Published:Updated:

'நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!'

'நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!'
'நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!'

'நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!'

2009-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கக் கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஶ்ரீப்ரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசினர். இதையடுத்து பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'எட்டு பேரும் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


சூர்யா, சரத்குமார் உட்பட எட்டு பேர் சார்பாக வழக்கறிஞர் விஸ்வநாத், பிடிவாரன்டை ரத்து செய்யக்கோரி உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் உதகை நடுவர் நீதிமன்றம் நடிகர்களின் மனுவை ரத்து செய்து, பிடிவாரன்ட்டை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, தங்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் நடிகர்கள் 8 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஶ்ரீப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு