Published:Updated:

’சன்னி லியோன் என் படத்தில் நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..!’’ - கலகலக்கும் நடிகர் வினய்

’சன்னி லியோன் என் படத்தில் நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..!’’ - கலகலக்கும் நடிகர் வினய்
’சன்னி லியோன் என் படத்தில் நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்..!’’ - கலகலக்கும் நடிகர் வினய்

கணியன் பூங்குன்றனாக விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'துப்பறிவாளன்'. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மேக்கிங் வீடியோ மற்றும் டீசர், படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் நிலையில், "இந்தப் படத்தில் இரண்டு சைக்கோக்கள் சேர்ந்து ஒன்றாகப் பணிபுரிந்திருக்கிறோம்' என்று நேற்று நடந்த துப்பறிவாளன் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் கூறினார். 

இந்தப் படத்தில் விஷால் தவிர, நடிகர் பிரசன்னா மற்றும் வினய் நடித்துள்ளனர். படத்தில் இருக்கும் சுவாரஸ்யத்தைத் தெரிந்துகொள்ள, நடிகர் வினயைத் தொடர்புகொண்டோம். ''ஏதோ ஒரு ஹாலிடேக்குப் போன மாதிரிதான் இந்தப் படத்தில் வொர்க் பண்ணினேன். 'உன்னாலே உன்னாலே' படத்துக்குப் பிறகு, ரொமான்டிக் கதையாக என்னைத் தேடி வந்தது. 'அரண்மனை' படத்துக்குப் பிறகு, ஹாரர் கதையாக வந்தது. 'என்றென்றும் புன்னகை' படத்துக்குப் பிறகு, காமெடி கதையாக வந்தது. ஆனால், 'துப்பறிவாளன்' படத்துக்குப் பிறகு எந்தமாதிரி கதை வரும் என்று நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. மிஷ்கின் கூட வொர்க் பண்ணணும்னு நீண்ட நாள் ஆசை. அது, இந்தப் படத்தில் நடந்திருக்கு. என் கேரக்டர் இந்தப் படத்தில் செம சஸ்பென்ஸாக இருக்கும்.

படத்தில் நடிச்ச எல்லோருக்கும் நல்ல ஸ்கோப் இருக்கும். இந்தப் படத்தில் என் கேரக்டர் பெயர்கூட எனக்கு தெரியாது. அதே மாதிரி, இந்தப் படத்தில் விஷாலுக்கு எந்த மாதிரியான கேரக்டர் என்று எனக்குத் தெரியாது. நானும் விஷாலும் சேர்ந்து நடிக்கிற மாதிரி எந்தக் காட்சியும் படத்தில் இல்ல. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு எந்த மாதிரியான சஸ்பென்ஸ் இருக்குமோ, அதே மாதிரிதான் எனக்கும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான கதை’’ என்றவரிடம், ‘உங்கள் அடுத்த படம் 'நேத்ரா'வில் சன்னி லியோன் நடிப்பதாக ஒரு தகவல் வந்ததே’ என்று கேட்டதற்கு, ''ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கடேஷ்தான் இந்தப் படத்தின் இயக்குநர். இதுவும் ஒரு சஸ்பென்ஸ் கதைதான். ஆனால், சத்தியமா படத்தில் சன்னி லியோன் நடிக்கிறாங்களான்னு தெரியாது. நடிச்சா நல்லாதான் இருக்கும்'' என்று கலகலப்பாக முடித்தார் வினய்.