Published:Updated:

'' ‘விக்ரம் வேதா’ படத்தில் என் கேரக்டர் சஸ்பென்ஸ்!'' - நடிகர் கதிர்

'' ‘விக்ரம் வேதா’ படத்தில் என் கேரக்டர் சஸ்பென்ஸ்!'' -   நடிகர் கதிர்
'' ‘விக்ரம் வேதா’ படத்தில் என் கேரக்டர் சஸ்பென்ஸ்!'' - நடிகர் கதிர்

கணவன் மனைவியான இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி எடுத்திருக்கும் திரைப்படம் 'விக்ரம் வேதா'.  மாதவன், விஜய் சேதுபதி என இரண்டு ஸ்டார் ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 


இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாதவனுடன் வரலட்சுமி மற்றும் 'மதயானைக் கூட்டம்' படத்தில் நடித்த கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இரண்டு பெரிய ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடித்திருக்கும் கதிரை படத்தின் சுவாரஸ்யத்தை தெரிந்துக்கொள்ள தொடர்புகொண்டோம்.


''இந்தப் படத்தின் கதையைப் படத்தின் இயக்குநர் புஷ்கர் -காயத்ரி என்னிடம் சொல்வதற்கு முன்பு, 'உனக்காக ஒரு கேரக்டர் இருக்கு. இதில் நீ பண்ணினால் நன்றாக இருக்கும்'னு விஜய் சேதுபதி அண்ணா என்னிடம் சொன்னார். நானும் 'புஷ்கர் காயத்ரியிடம் கதை கேட்டேன். என் கேரக்டர் பற்றி கேட்டவுடன் பிடித்திருந்ததால், நடிக்க ஓகே சொல்லிட்டேன்’’ என்று சொன்ன கதிரிடம், படத்தில் வரலட்சுமி உங்களுக்கு ஜோடியா? என்று கேட்டதற்கு, ’’படத்தில் என் கேரக்டர்  பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. படத்தின் ஒரு சஸ்பென்ஸானா  கேரக்டரில் நடித்திருக்கிறேன். படத்தின் கதை என்னை மையமாக வைத்து நகரும்’’ என உற்சாகமாகக் கூறினார் கதிர்.