Published:Updated:

‘ஷங்கரின் ஆசையை நிறைவேற்றினேன்..!’’ - மதன்கார்க்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ஷங்கரின் ஆசையை நிறைவேற்றினேன்..!’’ - மதன்கார்க்கி
‘ஷங்கரின் ஆசையை நிறைவேற்றினேன்..!’’ - மதன்கார்க்கி

‘ஷங்கரின் ஆசையை நிறைவேற்றினேன்..!’’ - மதன்கார்க்கி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக ஷங்கர் இயக்கும் திரைப்படம் 2.0. ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் எமி ஜாக்ஸன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். 'எந்திரன்' படத்தில் ரஜினி ரோபோவாக நடித்த மாதிரி இந்தப் படத்திலும் ரஜினி மற்றும் எமி ஜாக்ஸன் ரோபோவாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 


அடுத்த வருடம் ஜனவரியில் ரிலீஸாகப் போகும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மொத்தம் பதினைந்து மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா முடிவு செய்துள்ளது. உலகத்தின் மிக முக்கிய இடங்களில் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

மேலும் 3டியிலும் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கும் லைக்கா நிறுவனம், இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு 400 கோடி ரூபாய் என அண்மையில் தெரிவித்தது. இந்தப் படத்துக்கான கதையை ஷங்கருடன் இணைந்து ஜெயமோகனும் எழுதியுள்ளார். படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் மதன்கார்க்கியிடம் பேசினோம்.

''எந்திரன் படத்தின் பாடல்கள் எப்படி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோ, அதே மாதிரி 2.0 பாடல்களும் மக்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரியிருக்கும். ஆனால், படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகளைப் பற்றி என்னால் தற்போது கூறமுடியாது. இந்தப் படத்துக்கு வசனங்களை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ஆனால், ஷங்கர் சில காட்சிகளுக்கு மட்டும் என்னை வசனம் எழுதச் சொன்னார். நானும் எழுதிக்கொடுத்தேன். படத்தின் சில இடங்களில் என் வசனங்கள் தென்படும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு