Published:Updated:

'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா ..? - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்!

'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா ..? - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்!
'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா ..? - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்!

'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா ..? - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்!

தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக் பிக் பாஸும் ஓவியாவும் தான். ஓவியா ஆர்மிக்கு இப்போது ஆள் சேர்ப்பு முகாம் நடத்தினால் 100 % அட்டென்டன்ஸ் நிச்சயம். ஓவியாவின் நடவடிக்கைகளால் நெகிழும் ரசிகர்களே... ஓவியாவின் பிக் பாஸ் அத்தியாயத்தைப் பற்றிப் பார்ப்போம் வாங்க. 

இயற்பெயர் : ஹெலன் நெல்சன்
சொந்த ஊர் : கேரளா
பிறந்தது : ஏப்ரல் 29, 1991
படிச்சது : பி.ஏ 
பிடிச்சது : பிரியாணி

இவரைப் பற்றி :

ஹெலன், சற்குணம் இயக்கிய 'களவாணி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்குப் பின்பும் பல படங்களில் நடித்தவருக்கு 'பிக் பாஸ்- தமிழ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. பங்கேற்ற முதல் நாளிலேயே குருவிகளைப் பார்த்துத் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தது, பசிக்கிறதென பிக் பாஸிடம் வாழைப்பழம் கேட்டது என மக்கள் மனதில் இடம்பிடித்தார். மீம் மெட்டீரியலாக பிக் பாஸ் வீட்டில் குடியேறியவர் தனது சட்டத்தில் ஒருபோதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவராக, அடுத்தவர்களைப் பற்றிப் புறம் பேசாதவராக, தனது முடிவில் உறுதியானவராக, மற்றவர்களுக்கும் நம்பிக்கை தருபவராகத் தனது பிரத்யேகமான ஆட்டிட்யூடால் அமோக ஆதரவைப் பெற்றுத் தற்போது ஐ.நா.சபைத் தலைவ... (தொடர்ந்து வாசிக்க...) 

சாதனைகள் : 

குடியரசுத் தலைவர் தேர்தல், கதிராமங்கலம் விவகாரம், சசிகலாவுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பிரச்னை, நீட் தேர்வு விளைவுகள், கமல்ஹாசனின் அரசியல் பதிவுகள் என எல்லாவற்றையும் சற்றே ஓரங்கட்டிவிட்டு #SaveOviya ஹேஸ்டேக் போட்டுக் கொண்டிருந்தது மொத்தத் தமிழினமும். அந்த அளவுக்கு அம்மணி இப்போது ரசிகர்களின் மனதில் ஈஸி சேர் போட்டு அமர்ந்திருக்கிறார்.

கோபத்தில் கஞ்சா கருப்புவைப் பார்த்து ஓவியா சொன்ன 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க..!' எனும் வாக்கியம் காதல் மொழியாக மாறிப் பலரை உருக வைத்துக் கொண்டிருக்கிறது. ஓவியாவின் பெயரில் தொடங்கப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு ஃபாலோயர்ஸ் குவிகிறார்களாம். பிக் பாஸ் ஓவியாவைக் காப்பாற்ற ஓட்டுப்போடச் சொன்னால் கோடிக்கணக்கில் வாக்களித்து அமோக ஆதரவு தரும் ரசிகர்களைப் பெற்றதும் அசகாய சாதனை.  'பிக் பாஸ்' ப்ரொமோவில் ஓவியா சிரித்தால் ஹார்ட்டின் எமோஜிகள் பறக்கின்றன. கண் கலங்கினால் கோப ரியாக்‌ஷன்ஸ் தெறிக்கின்றன. கமென்ட்களில் ஓவியாவுக்குக் குவியும் ப்ரொபோசல்களை வாசித்தால் வாழ்நாளே முடிந்துவிடும் போல. அந்தளவுக்கு அவருக்குக் குவிகின்றன காதல் விண்ணப்பங்கள். ஓவியாவின் வசனங்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. 

கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கிடைக்காத வரவேற்பு இந்த நிகழ்ச்சியில் இவரது குணாதிசியத்திற்காகக் கிடைத்திருக்கிறது. ஓவியாவின் ஆட்டிட்யூட் தியரி வெகுவிரைவில் ஐ.ஐ.எம்-மின் மேலாண்மைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், குளிர்ந்துபோய்ச் சில்லறைகளைத் சிதற விடுகிறார்கள் ரசிகர்கள். 'அவரது ட்ரேட்மார்க் புன்னகையில் சிறிதளவு குறைந்தாலும் தீக்குளிப்போம்' எனப் போராட்டங்கள் நடந்தாலும் வியப்பதற்கொன்றுமில்லை. 

சோதனைகள் : 

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஒன்றுகூடி ஓவியாவை கார்னர் செய்தது. 

'பிக் பாஸ் தமிழ்' தொடங்கிய இரண்டாவது வாரத்திலிருந்து ஹவுஸ்மேட்களால் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வருவது. 

எப்போதும் கூலாக இருப்பவரைச் சீண்டி, கோபத்தில் கத்த வைப்பது, கண்கலங்க வைப்பது. 

பலம் : 

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. ஓவியா அழுவதுபோல வெளியான ப்ரொமோ வீடியோவைப் பார்த்தே பலர் வெகுண்டெழுந்து #SaveOviya ஹேஸ்டேக்கை ட்ரெண்டடிக்க வைத்தது. ஓவியாவைப் பாராட்டி மீம்ஸ்களும் ஷேர் ஆகின்றன. 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க...' வாக்கியம் 'பலூன்' படத்தின் ப்ரொமோவுக்காகப் பாடலாகிறதாம். திரையுலகைச் சேர்ந்த பலரும் ஓவியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இன்றைய தேதியில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர் வரை ஓவியாவின் ஆதரவு பெற்றவரே வெற்றிபெற முடியும் என்கிற நிலை நிலவுகிறதாம். கெத்து பேபி!


ஓவியா உதிர்த்த தத்துவ முத்துகள் (ஓவியாலஜி) :

* ஒரு தடவை, ஒரு விஷயத்துக்கு அழுதா, அப்புறம் அதுக்காக அழக் கூடாது.

* எல்லோருக்குள்ளேயும் சோகம் இருக்கத்தான் செய்யுது... அதை எல்லாம் வெளிக்காட்டியே  ஆகணுமா என்ன?

* சொல்றத சொல்றது மாதிரி சொன்னா எல்லோரும் கேட்பாங்க..!

* அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லிக் காயப்படுத்தணுமா?

* அவ உடம்புல உள்ள வலியை விட அவ மனசுல தான் நிறைய வலி இருக்கும். 

* திரும்பத் திரும்ப அழுதா சீன் போடுறேன்னு சொல்லுவாங்க..!

* உங்க பெயர் என்னால கெடக்கூடாதுன்னு நினைச்சேன்.

* எனக்கு யார் சப்போர்ட்டும் வேணாம் எனக்கு நானே சப்போர்ட் பண்ணிக்குவேன்..!

மேலும் பார்க்க : 

பிக் பாஸ் தமிழ் 
கோணக் கொண்டைக்காரி - பாடல் 
களவாணி - திரைப்படம் 

மேலும் படிக்க : 

ஓவியாலஜி - ஓவியாவின் வாழ்வியல் வழிமுறைகள் 
நூறு நாள் - நூறு வேதம்!
உங்களது டைம்லைன் 

இணைய : 

Oviya Army

அகில உலக ஓவியா ரசிகர் மன்றம். 

அடுத்த கட்டுரைக்கு