வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (11/07/2017)

கடைசி தொடர்பு:16:06 (11/07/2017)

‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ - இந்த பாடல்களின் இன்ஸ்பிரேஷனா? அவ்வ்...

யக்குநர் சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘விவேகம்’. இந்தப் படத்தின் மூலம் ‘அஜித் - சிவா காம்போ’ ஹாட்ரிக் ஹிட் கொடுக்குமா? என ‘விவேகம்’ படத்தைக் காண அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதே கூட்டணியின் ‘வேதாளம்’ படத்திற்கு இசையமைத்த அனிருத் ‘விவேகம்' படத்திற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. ' 'சர்வைவா', 'தலை விடுதலை' ரெண்டும் கேட்கும்போதே மாஸ் தெறிக்குது' என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மறுபுறம், 'இந்த இரு பாடல்களுமே  வேற்றுமொழிப் பாடல்களின் இன்ஸ்பிரேஷன்' என்ற விவாதமும் சென்றுகொண்டிருக்கிறது. `விவேகம்' படத்துக்கு முன் அனிருத் இசையமைத்த `வேதாளம்' மற்றும் `கத்தி' படங்களின் பாடல்களுக்கும் இதே போன்று விவாதம் கிளம்பியது.

சர்வைவா விவேகம்

விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்துக்கும் அனிருத் இசையமைத்தார். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களுமே மக்களிடையே லைக்ஸ் அள்ளின. குறிப்பாக, `கத்தி தீம் மியூசிக்' பலரின் மொபைல் ரிங்டோனாய் ஒலித்தது. அப்போதே சிலர் `கத்தி தீம் மியூசிக், டி.வி.பி.பி.எஸ் மற்றும் டோனி ஜூனியரின் `இம்மோர்டல்' (DVBBS & Tony Junior - Immortal) ஆல்பத்தின் இன்ஸ்பிரேஷன்' என ஆதாரம் காட்டி ஆட்டையக் கலைத்தனர். பிறகு, அனிருத் இசையமைத்த `வேதாளம்' படத்தின் பாடல்களும் செமத்தியான ரீச். அதிலும் கல்யாணவீட்டில் தொடங்கி, கருமாதி வீடுவரை எல்லா இடத்திலும் ஒலித்து, அதிரிபுதிரி ஹிட் அடித்தது ஆலுமா டோலுமா. தவிர, வேதாளம் தீம் மியூசிக்கையும் டீசர் வந்ததில் இருந்தே முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். அப்போது ஒரு யூ-டியூப் சேனலே என்ட்ரியாகி `இது சிம்டம் - ஹேன்ஸ் அப்'பின் காப்பி தானே (Simtem - Hands Up) என கப் ஐஸ் அடித்தது.

தலை விடுதலை

தற்போது வெளியாகியிருக்கும் `விவேகம்' படத்தின் `சர்வைவா' பாடலும், `யிருமா - ரிவர் ஃப்ளோஸ் இன் யு' (Yiruma - River Flows in You) இசையில் இருந்து உருவிய பிட் என முகநூலில் வீடியோ ஆதாரம் எல்லாம் பதிவேற்றினார்கள். கடைசியாக வெளியான `தலை விடுதலை' பாடலும் `நான் ஈ' படத்தின் `ஈடா ஈடா...' பாடலின் இன்ஸ்பிரேஷன் எனக் கிளம்பியிருக்கிறார்கள். உண்மையில், `ஈடா ஈடா...' பாடலை விட, மர்லின் மேன்சனின் `தி பியூட்டிஃபுல் பீப்பிள்' (Marilyn Manson - The Beautiful People)  மற்றும் நிக்கல்பேக்கின் `பர்ன் இத் டு தி கிரவுண்ட்' (Nickelback - Burn It to the Ground) பாடல்களில் `தலை விடுதலை'யின் சாயல் அதிகம் தெரிகிறது. மர்லின் மேன்சனின் 'தி பியூட்டிஃபுல் பீப்பிள்' மற்றும்  நிக்கல்பேக்கின் `பர்ன் இத் டு தி கிரவுண்ட்' ஆகிய இரு பாடல்களிலும் முறையே மல்யுத்த நிகழ்ச்சிகளான 'Raw' மற்றும் 'Smack Down' ஆகியவற்றிற்கு தீம் மியூசிக்குகளாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சொல்லப் போனால், நிக்கல்பேக் பாடலின் தொடக்க இசையை ஏற்கெனவே தமிழில் காப்பி பேஸ்ட் செய்துவிட்டார்கள். `வேலாயுதம்' படத்தில் வரும் 'சொன்னாப்புரியாது... 'பாட்டை கேட்டுப்பாருங்க. நான் சொன்னது புரியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்