Published:Updated:

வெற்றிமாறன், கெளதம்மேனன் இருவருக்குப் பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த இயக்குநர்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

சர்ச்சைகளில் அடிக்கடி அடிபடுவது, சமூக பிரச்னைகளுக்கு குரல்கொடுப்பது என லட்சுமி ராமகிருஷ்ணன் செம ஆக்டிவ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துவருகிறார். இதுவரை மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'அம்மணி' நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். இவர் படங்களில் பெரும்பாலும் பெண் நடிகைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். அதுபோல இவரின் அடுத்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். இருவரும் சமீபத்தில் சந்தித்து கதை குறித்தும் பேசியிருக்கிறார்கள். 

தற்பொழுது வெற்றிமாறனின் 'வடசென்னை' மற்றும் கெளதம் மேனனின் 'துருவநட்சத்திரம்' படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவ்விரு படங்களும் முடிந்த பிறகு, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு