Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பொன்.விமலா

தீயாக ஒரு வீடியோ?

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பிரபல ஹாலிவுட் நடிகை 30 வயது ஏஞ்சலீனா ஜோலி பற்றிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாக பரவிக்கொண்டே இருக்கிறது. இளம்வயதில் 'டிரக் அடிக்ட்' எனும் நிலையிலிருந்த ஏஞ்சலீனா... போன் போட்டு தன் தந்தையைத் திட்டித் தீர்க்கும் காட்சிகள்தான் இந்த வீடியோவில் இடம்பிடித்துள்ளன. ஒரு பெண்ணின் பர்சனலான இந்த விஷயங்களை எல்லாம் எதற்காக இப்படி தீயாகப் பரப்புகிறார்களோ தெரியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏஞ்சலீனாவோ தான் ஏற்றுக்கொண்டிருக்கும் உலக அகதிகள் நலனுக்கான நல்லெண்ண தூதர் பணியில் தீவிரமாக இருக்கிறார். கூடவே, கேன்சருக்கு எதிரான இயக்கங்களிலும் ஆர்வம் காட்டிவருகிறார்.

ஒருமுறை 'ஆஸ்கர்’ விருது, மூன்று முறை 'கோல்டன் குளோப்’ விருது என அசத்தியிருக்கும் ஏஞ்சலீனா, பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதல் திருமணம் செய்தவர். இந்தத் தம்பதிக்கு 6 குழந்தைகள். இதில் மூன்று குழந்தைகள்... தத்தெடுக்கப்பட்டவை!

ஒப்பந்தத் திருமணம்!

செரில் ஸேண்ட்பெர்க்... உலக இணையதள வரலாற்றில் வியப்போடு உற்று நோக்கப்படும் பெண்! அமெரிக்காவின் வாஷிங்டன்னைச் சேர்ந்த இந்த 44 வயதுப் பெண், உலகமே மயங்கிக் கிடக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. உலக அளவிலான சோஷியல் நெட்வொர்க்கிங் இணைய தளங் கள் பலவும், நினைத்துப் பார்க்க முடியாத பெரும் தொகை யோடு இவரை தங்கள் பக்கம் இழுக்க வலை விரித்த படியே இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால், இவரோ... ஒரு பெண்ணியப் போராளியாக தான் அடையாளப்படுத்தப்படுவதையே பெரிதும் விரும்புகிறார் என்பது ஆச்சர்யமே! இவர் எழுதிய, (Lean In: women, work and the will to lead) என்ற புத்தகம் கடந்த ஆண்டின் பெஸ்ட் செல்லராக விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இவர், தன் சம்பாத்தியத் தில் பாதியை சமூக நலப்பணிக்களுக்காக செலவிடுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

'ஷேர்டு ஏர்னிங்/ஷேர்டு பேரன்ட்டிங்' என்கிற வகையில் குடும்ப வருமானம் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்த அடிப்படையில், டேவிட் கோல்டுபெர்க்கை திருமணம் செய்திருப்பவர் இந்த செரில்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

'பாபி ஜாசூஸ்’ வித்யா!

''ஒரு நடிகைக்குத் திருமணமாகிவிட்டால், அவள் கர்ப்பமாக இருக்கிறாளா என்பது பற்றியே இங்கே பேசுகிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த பத்து மாதங்களாக வந்துகொண்டிருக்கும் வதந்திகளால் சலிப்படைந்துவிட்டேன். ஓர் ஆண் நடிகரிடம் சென்று, 'உங்கள் மனைவியை எப்போது கர்ப்பமாக்கப் போகிறீர்கள்?' என்று யாரும் கேட்பதில்லை''

- இப்படி ஃபேஸ்புக் பக்கத்தில் கொந்தளித்து தீர்த்திருக்கிறார் வித்யா பாலன்.

பாலிவுட் மற்றும் விளம்பரப் படங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் வித்யா பாலன், கேரளத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். முதன் முதலாக மோகன்லாலுடன் இணைந்து 'சக்கரம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படம் கைவிடப்பட்டுவிட்டது. பிறகு, தமிழில் 'ரன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், முதல்கட்ட படப்பிடிப்போடு வெளியேற்றப்பட்டுவிட்டார். பிறகு, ஸ்ரீகாந்த்துடன் 'மனசெல்லாம்' படத்துக்கு ஒப்பந்தமானார். இதிலிருந்து நீக்கப்பட்டார். இந்த ஏமாற்றங்கள் தந்த வேகம்தானோ என்னவோ... இந்தி திரையுலகில் கால்பதித்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'பாபி ஜாசூஸ்’ எனும் இந்தித் திரைப்டத்தில், துப்பறியும் நிபுணராக மாறுபட்ட பல்வேறு கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார் வித்யா பாலன். குறிப்பாக, பியூன் வேடத்திலும், பிச்சைக்காரன் வேடத்திலும் தத்ரூபமாக நடித்திருக்கிறார்!