Published:Updated:

சினிமால்!

சினிமால்!

'ம்சகல்ஸ்’ படத்தில் தமன்னாவுக்கு முன் ஒப்பந்தமானவர் மல்லிகா அரோராதான். இது குறித்து தமன்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது ''மல்லிகா அரோராவைவிட நான் இந்தியா முழுதும் பிரபலம். அதனால் வந்த வாய்ப்புதான்'' என்றாராம். நம்பிட்டோம்!

சினிமால்!

 'வடகறி’ படத்தில் சன்னி லியோன் ஆடுகிறார் என்றதும் உற்சாகமான ரசிகர்களுக்கெல்லாம் ஒரு ஷாக் நியூஸ். 'வடகறி’ படத்திற்கு  'யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார். காரணம், படத்தில் சன்னி லியோனுக்கு பாவாடை தாவணிதான் காஸ்ட்யூம். குடும்பக் குத்துவிளக்காக ஜொலித்திருக்கிறாராம் சன்னி. வட போச்சே!

சினிமால்!
சினிமால்!

  'குக்கூ’ படத்திற்கு பிறகு பிசியாகிவிட்டார் தினேஷ். 'வாராயோ வெண்ணிலாவே’, 'திருடன் போலீஸ்’, 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' என அடுத்தடுத்து படங்கள். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கத் திலும், 'அட்டகத்தி’ தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் தினேஷ். ரூட்டு தல ஆக வாழ்த்துகள்!

சினிமால்!

'லிங்கா’ படத்தில் ரஜினி கலெக்டராக நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அனுஷ்கா கிராமத்துப் பெண் வேடத்தில் அவரிடம் குறைகளைச் சொல்வது போலவும் ஊர்ப் பெரிய மனிதர்கள் கூட்டத்தில் ரஜினி பேசுவது போலவும் படமாக்கி உள்ளனர். படம் தீபாவளி ரிலீஸ் என்கிறது யூனிட். சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ்னாலே தீபாவளிதான்!

சினிமால்!

வரலட்சுமி இப்போது பாலாவின் இயக்கத்தில் நடிப்பதோடு 'அரண்மனை’, கன்னடப் படமான 'மாணிக்யா’ படங்களில் நடிக்கிறார். கவர்ச்சிக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களைக் கேட்டு வாங்கி நடிக்கிறாராம். என்னா ஓர் ஆர்வம்!

சினிமால்!

 தாஜ்மகாலைப் பின்னணியாகக்கொண்ட தனுஷின் புது பாலிவுட் படத்தில் தனுஷ் பார்வையற்றவராக நடிக்கிறார். அக்ஷராவுக்கு அவர் மீது பரிதாபம் கொள்ளும் வேடம். படத்தில் முத்தக் காட்சி உண்டாம். முத்தத்துக்குக் கண் இல்லை!

சினிமால்!

 'புறம்போக்கு’ படத்தில் கார்த்திகா டேப் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த நடனம் நன்றாக வந்துள்ளது என கார்த்திகாவின் அம்மா ராதாவுக்கு போன் செய்து பாராட்டினாராம் எஸ்.பி.ஜனநாதன். டேப்பு டாப்பு!

சினிமால்!
சினிமால்!

 ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணையும் 'டானா’ படத்தில் கவர்ச்சிக் காட்சிகள் உண்டாம். வெறுமனே ஹோம்லி ரோல்கள் செய்தால் ஃபீல்டில் நிலைக்க முடியாது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஸ்ரீ. வாரே வா!

சினிமால்!

 லட்சுமி மேனன் அப்பா கேரளத்தில் பரோட்டா மாஸ்டராம். அதனால் ரோட்டோர கடைகளில் சாப்பிடுவது என்றால் அம்மணிக்குக் கொள்ளைப் பிரியம்.  ''சுடச்சுட தோசையும் மிளகுத் தூள் போட்ட ஆம்லெட்டும் என் அப்பா கொண்டு வருவார். அதை மிஸ் பண்றேன்'' என்கிறார் மேடம். இது பரோட்டா சூரிக்குத் தெரியுமா?

சினிமால்!

 'ஆடலாம் பாய்ஸ் சின்னதாய் டான்ஸ்’, அதான் 'ஏ.பி.சி.டி. பார்ட் 2’ தயாராகிறது. இதிலும் பிரபுதேவா நடிக்கிறார். இது 3டி படம். 2015 கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது. பிரபு தேவா கதை விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்கிறாராம். சூப்பர் பாஸ்!

சினிமால்!

 தங்கர்பச்சான் மகன் நடிக்கும் படத்துக்கு 'பட்டதாரி’ என்று பெயர் வைத்துள்ளனர். பரதன் இயக்குகிறார். ஒளி ஓவியர் யாருங்க?

சினிமால்!

 'ஹரிதாஸ்’ படத்தை அடுத்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இந்திய எல்லைப்பகுதியில் நடப்பது போன்ற கதையம்சம்கொண்ட இந்தப் படத்தில் 'பாலிவுட் நடிகை அலியா பட் நடிச்சா நல்லா இருக்கும்’ என விக்ரம் பிரபு கேட்க, அலியாவுக்குக் கதை சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார் குமாரவேலன். கூட்டிட்டு வாங்க பாஸ்!

சினிமால்!
சினிமால்!

 பிரீத்தி ஜிந்தாவின் ஆபாசப் படம் இணையதளம் முழுவதும் கலக்குது. ஒற்றைத் துணியுடன் அவர் காட்சி அளிக்கும் விதம் ரொம்ப ஓவர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்க ''எல்லாம் கிராஃபிக்ஸ்'' என்றாராம். லிங்க் எங்கே பாஸ்?

அடுத்த கட்டுரைக்கு