Published:Updated:

'பிக் பாஸ் ' பரணிக்கு வலுக்கும் ஆதரவு..!

சனா
'பிக் பாஸ் ' பரணிக்கு வலுக்கும் ஆதரவு..!
'பிக் பாஸ் ' பரணிக்கு வலுக்கும் ஆதரவு..!

சமூக வலைதளங்களில் தற்போது பல மீம்ஸ் க்ரியேட் ஆகக் காரணமாக இருப்பதே விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்த 15 பிரபலங்களிலிருந்து இரண்டு பிரபலங்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். மற்ற இருவரில் ஶ்ரீ உடல்நிலை குறைவு காரணமாக வெளியேறினார். பரணி போட்டியின் விதியை மீறியதால் வெளியேற்றப்பட்டார்.

இதனால் பரணி நல்லவர், அவர் ஓர் அப்பாவி என்று, அவருடன் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சியில் ஒன்றாகப் பணிபுரிந்த அமித் பார்கவ் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ட்விட்டரிலும் பலர் பரணிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இதுபற்றி நடிகை சாந்தனி தனது ட்விட்டர் பக்கத்தில் #isupportbharani என ட்விட் தட்டியுள்ளார். இதுபற்றி சாந்தனியிடம் பேசியபோது, 

''எனக்கு பர்சனலாக நடிகர் பரணியைத் தெரியாது. அவருடன் வேலை பார்த்தது இல்லை. நான் தினந்தோறும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அதைப் பார்க்கும்போது, அதில் இருக்கும் அனைவரும் வேண்டுமென்றே பரணியைப் பற்றித் தப்பாகப் பேசுவது போல் உள்ளது. 'பிக் பாஸ்' வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக அவரைக் கார்னர் செய்வதுபோல் எனக்குத் தோன்றியது. நான், நடிகர் பரணிக்கே ஆதரவு தருகிறேன் என்று கூறினார். மேலும் சமூக வலைதளங்களில் சிலரும் பரணிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.