அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த 'கப்பார்’ படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு அனைவருக்கும் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன். 'இப்படிப் பண்ணும்போது அடுத்தடுத்த படத்துக்கும் நம்மளை ஞாபகம் வெச்சுப்பாங்க’ என்பதுதான் காரணமாம். அம்ம்ம்மாடி!

ஹேப்பியாக இருக்கிறார் ப்ரியா ஆனந்த். 'வை ராஜா வை’ படத்துக்காக ஜப்பான் சென்று வந்தவர், அடுத்து 'இரும்புக் குதிரை’ படத்துக்காக ஆஸ்திரேலியா பறக்கவிருக்கிறார். இரண்டுமே ப்ரியாவுக்குப் பிரியமான நாடுகளாம். தவிர, விமலுடன் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, விக்ரம் பிரபுவுடன் 'அரிமா நம்பி’ படங்கள் ரிலீஸ் ஆக ரெடி. ப்ரியா இப்போ ஃப்ரீயா இல்லை!

'கால்ஷீட் சொதப்புவது இப்படி?’ என சிம்புவிடம் டிரெயினிங் எடுக்கலாம். ஏற்கெனவே 'வாலு’, 'வேட்டை மன்னன்’ மற்றும் கௌதம் மேனனின் பெயரிடப்படாத புதிய படம்... எனப் பல படங்கள் கிடப்பில் இருக்க, இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறது பாண்டிராஜின் 'இது நம்ம ஆளு’. 'சீக்கிரமே அனைத்துப் படங்களும் அடுத்தடுத்து வெளிவரும்’ என அப்பாவை அனுப்பி அறிக்கை சொல்லவைத்திருக்கிறார் சிம்பு. வாலு ரொம்ப நீளம்தான்!

கிராமத்து நாயகி ஆகிவிட்டார் நந்திதா. 'நளனும் நந்தினியும்’ படத்தில் மதுரைப் பெண்ணாகவும், 'அஞ்சல’ படத்தில் சோழவந்தானிலிருந்து மதுரைக்குப் படிக்கப்போகும் பெண்ணாகவும் நடித்துள்ள நந்திதா, 'முண்டாசுப்பட்டி’யிலும் தாவணியை இடுப்பில் செருகியுள்ளார். நந்திதா ஹேப்பி அண்ணாச்சி!

நடிகர் தனுஷ் சென்டிமென்ட் விஷயத்தில் கொஞ்சம் ஸ்ட்ராங். 'யாரடி நீ மோகினி’ படத்தில் உடன் நடித்த ரகுவரனின் நினைவாக தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு 'ரகுவரன்’ என்கிற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறாராம். சூப் பாய்... சூப்பர் பாய்!

ராஜமௌலியின் 'பாகுபலி’ படப்பிடிப்பில் விசிட் அடித்த ரஜினிகாந்த், 25 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான செட்டைப் பார்த்து பிரமித்துவிட்டாராம். அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் ஆகியோரின் கேரக்டர்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ராஜமௌலியிடம் '2016-ல் நாம் நிச்சயம் இணையலாம்’ என நம்பிக்கைக் கொடுத்துள்ளாராம். நான் ரஜினினு டைட்டில் பிடிங்கப்பா!

பவன் கல்யாண் நடித்த 'கப்பார் சிங்’ படத்தின் க்ளைமாக்ஸில் ரௌடிகள் போலீஸ் ஆவதைப் போல் முடித்திருந்தார் இயக்குநர் ஹரிஷ் சங்கர். தற்போது 'கப்பார் சிங்-2’வை இயக்கவிருக்கும் சம்பத், 'ரௌடியாக இருக்கும் போலீஸ்காரர்கள்’ செய்யும் அட்டகாசத்தை திரைக்கதை ஆக்கியுள்ளாராம். எப்படில்லாம் யோசிக்கிறாய்ங்க!

'கத்தி’ படத்தின் ஷூட்டிங்கில் விஜய் - சமந்தாவின் கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளதாம். 'அவர் ரொம்ப சாஃப்ட்’ என விஜயை ஏகத்துக்கும் புகழ்கிறாராம் சமந்தா. தவிர, தெலுங்குப் பட உலகைப் பற்றி சமந்தாவிடம் அக்கறையாக விசாரிக்கிறாராம் விஜய். அப்போ மகேஷ்பாபு இங்கே வருவாப்ல... பரவாயில்லையா?

தமிழ், தெலுங்கு என இரண்டிலுமே 'நம்பர் 1’ ரேஸில் மாறி, மாறி வருவது நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா மட்டுமே. ஹன்சிகாவுக்கு கை நிறையப் படங்கள் இருந்தும், பெரிய நடிகர்களின் படங்கள், டாப் ரேஸில் இடமும் கிடைக்காமல்போவதற்கான காரணம் குறித்து அம்மாவிடம் தீவிரமாக டிஸ்கஷன் நடத்திக்கொண்டிருக்கிறாராம். தீயா வேலை செய்யுங்க!

சூர்யாவை 'அஞ்சான்’ படத்தில் இயக்கிக்கொண்டிருக்கும் லிங்குசாமி, அடுத்து கார்த்தியை வைத்து 'எண்ணி ஏழு நாள்’ படத்தைத் துவக்குகிறார். 'அஞ்சான்’ படத்தில் 'கவர்ச்சிக்கும் ஓகே’ என தாராளம் காட்டிய சமந்தாவையே இதிலும் பயன்படுத்தலாம், என லிங்குசாமி யோசிக்க, சமந்தாவிடம் பேசிவருகிறார்களாம். கார்த்தி மனசை சரியாத் தெரிஞ்சுவெச்சிருக்கீங்க சார்!

நடிகை லஷ்மிராய் சமீபகாலமாக ரொம்ப அமைதியாகவே இருக்கிறார். 'இரும்புக் குதிரை’ படத்தின் ஷூட்டிங்கில் ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள்ளேயே முடங்கிவிடுகிறாராம். நல்ல விஷயம்!