Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்

விஷால் போட்ட பூஜை!

 'பூஜை’ பட ஷ§ட்டிங்குக்காக காரைக்குடியில் தங்கியிருக்கிறார் விஷால். லோக்கல் சேனல் ஒன்றில் 'வடகறி’ படம் ஒளிபரப்பாக... இரவோடு இரவாக காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுத்ததோடு, அந்த லோக்கல் சேனல் அலுவலகத்துக்கும் சென்று ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம். விஷயம் மேலிடத்துக்கும் போக, லோக்கல் சேனல்களைக் கண்காணிக்க போலீஸுக்கு உத்தரவு பறந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

த்ரிஷாவின் விருந்து!

ஹன்சிகா, சிம்பு காதல் முறிந்த அதே ஹோட்டலில் வைத்து த்ரிஷாவும், ராணாவும் கல்யாணத்துக்கான டிஷ்கஷனை நடத்தியிருக்கிறார்கள். இருவருக்கும் நெருக்கமான முக்கியமான சொந்தங்கள் 30-பேர் மட்டுமே அனுமதி. பங்கேற்றவர்களுக்குப் பார்ட்டியில் இரண்டு நிபந்தனைகள்...

1. செல்போன் சுவிட்ச்டு ஆஃப், 2. நோ கேமரா!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

பாடிகார்ட் பார்ட்டி!

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்னதான் உறவு? ''எங்கே போனாலும் நயன்தாரா என்னைத்தான் அழைச்சுட்டுப் போவார். அவரோட ட்ரீம்பாய் நான்தான்...'' என்று பூனைக் கண்ணைச் சிமிட்டுகிறார் ஆர்யா. இதுகுறித்து தாராவிடம் கேட்டால், ''ப்ச்... ஆர்யா என்னோட பாடிகார்ட் அம்புடுதேன்...'' என்று உதட்டைப் பிதுக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்

தவில் வித்வான் சசி!

புதுக்கோட்டை சமஸ்தான அரண்மனை, 'தாரை தப்பட்டை’ படத்தில் இடம்பெறுகிறது. பிராமண வேஷத்தில் பிரமாதம் காட்டிவருகிறார் சசிகுமார். தாடி, மீசை மிஸ்ஸிங். பெரும்பாலும் பிராமணர்கள் மிருதங்க வித்வானாக மிளிர்வார்கள். விதிவிலக்காக தவில் வித்வானாக சசி நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் ஸ்பார்ட்! 

மிஸ்டர் மியாவ்

முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு கார்டனில் ஆசிவாங்க போனார் பஞ்சாயத்து நடிகர். அங்கே நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்புகொள்ள உண்மை நிலைமையை வெளியில் சொல்ல முடியாமல் பரிதவித்து போனாராம் பஞ்சாயத்து.