Published:Updated:

''மாரி படத்தின் விமர்சனங்களை மனதில் வைத்துதான் மாரி 2 கதையை ரெடி பண்ணினேன்..!'' - அதிர வைக்கும் இயக்குநர் பாலாஜி மோகன்

''மாரி படத்தின் விமர்சனங்களை மனதில் வைத்துதான் மாரி 2 கதையை ரெடி பண்ணினேன்..!'' - அதிர வைக்கும் இயக்குநர் பாலாஜி மோகன்
''மாரி படத்தின் விமர்சனங்களை மனதில் வைத்துதான் மாரி 2 கதையை ரெடி பண்ணினேன்..!'' - அதிர வைக்கும் இயக்குநர் பாலாஜி மோகன்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் 'மாரி'. படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தனுஷுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்துக்காக பூஜையை நேற்றுதான் போட்டிருக்கிறது படக்குழு. தற்போது ப்ரி புரொடக்‌ஷன் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் இயக்குநர் பாலாஜி மோகனைத் தொடர்புகொண்டோம்.


''மாரி படம் பண்ணும்போதே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று நானும் தனுஷும் முடிவு பண்ணினோம். மாரி படம் முடிந்த இரண்டு வருட இடைவெளியில் 'மாரி 2' படத்துக்கான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். அதை தனுஷ் படித்துவிட்டு நல்லாயிருக்குனு சொன்னார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் எடுக்க முன்வந்தார். 'மாரி' படத்தின் தயாரிப்பிலும் தனுஷ் இருந்தார். இரண்டாம் பாகத்தில் நடிக்க தனுஷ், ரோபோ ஷங்கர் மட்டும் தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.''

மாரி படத்துக்கு இசையமைத்த அனிருத் இந்தப் படத்திலும் கமிட்டாகி இருக்கிறாரா?
''இந்தப் படத்தில் தனுஷ், ரோபோ ஷங்கர் தவிர, நடிக்க வேற யாரும் கமிட் ஆகவில்லை. அதேபோல்  இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. செப்டம்பரில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருக்கிறோம். 'மாரி' படத்தின் தொடர்சியாகத்தான் 'மாரி 2' இருக்கும். அதே ஹேங்க் ஸ்டர் இதுலயும் பயணம் செய்வார்கள். 'மாரி' படத்தைவிட பல மடங்கு சீரியஸாக 'மாரி 2 ' இருக்கும். ஆக்‌ஷன் சீக்வென்ஸ், என்டர்டெயின்மென்டுக்கும் பஞ்சம் இல்லாமல் இந்தப் படம் இருக்கும். எமோஷனல்ஸ் இருக்கும். படத்தோட ஸ்க்ரிப்ட் எழுதும்போதே முதல் பாகத்துக்கு வந்த விமர்சனத்தை மனதில் வைத்துதான் எழுதினேன். கண்டிப்பாக 'மாரி 2'  ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் உதிர்த்தார் இயக்குநர் பாலாஜி மோகன்.