
'ச்சும்மா பறந்து பறந்து அடிப்போம்ல?’
ஃபாரின் ஃபைட் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை அமைக்க, 'ச்சும்மா பறந்து பறந்து அடிப்போம்ல?’ என ஆக்ஷன் காட்டி வருகிறார் ரஜினி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இடம்: ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டி. படம்: 'லிங்கா’.
டாக்டர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே 'லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினியைக் கலந்துகொள்ளச் சொல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஆனாலும் என்ன? ரஜினி 1 மணி நேரம் அடிச்சா... அது 100 மணி நேரம் அடிச்ச மாதிரி!


'பூனைக்கண்’ திறந்தது!
வெண்டை விரல் நீட்டி, வெல்கம் செய்யும் எமி ஜாக்ஸன், செயின் ஸ்மோக் குயின் என்பது நெருக்கமானவர்கள் அறிந்த சங்கதி. கேரவனில் பாக்கெட் பாக்கெட்டாக காலியாக்கி பக்கெட்டில் போட்ட எமி, இப்போது நோ ஸ்மோக் கட்சி. 'ஐ’ படத்தில் நடித்தபோது, ஆரோக்கிய பேணல் குறித்து விக்ரம் எடுத்த க்ளாஸ், எமியின் பூனைக் கண்ணைத் திறந்துவிட்டதாம்.

கழுத்தில் கத்தி?
பிரச்னை எப்போதும் பீடி பிடித்தபடி முருகதாஸ் முகத்தில்தான் புகையை ஊதும் போல. 'துப்பாக்கி’யின்போது 'கள்ளத் துப்பாக்கி’ படக்குழுவினர், நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்தனர். இப்போது 'கத்தி’ படத்துக்கும் 'இந்த டைட்டிலை நாங்க ஏற்கெனவே வைத்து இருக்கோம்’ என்று முருகதாஸ் கழுத்தில் கத்திவைத்து இருக்கிறார்கள். இதற்கிடையில் படத் தயாரிப்பாளர் பற்றிய சர்ச்சை தீ, ஈராக் பெட்ரோல் கிணறாகப் பற்றி எரிகிறது.

ஹாட் ஸ்பாட்...
புளிப்பு மிட்டாய் புன்னகை நடிகை, கரம்பிடிக்க இருந்த நடிகரை சகட்டுமேனிக்கு வெறுப்பேற்றுகிறாராம். ''என்னோட நடிச்ச நடிகர்கள்லேயே சிவ நடிகர்தான் சூப்பர்மேன்’ என்று சமீபத்தில் புகழ்ந்து தள்ள, விஷயத்தைக் கேள்விப்பட்டு நடிகரின் காதுகளில் புகை வர, தனது நண்பரிடம் நடிகையுடன் சுற்றிய இடங்களை போட்டோ ஆதாரத்துடன் பட்டியல் போட்டுக் காட்டினாராம்.

சாதியா... நீதியா?
'ராமனுஜன்’ படத்தை இயக்கிவரும் ஞான.ராஜசேகரனுக்குப் புதுவிதமான தொல்லை. தங்கள் சாதியில் சாதித்தவர்களைத் திரைப்படமாக இயக்கி தரச்சொல்லி சிலர் கேட்க, 'நான் சாதிக்குப் படம் எடுக்குறவன் இல்லை; நீதிக்கு எடுக்குறவன்’ என்று சொல்லிவிட்டாராம் ஞான.ராஜசேகரன்.

மீண்டும் ஜோதிகா!
தனது 2டி நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குவதற்காக பாண்டிராஜுக்கு சூர்யா அட்வான்ஸ் கொடுக்க, பாண்டி வெரி ஹேப்பி. 'பசங்க’ பட பாணியில் 10 சிறுவர்களை மையமாக வைத்து சுற்றிச் சுழலும் படத்தில், ஜோதிகா நடிப்பது சர்ப்பிரைஸ் ஷாக்! சிறுவர்களில் ஒருவராக முக்கியமான ரோலில் சூர்யாவின் மகள் தியா நடிக்கிறார்.