'சினிமாவில் இதைத்தான் பேசவேண்டும். இதையெல்லாம் பேசக் கூடாது’ என்ற விதிகள் மாறிவரும் காலம் இது. சாரா என்கிற சரவணன் முதன்முதலில் வெளியிட்ட டீஸரின் பெயர் 'இருட்டறையில் முரட்டுக் குத்து’. அடுத்து குறும்படம், 'மூலம் பௌத்திரம் விரை வீக்கம்’. இரண்டுமே பிளாக் ஹியூமர் வகையைச் சேர்ந்தவை. நேரடியான கெட்டவார்த்தைகள் இல்லாவிட்டாலும் சரளமாகப் பேசத் தயங்கும் வார்த்தைகளைக்கொண்டவை. 'தங்கமீன்கள்’ படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோது 'டௌன்ஃபால்’ என்ற ஹிட்லரின் கடைசி நாட்கள் படத்தின் காட்சிகளை உல்டா செய்த இவரது வீடியோ யூடியூபில் ரொம்ப பாப்புலர். குறும்படங்களுக்கு அடுத்து 'கில் குமார்’ என்று ஒரு படத்தைத் தன் நண்பருடன் இணைந்து இயக்கியிருக்கிறார். அதன் ட்ரெய்லரும் இணையத்தில் அதிரிபுதிரி ஹிட்.

''யாருங்க நீங்க? ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு வீடியோ போட்டுட்டுக் காணாமப்போயிடுறீங்க?''

''நான் படிச்சது விஸ்காம். ஒரு எஃப்.எம்.மில் ஆர்.ஜேவாக இருந்தேன். இப்போ மும்பையில் விளம்பர இயக்குநர் ராகவேந்திர ஐயரிடம் அசிஸ்டென்டாக இருக்கேன். ஊருக்கு வரும்போது என் ஃப்ரெண்ட் விஸ்வாவுடன் சினிமா ரெவ்யூ, ராப் சாங்னு வீடியோ ரெக்கார்ட் பண்ணிப் போடுவோம். எல்லாமே நெட்டில் வைரலா வரவேற்பு பெற்றது. இந்த முறை ஊருக்கு வந்தபோது படம் டைரக்ட் பன்ணிடலாம்னு முடிவுசெஞ்சு சென்னையிலேயே உட்கார்ந்தாச்சு. அதோட

டிரெய்லர்தான் நீங்க பார்த்தது.''

''படத்தில் என்ன கதை?''

''தங்கச்சியை ரேப் செய்தவர்களைத் தேடிப்போய் கொல்லும் அண்ணனின் கதை. அந்த 30 பேரையும் (என்னது 30 பேரா?) தேடித்தேடிக் கண்டுபிடிச்சு பழிவாங்குற கதை. கடைசியில் ஒரு பயங்கர ட்விஸ்ட் வெச்சிருக்கேன். தயாரிப்பு, இயக்கம், வசனம், ஒளிப்பதிவு, நடிச்சவங்களுக்கு டீ வாங்கிக் கொடுத்ததுனு எல்லாமே நான்தான். இசை, இணையத்தில் திருடியது.''

''இது கொஞ்சம் ஓவரா இருக்கே?''

''இல்லைங்க... சீரியஸாகவே இசை நெட்ல ஆட்டைய போட்டதுதான். நானே தயாரித்து வெளியிடுறதில பட்ஜெட் ப்ராப்ளம். ஸோ, வேறு வழியில்லை. தயவுசெய்து பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் மாதிரி கலாய்ச்சு எழுதிடாதிங்க பாஸ்.''

''உங்க யூடியூப் வீடியோவில் எல்லாம் அடிக்கடி கெட்டவார்த்தை கலந்து பேசுறீங்க... படத்திலேயும் அப்படித்தானா?''

''ஒரு சின்னத் தப்பு நடந்துபோச்சு ப்ரோ. நானேதான் எடிட்டிங் ஓர்க்கும் பார்க்கிறேன். எடிட்டிங் வேலைக்கு நான் புதுசுங்கிறதால, கெட்டவார்த்தை வரும்போது பீப்னு சவுண்ட் வர்ற மாதிரி செய்த முயற்சியெல்லாம் மிஸ்ஸாகி அடுத்த வார்த்தையில் போய் பீப் உட்கார்ந்துடுச்சு. சென்ஸார் சர்டிஃபிகேட்டுக்கு அப்ளை பண்ணும்போதே தயவுசெய்து ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கனுதான் கேட்கப்போறோம்.''

''படம் எப்போ ரிலீஸ்?''

''இப்போ மே மாசம், குழந்தைகளுக்கு விடுமுறை. இப்போ ரிலீஸ் செஞ்சா எதிர்கால சந்ததிகள் கில் குமாரின் வன்முறையைப் பார்த்துக் கெட்டுப்போய்விட வாய்ப்பிருக்கு. அதனால ஸ்கூல், காலேஜ் ஆரம்பிச்சப் பிறகுதான் ரிலீஸ்(?)''

''அப்படியே ஏதாவது ஒரு பட்டமும் உங்களுக்கு நீங்களே கொடுத்து இருப்பீங்களே?''

''போன மாசம் என்ன பட்டம் போட்டுக்கலாம்னு யோசனையோட டாய்லெட் போனா, மூலப் பிரச்னையால பயங்கர எரிச்சல். அப்போதான் 'பர்னிங் ஸ்டார்’னு பட்டத்தை பர்னிங்கோடவே எனக்கு நானே கொடுத்துகிட்டேன். நெட்ல தேடிப்பார்த்தா ஏற்கெனவே ஒரு பர்னிங் ஸ்டார் இருக்காரு. சரினு ரெண்டு பேரும் டீலிங் போட்டுக்கிட்டோம். அவரும் கோட்டைத் தாண்டி வர மாட்டார். நானும் கோடி ரூபாய் கொடுத்து ஸ்ருதிஹாசன் ஹீரோயின்னு சொன்னாக்கூட ஆந்திரா பக்கம் போறதில்லைனு!''

கூட்டம் கூட்டமாய்த்தான் வாராங்கப்பா!

- செந்தில்குமார், படம்: ப.சரவணகுமார்