கியமா தெரியுறாங்க. அவங்களுக்கு பத்து வயசாகிட்டா சினிமா, சீரியல்ல முழு நேரமா இறங்க ஐடியா பண்ணியிருக்கேன்''. 

உங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்லுங்களேன்... 

இதுவரைக்கும் என் குழந்தைகளின் படத்தைக் கூட யார்க்கிட்டயும் ஷேர் பண்ணினது கிடையாது. அது என் தனிப்பட்ட விஷயம்னு நினைக்கிறேன். பையன் இஷன்க்கு ஆறு வயசு ஆகுது. பொண்ணு இனோராவுக்கு மூணு வயசு ஆகுது. அவங்ககூட நான் இருக்கணும்னு ஆசைப்படுறாங்க. பெங்களூருல அவங்களைத் தனியா விட்டுட்டு சென்னை வந்து நடிக்கிறது கஷ்டமா இருக்கு. இப்ப குஷ்பூ மேடம் என்ட்ரி கொடுக்கிறதுனால எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் கிடைச்சிருக்கு.''

விஜய் டி.வி ரியாலிட்டி ஷோ பண்ணீங்களே அந்த அனுபவம் பற்றி.. 

'' த்ரிலிங்கான விஷயம் செய்ய ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அந்த நிகழ்ச்சிக்கு ஓ.கே சொன்னேன். என் குழந்தைகள் டி.வி பார்க்க விரும்பமாட்டாங்க. ஆனா நான் பண்ணின த்ரிலிங் பத்தி தெரிஞ்சுகிறதுக்காக டிவி பார்த்தாங்க. ரியாலிட்டினாலே நிறைய பிரச்னைகள், சண்டைகள் இருக்கத்தான் செய்யும். எல்லாமே ஒரு அனுபவம்தானேனு எடுத்துக்கிட்டேன்''. 

உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இல்லைனு கேள்விப்பட்டோமே.. 

''ஆமாம். பொதுவாக ஒரு பொண்ணு பையனோட காபி சாப்டாலே தப்பா பேசுற உலகம் இது. அதனாலேயே சினிமா, ஆடியோ வெளியீடு மாதிரி எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கமாட்டேன். அதனாலேயே எனக்கு நண்பர்கள் ரொம்பக் குறைவு. மத்தப்படி, ஷூட்டிங் ஸ்பாட்ல நல்லாவேப் பேசி , சிரிச்சுட்டு இருப்பேன். அது ஷூட்டிங் ஸ்பாட்டோடு முடிந்திடும்''. 

சினிமாவில் உங்களை மறுபடியும் எப்போது பார்க்கலாம்.. 

’’நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கு. 'த்ரிஷ்யம்' படத்தில் வரும் இன்வெஸ்டிகேஷன் கதாபாத்திரம் மாதிரியான ரோல்கள்தான் கடந்த மூன்று மாதங்களாக தொடந்து வந்துக்கிட்டே இருக்கு. அது ஏன்னு தெரியல. ஆனால் எனக்கு அப்படி ஒரு ரோலில் நடிக்க விருப்பம் இல்லை. சாதாரண ரோலிலும் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. 'நந்தினி' சீரியலில் கிடைத்தமாதிரி ஒரு வாய்ப்பு சினிமாவிலும் கிடைத்தால் கண்டிப்பாக மறுக்காமல் ஓகே சொல்லிடுவேன்'’ என்றார் காயத்ரி ஜெயராம்.