ஓவியா, ஓவியா... இந்திய ட்ரெண்டிங்கில் `பிக் பாஸ்' ப்ரெட்டி கேர்ள்! #SaveOviya

`பிக் பாஸ்' நிகழ்ச்சியால் `ஓவியா ஃபீவர்' தமிழ்நாட்டையே பிடித்து ஆட்டுகிறது. இதை அந்த டிவி-யும் நன்கு புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப அன்றை நிகழ்ச்சிக்கான டீஸர்களை கட்செய்து வெளியிடுகிறது. ட்விட்டரில் `பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ'வுக்கான தனிக்கணக்கு வைத்திருந்தாலும், அந்த டிவி-யின் பெயரில் இருக்கும் கணக்கிலிருந்து அன்றாடம் டீஸர்களை வெளியிட்டுவருகிறது. 

#SaveOviya

அந்த வீட்டுக்குள் இருப்பவர்களிடையே தினமும் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு வருவதால், அங்கு நடக்கும் எந்த ஓர் அதிர்ச்சியான சூழலுக்கும் தமிழ் மக்கள் உடனே எதிர்வினையாற்றுகிறார்கள். நேற்றைய `பிக் பாஸ்' நிகழ்வில் உடல் நலமில்லாமல்போன ஜூலியுடன் கருணையும் வாஞ்சையுமாக நடந்துகொண்டார் ஓவியா. ஆனால், அவரையே குறை சொன்ன ஜூலியைக் கடுமையாகத் திட்டித்தீர்த்தனர் சோஷியல் மீடியா மக்கள். இப்படித் திட்டுபவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு முறை அந்த ஷோ மறுஒளிபரப்பு செய்யப்படும்போதும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. 

இப்படியான சூழல் நிலவிவரும் நிலையில், இன்று ஒளிபரப்பாக இருக்கும் `பிக் பாஸ்' நிகழ்வில் மற்ற போட்டியாளர்கள் ஒன்றுசேர்ந்து செய்யும் டார்ச்சரால் ஓவியா கண்ணீர் சிந்தும் காட்சிகள் டீஸராக வெளியானது. ஏற்கெனவே `ஓவியன்ஸ்' `ஓவியா ஆர்மி'  `நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்கிற பெயர்களில் ஃபேஸ்புக் பேஜ்கள் தொடங்கப்பட்டு அவருக்கு தினமும் ஓட்டு போட பிரசாரம் செய்துவருகின்றனர். இப்படி அவருக்கு தமிழக இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை ஆதரவு உள்ள நிலையில், அவர் கண் கலங்கும் காட்சிகள் அதிர்ச்சியைக் கிளப்பின. ட்விட்டர் மக்கள் `#SaveOviya என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் அவருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவுசெய்தனர். இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில்  டிரண்டானது. அரசியல்ரீதியான பல்வேறு முக்கியக் கருத்துகள் டிரண்டாகி வந்த நிலையில், இந்த ஹேஷ்டேக் வட இந்தியர்களைக் குழப்பியது; மலையாளிகளைப் புன்னகை பூக்கச்செய்தது.  

ஓவியாவுக்கு இந்த அளவுக்கு ஆதரவு எழக்காரணம், அவரின் அட்டகாச லைஃப் ஸ்டைல். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் புன்னகையுடன் எதிர்கொள்கிறார். அவரைச் சுற்றி உள்ள நபர்கள் அவருக்கு எதிராகச் செய்யும் எந்தச் சதியையும்  ஓர் அலட்சியப் புன்னகையுடன் கடந்து செல்கிறார். யதார்த்தத்தில் அந்த வீட்டுக்குள் ஒரு நம்பிக்கையான ஒருவர்கூட இல்லாமல் தனித்து நிற்கிறார். இதே போன்ற ஒரு சூழல் பரணிக்கு ஏற்பட்டபோது, ஏறிக் குதித்து அந்த இடத்தைவிட்டு தப்பிக்கப் பார்த்தார் பரணி. பிறகு அவராகவே வெளியேறிவிட்டார். ஆனால், இரும்பில் செய்த இதயத்துடன் உடனிருந்து துரோகம் செய்யும் நபர்களையும், எரிந்து விழுங்கும் எதிரிகளையும் தனி ஆளாக எதிர்கொள்ளும் ஓவியா, இயற்கையாகவே நம்மை ரசிக்கவைக்கிறார். ஓவியாவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய செய்திகள் நிறையவே இருக்கின்றன. இத்தனை வாரங்களில் ஓவியாவிடமிருந்து நாம் அறிந்துகொண்டது, யார் வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினாலும் அவர்களுக்கு உளப்பூர்வமாக அன்புடன் அணுகி ஆறுதல் சொல்வது ஓவியா ஒருவராகத்தான் உள்ளார். என்னதான் ஜூலி, காயத்ரியின் கருணைக்கு ஏங்கினாலும் இன்று வரை அவர் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. தன் சுயமரியாதையை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காத வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடும் ஓவியாவின் பெயர் டிரண்டாவதில் ஆச்சர்யம் என்ன?

ஓவியாவுக்கு ஆதரவாகப் பொங்கிய ட்விட்டர் மக்களின் ரியாக்‌ஷன்ஸ் கீழே...

 

 

#SaveOviya ஓவியா

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!