Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்

எச்சில் இலை சோறு!

 'தொட்டால் தொடரும்’ பட விழாவில் ''நடிகர்களுக்குக் கதை அறிவு இல்லை. கோடிகளில் மட்டும் குறி! பெரிய நடிகர்கள் கால்ஷீட்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பா​ளர்கள், எச்சில் இலை சோறு சாப்பிடுபவர்களுக்கு சமம்'' என்று கேயார் கேலி செய்தார். கொந்தளித்த நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு எதிராகக் கச்சைக்கட்டி கிளம்பியி​ருக்​கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

மஞ்சுவின் வார்!

காவ்யா மாதவனோடு மலையாள நடிகர் திலீப் அங்க ராட்டினம் ஆடி வருவதால், அவரது மனைவி மஞ்சுவாரியருக்கு கடுங்கோபம். விவாகரத்துக் கேட்டு கோர்ட் படிக்கட்டில் நிற்கிறார். மலையாள படத்தில் நடித்துவரும் மஞ்சுவுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்துக் குதூகலம் அடைவது திலீப்பின் வாடிக்கை. மெயின் ரோலில் மஞ்சுவாரியர் நடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாள படம் வெளிவராமல் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முட்டுக்கட்டை போட்டார் திலீப். தடைகளை உடைத்து வெளியான 'ஹவ் ஓல்டு ஆர் யூ’  சூப்பர் டூப்பர் ஹிட். மஞ்சுவின் இந்த மகா வெற்றியால் உள்ளி மூக்கு உடைந்த திலீப், கடுகடுப்பில் தனக்கு சப்போர்ட்டாக சல்பேட்டாவை உள்ளே தள்ளிக்கொண்டு இருக்கிறார்.

 குஷ்புவின் டான்ஸ்

மிஸ்டர் மியாவ்

 தி.மு.க-வில் இருந்து விலகிய குஷ்பு கனடா பறந்தார். அங்கே டொரன்டோவில் நடந்த  பள்ளி விழாவில் செமத்தியான டான்ஸ் ஆடியிருக்கிறார், குஷ்பு. தி.மு.க-வில் நடக்கும் குழப்பங்களை நினைத்து குஷியில் டான்ஸ் ஆடவில்லை என்று சூடம் ஏற்றாமல் சத்தியம் செய்கிறார், குஷ்பு!    

எனக்கு என்ன கதி?

ராம.நாராயணனுக்கு நடந்த இரங்கல் நிகழ்ச்சியில் சொற்ப நபர்களே ஆஜர்! அவர் அறிமுகம் செய்த அர்ஜுன், ராமராஜன் ஆப்சென்ட். ''அஞ்சு வருஷம் சினிமாவை வாழ வெச்சவருக்கே கூட்டம் வரலை. தினம் ரெண்டு சினிமாகாரரைத் திட்டறேன். நான் செத்தா யாருமே வரமாட்டாங்க போலிருக்கு'' என்று ஆதங்கப்பட்டார் கே.ராஜன்.

மிஸ்டர் மியாவ்

 வழக்கமாக இயக்குநர் எடுக்கும் புதுப்படம் கலெக்ஷனில் கல்லாவை நிரப்பினால், அகமகிழ்ந்து புது கார் பரிசாகக் கொடுப்பது கோடம்பாக்க ஹாபி. அரபுக்குதிரையாய் ஆல வட்டம் போடும் மங்களகர நடிகைக்கு இப்போதைக்கு மார்க்கெட் அம்பேல். இருந்தும், நடிகையின் அழகில் கிறங்கிய பிரபல நிறுவனம்,  நடிகைக்கு பி.எம்.டபிள்யூ காரைப் பரிசாகக் கொடுத்து பல் இளித்ததாம்.