Published:Updated:

'லாரன்ஸுக்காக இணையும் பாகுபலி டீம்'!

'லாரன்ஸுக்காக இணையும் பாகுபலி டீம்'!
'லாரன்ஸுக்காக இணையும் பாகுபலி டீம்'!

'லாரன்ஸுக்காக இணையும் பாகுபலி டீம்'!

'காஞ்சனா 2' படத்துக்குப் பிறகு,  ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. 


இந்த இரண்டு படங்களையும் அவர் இயக்காமல், மற்ற இயக்குநர்களின் படத்தில்தான் நடித்திருந்தார். இந்நிலையில் லாரன்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வந்தது. இதுபற்றி லாரன்ஸிடம் கேட்டோம்.
''புதிய புராஜெக்ட் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்பு 'ஒன் லைன்' சொன்னாங்க. அந்த ஒன் லைன் பிடித்திருந்தது. அதன் பிறகு, மூன்று நாள்களுக்கு முன்புதான் கதை கேட்டேன். உடனே ஓகே சொல்லிட்டேன். படத்துக்கான வசனத்தை மதன் கார்க்கியும் கதையை விஜயேந்திர பிரசாத்தும் எழுதியிருக்கிறார்கள். ராஜமௌலியின் உதவி இயக்குநர் மகாதேவன்தான் படத்தின் இயக்குநர். இதில் நான் மட்டும்தான் ஹீரோ. ஆனா, இந்தப்  படம் இரண்டு மொழிகளில் உருவாகிறதா என்று தெரியவில்லை. படத்தைப் பற்றி வேறு எதுவும் தற்போது கூறமுடியாது' என்று முடித்தார் லாரன்ஸ்.
 

அடுத்த கட்டுரைக்கு