Published:Updated:

'நடிகர் கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!'

சனா
'நடிகர் கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!'
'நடிகர் கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!'

பலரது பார்வைகளை ரசிகர்களாகப் பெற்றிருக்கும் விஜய் டிவி-யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் முதல்முறையாகத் தொகுத்து வழங்கிவருகிறார். அவர் தொகுத்து வழங்குவதாலோ என்னவோ, நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ' 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பைத் தடைசெய்ய வேண்டும்' என்று இந்து மக்கள் கட்சியினர் சில நாள்களுக்கு முன்பு விஜய் டிவி-யின் முன்பு போராட்டம் நடத்தினர்.

'நடிகர் கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!'


சமீபத்தில்கூட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பாக, மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் காயத்ரி ரகுராம் "சேரி பிஹேவியர்ஸ்" எனத் திட்டியுள்ளார். இது, தலித் மக்களைக் கொச்சைப்படுத்தும் மற்றும் ஜாதிக் கலவரங்களைத் தூண்டும் விதமாக உள்ளது. எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகுறித்து நடிகர் கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.