Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்

ரஜினி போட்ட கையெழுத்து!

 ரஜினி இளமை ப்ளஸ் ஹெல்த்தியாக இருந்தபோது மூன்று வருஷத்துக்கு ஒரு முறை முகம் காட்டினார். இப்போது 'லிங்கா’ முடியவில்லை அதற்குள் ஷங்கரின் 'எந்திரன்-2’ படத்தில் நடிக்கத் தயராகிவிட்டார். 315 கோடி பட்ஜெட்டில் 'எந்திரன்-2’ படத்தை தயாரிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். நீண்ட வருஷத்துக்குப் பிறகு ரஜினி டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கிறார்! அந்த இன்னொருவர் அமீர்கான். ஷங்கருக்கு ராசியான கடந்த 8-ம் தேதி 'எந்திரன்-2’ புராஜக்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டார் ரஜினி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் தாத்தா!

'மஞ்சப்பை’ படத்தின் வெற்றியால் அடுத்த படத்திலும் ராஜ்கிரணுக்கு தாத்தா வேஷம் தருகிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி. புதுப்படத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக ராஜ்கிரண் நடிக்க 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்

அலட்டாத அஞ்சலி!

கில்டு அமைப்பின் கிடுக்கிப்பிடி, களஞ்சியத்தின் கடுகடு மிரட்டல், இரண்டும் அஞ்சலி முன்னால் அம்பேல்! சென்னையில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் படப்பிடிப்பில் அஞ்சலிக்கு ஐந்து பேர் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். இரவில் தங்கியுள்ள ஹோட்டல் வாசலிலும் காவல் தொடர்கிறது!

பரம்பரை பழக்கம்!

தாத்தா சிவாஜி, அப்பா பிரபுவைப்போல் பங்ச்சுவாலிட்டியை பக்காவாக கீப்-அப் செய்கிறார் விக்ரம் பிரபு! அப்பா கார்த்திக்கைப்போல் ஷ§ட்டிங்குக்கு சொன்ன நேரத்துக்கு வராமல் சொதப்புகிறார் கௌதம் கார்த்திக். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்... பரம்பரை பழக்கம் ஷூட்டிங் வரைக்கும்!

மிஸ்டர் மியாவ்

சண்டிக்குதிரை ராய்!

'இரும்புக்குதிரை’ படத்தில் பைக்தான் பிரதான ஹீரோ! லட்சுமிராய், சண்டிக்குதிரை. அதர்வா, ப்ரியா ஆனந்துக்கு மட்டுமல்ல... சண்டிக்குதிரையாய் திமுதிமுவெனத் திமுறும் ராய்க்கு பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தது, பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா. முக்கியமான வேஷத்தில் அலிஷாவையும் நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் போஸ்.