Published:Updated:

“நந்தினி, ஜானகி பேய் ரெண்டும் சிரிச்சுட்டே இருக்காம்!” லகலக ‘நந்தினி’ மாளவிகா #VikatanExclusive

“நந்தினி, ஜானகி பேய் ரெண்டும் சிரிச்சுட்டே இருக்காம்!” லகலக ‘நந்தினி’ மாளவிகா #VikatanExclusive
“நந்தினி, ஜானகி பேய் ரெண்டும் சிரிச்சுட்டே இருக்காம்!” லகலக ‘நந்தினி’ மாளவிகா #VikatanExclusive

“பத்து வருஷத்துக்கும் மேல சினிமா, சீரியல்னு வெரைட்டியா நடிச்சுட்டிருந்தாலும் இப்போ நடிக்கும் 'நந்தினி' சீரியல் சொல்லத் தெரியாத புது உணர்வைக் கொடுக்குது. அதுக்குத் தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே காரணம்" என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், மாளவிகா வேல்ஸ். 'நந்தினி' சீரியலில் ஜானகி ஆவியாக மிரட்டுபவர்.

“மீடியா பிரவேசம் எப்போது தொடங்கியது?”

“சின்ன வயசிலிருந்தே மீடியாவுக்குள் வரும் ஆர்வம் மனசுக்குள்ளே இருந்துச்சு. சின்னச் சின்னதா முயற்சி செஞ்சுட்டே இருந்தேன். பிளஸ் ஒன் படிக்கிறப்போ 'மிஸ் கேரளா' போட்டியில் வின் பண்ணினேன். ஆக்டிங் சான்ஸ் வரிசைக்கட்டி வர ஆரம்பிச்சது. பல மலையாளப் படங்களில் ஹீரோயினா நடிச்சேன். தமிழில், 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்திலும் ஒரு கன்னடப் படத்திலும் நடிச்சேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மலையாள சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துதான் 'நந்தினி' வாய்ப்பு வந்துச்சு." 

“இந்த 'நந்தினி' அனுபவம் எப்படி இருக்கு?” 

(பட்டென பதில் வருகிறது) "ரொம்ப சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ். இந்த ஜானகி கேரக்டர், என் நடிப்புப் பயணத்தில் பெரிய பிரேக். பாசிட்டிவ் ஆவியாக, புருஷனையும் குழந்தையையும் காப்பாற்ற, 'நந்தினி' பாம்பு ஆவியோடு சண்டைப் போடுறது சவாலா இருக்கு. தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் சீரியல் ஒளிபரப்பாவதால் பல மடங்கு புகழ் கிடைச்சிருக்கு. இனி, எந்த வெரைட்டியான ரோல் வந்தாலும், தூள் கிளப்பிடலாம் என்கிற நம்பிக்கையை 'நந்தினி' சீரியல் கொடுத்திருக்கு." 

“ஷூட்டிங் ஸ்பார்ட்ல ரெண்டு ஆவிகளும் தமாஷா இருக்குமாமே...” 

“எஸ்... எஸ்... ரொம்பவே தமாஷா இருக்கும். ஆவியா நடிக்கும் எனக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் புடவை கொடுப்பாங்க. அதைக் கட்டிக் கட்டி போரடிச்சுப்போச்சு. 'வேற கலர் புடவையைக் கொடுங்க'னு கெஞ்சுவேன். ஆனா, நித்யா கலர் கலர் டிரெஸ் போட்டுக்குவா. அதனால், அவளும் நானும் செல்லமா கிண்டல் பண்ணிப்போம். உயிரோடு இருக்கும் நித்யா ராம் உடம்புக்குள்ளே 'நந்தினி' பாம்பின் ஆவி புகுந்து, அது ஜானகி ஆவியான என்னோடு சண்டைப் போடும். இது மாதிரியான காட்சிகள்தான் இப்போ அதிகமா போயிட்டிருக்கு. ஆனா, கோபமான காட்சிகளில் எங்களை அறியாமல் விழுந்து விழுந்துச் சிரிப்போம். எங்களால் செட் முழுக்க சிரிப்புச் சத்தமா இருக்கும். பேய் ரெண்டும் சீரியஸாக இல்லாம, சிரிச்சுகிட்டே இருக்குதுன்னு எல்லோரும் கிண்டல் செய்வாங்க." 

“தமிழ் ரசிகர்களின் பாசத்தில் நெகிழ்ந்துப் போறீங்களாமே...” 

“தமிழ்நாட்டுக்கு வந்த பிறகுதான் என் வளர்ச்சி அதிகமாச்சு. இங்கே வந்து ரெண்டு வருஷம்கூட ஆகலை. நல்லா தமிழ் பேசக் கத்துகிட்டேன். தமிழ் அவ்ளோ அழகான மொழியா இருக்கு. தமிழ் மக்களின் அன்பு ரொம்பப் பெருசு. ஹோம்லி, பாசிட்டிவ் கேரக்டர் நடிப்புக்கு அங்கீகாரம் கொடுத்து வரவேற்கிறாங்க. அது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கு. 'நந்தினி' சீரியலின் தொடக்கத்தில் நான் அன்பான பொண்ணா நடிச்சிருப்பேன். என்னைக் கொலை செஞ்சுடுவாங்க. என்னை வெளியில் பார்க்கிறவங்க, 'அநியாயத்துக்கு கொலைப் பண்ணிட்டாங்களேம்மா. நீ இன்னும் ரொம்ப நாள் அந்த கேரக்டர்ல நடிச்சிருக்கணும். உன்னை ரொம்பவே மிஸ் பண்றோம்'னு பலரும் சொல்வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். அடடா, இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருக்கிற மாதிரி நடிச்சு இருக்களாமேன்னு நினைச்சுப்பேன்.'' 

“அடுத்தடுத்து தமிழில் நடிக்கும் ஆர்வம் இருக்கா?” 

“ஆமாம். தமிழ்நாட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'நந்தினி' சீரியலில் நடிக்கும் பலரும் ஒரு ஃபேமிலி உணர்வோடு பழகறாங்க. மலையாள சீரியல்களிலும் நடிச்சுட்டிருக்கேன். தமிழ் சீரியல்கள், சினிமா வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்" எனப் புன்னகைக்கிறார் மாளவிகா வேல்ஸ்.

பின் செல்ல