Published:Updated:

இது நிவினுக்கும் நயனுக்குமான 'லவ் ஆக்‌ஷன் டிராமா'..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இது நிவினுக்கும் நயனுக்குமான 'லவ் ஆக்‌ஷன் டிராமா'..!
இது நிவினுக்கும் நயனுக்குமான 'லவ் ஆக்‌ஷன் டிராமா'..!

இது நிவினுக்கும் நயனுக்குமான 'லவ் ஆக்‌ஷன் டிராமா'..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'பிரேமம்' நாயகன் நிவின்பாலிக்கு ஜோடியாக, மலையாளத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், நயன்தாரா. 

தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவந்தாலும், மலையாளக் கரையோரத்திலிருந்து அழைப்பு வந்தால், உடனே யெஸ் சொல்கிறார் நயன்தாரா. அறிமுக இயக்குநர் தயான் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில், நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்துக்கு 'லவ் ஆக்‌ஷன் டிராமா' எனப் பெயரிட்டுள்ளனர். முதன்முறையாக நயன்தாராவும் நிவின்பாலியும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தில், திணேஷன் என்கிற ரோலில் நிவினும், ஷோபனா என்கிற ரோலில் நயனும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க காதலும் காதல் நிமித்தமுமாகக் கதை நகர்கிறது.

அறிமுக இயக்குநரான தயான் ஶ்ரீனிவாசன், மலையாளத்தின் முன்னணி இயக்குநரான வினித் ஶ்ரீனிவாசனின் சகோதரர். தற்போது, தமிழில் 'ரிச்சி', த்ரிஷாவுடன் 'ஹே ஜூட்' படங்களில் நிவின்பாலி செம பிஸி. அதுபோல நயனும் 'அறம்' மற்றும் 'இமைக்கா நொடிகள்' பட வேலைகளில் இருக்கிறார். இதனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு