Published:Updated:

ரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..! - 'காலா' லேட்டஸ்ட் #Kaala

ரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..! - 'காலா' லேட்டஸ்ட் #Kaala
ரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..! - 'காலா' லேட்டஸ்ட் #Kaala

ரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..! - 'காலா' லேட்டஸ்ட் #Kaala


                               

ஷங்கர் டைரக்‌ஷனில் பிரமாண்டமாக உருவாகிவரும் '2.0' படத்தை இந்திய சினிமா  உலகமே  ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றது. முதலில் ஒரு பாடல்கூட இல்லாமல் '2.0' படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார், ஷங்கர். ரஜினி ரசிகர்கள் ஏமாந்து போய்விடுவார்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னபிறகு, இரண்டு பாடல்களை உருவாக்கி சேர்த்து இருக்கிறார்கள். ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்‌ஷய்குமார், லைகா  தயாரிப்பு என  பெருங்கூட்டணி. அதனால் '2.0' படத்தைப்பற்றி ரஜினிக்குப் பெரிதாக கவலை இல்லை. தனுஷ் தயாரிப்பு, ரஞ்சித் இயக்கத்தில் தயாராகிவரும் 'காலா' படத்தின்மேல்தான் ரஜினி பெருங்கவனம் செலுத்தி வருகிறார்.    

'காலா' படக்கதை தொடர்பான பேச்சுவார்த்தையை ரஜினியிடம் பேசிய போதே ரஞ்சித்தும், ரஜினியும்  சேர்ந்து  "'கபாலி' படத்துல நடிச்ச நடிகர், நடிகைங்க ஒருத்தர்கூட 'காலா' படத்துல நடிக்கவே கூடாது. எல்லா ஆர்டிஸ்டுகளும் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்' என்று கூட்டணியாக  முடிவெடுத்து விட்டார்கள். ஏனென்றால் 'கபாலி'யும் டான் கதை, 'காலா'வும் டான் கதை.  எக்காரணத்தை முன்னிட்டும் 'கபாலி' சாயல் 'காலா'வில் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கி உருவாக்கி வருகிறார், ரஞ்சித்.  

சமுத்திரக்கனி, நானாபடேகர் என்று இதுவரை ரஜினி படங்களில் தலையே காட்டாத நட்சத்திரங்களை வொண்டர்பார் பிலிம்ஸ் ஒப்பந்தம் செய்தது. மும்பை தாராவி பகுதியில் வாழ்ந்த வரதராஜ முதலியாரை, வேலுநாயக்கர் கேரக்டராக உருவாக்கி 'நாயகன்' படத்தில் கமலை நடிக்க வைத்தார் மணிரத்னம். அதுபோலவே  அதேமும்பையில் வாழ்ந்த  தாதா ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தையே ரஞ்சித் செதுக்கி கரிகாலன் (எ) 'காலா 'வாக ரஜினியைத் தயாராக்கி வருகிறார் என்று ஆரம்பத்தில்  செய்தி பரவிய போதே ரஞ்சித்திடம் பேசினோம்.  ''இரண்டு சீன்கள் மட்டுமே  ஹாஜி மஸ்தான் கேரக்டர் வருகிற மாதிரி திரைக்கதை அமைத்து இருந்தேன். அதன்பின் ஏற்பட்ட பிரச்னையை பார்த்தபிறகு அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் படத்தில் இருந்தே நீக்கிவிட்டேன். 'காலா' என்பது  தாராவியில் வாழ்ந்த தமிழனின் கதை. என்னுடைய கற்பனையில் முழுக்க முழுக்க  உருவான கதையில்தான் ரஜினிசார் நடித்துக் கொண்டு இருக்கிறார்" என்று பதில் சொன்னார்.  

ஏற்கெனவே 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பொது இடங்களில் படமாக்கப்பட்டபோது  ரஜினியை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள்கூட்டம் நெருக்கியடித்தது. அதனால் மலேசியாவில் இருக்கும் தெருக்கள் வீடுகள் போன்று சென்னை வடபழனியில் இருக்கும் மோகன் ஸ்டுடியோவில் செட் போட்டு அங்கே ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. மும்பையில் தாராவி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோதும் மக்கள் கூட்டம் வெள்ளமென சூழ்ந்து கொண்டதால் முக்கியமான சாலைகள்  ட்ராபிக் ஜாம் ஆகிவிட, ஸ்தம்பித்து போனது போக்குவரத்து. அதன்பின் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று பிரமாண்ட  தெருக்கள், வீடுகள் போல செட் போட்டு அசத்தி இருக்கிறார்கள். அங்கேதான் இன்று (12-ம்தேதி) முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  மும்பை தாராவி பகுதி பொது இடமாக இருந்ததால் 'காலா'வில் இடம்பெறும் அதிமுக்கியமான காட்சிகள் அங்கே   படமாகப்படவில்லை. சென்னையில் ஸ்டுடியோவில்  நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி இடம்பெறும் ஹைலைட்ஸ் காட்சிகளை படபிடிக்க இருக்கிறார் ரஞ்சித்.

படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சாயாஜி ஷின்டே, சுகன்யா ஆகியோர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரஜினிக்கு மகனாக, அவரது மருமகன் தனுஷ் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பியும், ‘வத்திக்குச்சி’ பட ஹீரோவுமான  திலீபன்  நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.  'காதல்' படத்தின் டான்ஸ் மாஸ்டரான  கந்தாஸின் நான்கு வயது மகன் 'மன்யு’ ரஜினிக்கு பேரனாக நடிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு